ஞாயிறு, 31 ஜனவரி, 2010

யாழ் நகரின் சொக்கட்டான் சந்தையும் குட்டுக்காய் மரமும் (பாகம் 5)

பழைய மாநகர சபை கட்டடம்

தந்தை செல்வநாயகம் தூபிக்கு முன்னால் தெற்குப் பக்கத்தில் பழைய மாநகர சபை முன்பு அமைந்திருந்தது. அது கோட்டை யுத்தத்தில் தரை மட்டமாகியது. கொழும்பு நகர சபைக்கு நிகரான கட்டடமாக இருந்த கட்டடம் அது. கம்பீரமான கட்டடம். இக்கட்டிடத்து முகப்பில் மேயர் அல்பிரெட் துரையப்பாவின் வெண்கலச் சிலை நிறுவப்பட்டிருந்தது. இக்கட்டிட த்தில் கேட்போர் கூடம் ஒன்றிருந்தது. மேல் நீதிமன்ற அமர்வுகள் இங்கேயே நிகழ்ந்தன. புகழ்பெற்ற கோகிலாம்பாள் கொலை வழக்கு இம்மண்டபத்தில்தான் நடந்தது.

சனி, 30 ஜனவரி, 2010

MGR

பாசமுள்ள சகோதரிகள்

உண்மையில் இந்த சகோதரிகளின் அன்பையும் பாசத்தையும் பார்க்கும்போது கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வருகின்றது. நீங்களும் ஒரு முறை பார்த்து உங்களின் கண்ணீரையும் சிந்திக்கொள்ளுங்கள்.

இப்படி என்னை பயமுறுத்தலாமா?

எங்கும் மேயலாம்

இதுதான் தமிழ் கலாச்சாரமா?

உயில் எழுதுவது எப்படி?

ஒருவர், தான் சம்பாதித்த சொத்துகளை, தன் இறப்புக்குப் பிறகு, தான் விரும்பும் நபர் அல்லது நபர்களுக்கு, எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் போய்ச் சேர்வதற்கு, சுய நினைவுடன் எழுதி வைக்கும் முக்கிய ஆவணம்தான் உயில் (விருப்ப ஆவணம்).
உயில் என்பதே உறவுகளைச் சிதறவிடாமல் பார்த்துக்கொள்ளும் கவசம்தான். அதைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கும் குடும்பங்களி
 ல் எந்தச் சிக்கலும் வருவதில்லை.

சாய்பாபாவின் மறுபக்கம்

உலகலாவிய ரீதியில் பல இலட்சம் பக்தர்களைக்கொண்ட சத்திய சாயிபாபாவின் திருவிளையாடல்கள் அனைத்தும் ஒரு மாயாஜால மந்திர தந்திரமேயொழிய அவர் ஒரு ஆண்டவனோ அல்லது ஆண்டவனின் அவதாரமோ கிடையாது என்பதனை BBC போதியளவு ஆதாரத்துடன் இந்த டொக்குமென்டரி (documentary film) படத்தினை வெளியிட்டுள்ளார்கள்.

அதுமட்டுமல்லாமல் அவரின் மறுபக்கத்தையும் வெளியிட்டு முகத்திரையை கிளித்துள்ளார்கள். இப்படிப்பட்டவரா இந்த பாபா என்று இப்படத்தின் மூலம் அவரை இணங்காண முடிந்தது. இவரை கைதுசெய்து இவரிடம் அகப்பட்டுள்ள சிறார்களை இன்னமும் இந்திய அரசு மீட்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.

இப்படத்தினை தந்தை பெரியார் திராவிடர்கழகம் தமிழில் மொழி பெயர்த்து தமிழிலேயே பார்க்ககூடியதாக செய்துள்ளார்கள். இப்படம் 3 பாகங்களைக்கொண்டது.

இப்படம் சுமார் 1 மணிநேரம்.

இப்படத்தினை பார்க்க விரும்புபவர்கள் இப்படியே இணையத்தில் பார்க்கலாம். பின்னர் பார்க்கவிரும்புபவர்கள் பின்வரும் லிங்குகளையும் Bookmark செய்து வைத்து பின்னர் பார்க்கலாம். இதுதான் அந்த லிங்குகள்

1) http://www.dailymotion.com/swf/x4y3iy
2) http://www.dailymotion.com/swf/x4y4n1
3) http://www.dailymotion.com/swf/x4y5vb

இப்படத்தினை டவுன்லோட் செய்து சிடியில் பதித்து உங்கள் டிவியில் பார்க்க விரும்புபவர்கள் பிவரும் லிங்குகளை பயன்படுத்தி டவுன்லோட் செய்துகொள்ளவும். டவுன்லோட் செய்ய youtube downloader ஐ பயன்படுத்தி டவுன்லோட் பண்ணி கொன்வேர்ட் பண்ணிக்கொள்ளவும். TV யில் பார்ப்பதற்கு மிகவும் தெளிவாக இருந்தது. நல்ல copy.

இதுதான் அந்த லிங்குகள்

http://www.dailymotion.com/video/x4y3iy_sai-baba-1_news
http://www.dailymotion.com/video/x4y4n1_sai-baba-2_news
http://www.dailymotion.com/video/x4y5vb_sai-baba-3_news

இப்படத்தினை தமிழ் மொழிபெயர்ப்பு இல்லாமல் BBC யினரின் ஆங்கில படப்பிரதியை பார்க்கவிரும்புபவர்கள் பின்வரும் லிங்கில் சென்று பாருங்கள் அல்லது டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். இதுதான் அந்த லிங்

http://video.google.com/videoplay?docid=-3767740320034777862

மற்றும் இப்படத்தின் BBCயின் முழு Transcript ஐயும் படித்துப்பார்க்க விரும்பினால் இங்கே கிளிக்பண்ணவும்.




கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்?

சில வேளைகளில் திடீரென கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும்.

சில வேளைகளில் திரையில Fatal error: the system has become unstable or is busy," it says. "Enter to return to Windows or press ControlAltDelete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications." என்ற செய்தி கிடைக்கும்.

குறட்டையை கட்டுப்படுத்த வருகிறது புதிய கருவி

குறட்டையை கட்டுப்படுத்த புதிய கருவி ஒன்றை பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தூங்கும் போது ஆண்கள் ஆனாலும் சரி, பெண்கள் ஆனாலும் சரி, ஒரு சிலரை தவிர மற்றவர்கள் அனைவருக்கும் குறட்டை வருவது வழக்கம்.
குறட்டை அவரவர் உடல் வாகுக்கு தகுந்தபடி இருக்கும். உடல் பருமனானவர்களுக்கு பொதுவாக குறட்டை சத்தம் அதிகமாக இருக்கும். ஒரு சிலர் விடும் குறட்டை சத்தத்தை பார்த்து வீட்டில் இருப்பவர்கள் தூங்க முடியாமல் வெளியில் செல்லவேண்டி வரும். இந்த நிலையை போக்க, பிரிட்டன் விஞ்ஞானிகள் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர். இது தற்கால விஞ்ஞானத்தில் ஒரு புரட்சி என்று கருதப்படுகிறது.

லண்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் தீப்பெட்டி போன்று ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளனர். இதை தூங்குபவர் மார்பில் பொருத்தும் போது, இதன் செயல்பாடுகள் இதய தசைகளை இயங்க செய்கிறது. அப்போது, இதயத்திலிருந்து வெளியேறும் காற்று எந்த தடையும் இன்றி வெளியேறுகிறது. இதனால், குறட்டை நின்றுபோகும். இதில், பொருத்தப்பட்டுள்ள சுவிட்ச் மூலம், நாம் படுக்கைக்கு செல்லும் போது ஆன் செய்தும், எழுந்திருக்கும் போது ஆப் செய்தும் வைத்துக் கொள்ளலாம்.

இந்த சாதனம் தற்போது பரிசோதனையில் இருந்து வருகிறது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதனால், தூக்கம் கெட்டு தவிக்கும் லட்சோப லட்ச மக்கள் பயன் பெறுவர்.

புகைத்தால் பார்வை பறிபோகும்

புகைத்தால் புற்றுநோய் மட்டுமல்ல பார்வையும் பறி போகிறதாம். சமீபத்திய ஆய்வின் எச்சரிக்கை இது.
தீய பழக் கங்கள் தீயைப்போல வேகமாகப் பரவுகின்றன. முலை முடுக்குகளிளெல்லாம் சிகரெட், பாக்கு வகைகள் விற்கும் பெட்டிக்கடை காட்சி அளிக்கின்றன. புகைப்பதால் ஏற்படும் தீமைகளும் நாம் அறியாதவைகள் இல்லை. இருந்தும் பலர் இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறார்கள் என்பதைத்தான் இவை காட்டுகின்றன.

புகைக்கும் பழக்கத்தால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பது பலருக்கும் தெரிந்ததுதான். ஆனால் பின்னாளில் பார்வையும் பறிபோகும் வாய்ப்பு இருக்கிறது என்கிறது புதிய ஆய்வு.

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக குழுவின் ஆய்வில் இது தெரியவந்துள்ளது. 2 ஆயிரம் முதாட்டிகளை ஆய்வு செய்தனர். (அங்கு ஆண்/பெண் பேதமில்லாமல் புகைப்பழக்கம் உண்டு) இவர்கள் 78 முதல் 83 வயதுக்கு உட்பட்டவர்கள்.
ஆய்வு முடிவில் புகைப்பழக்கம் உடையவர்களுக்கு வயதான பிறகு பார்வை இழக்கும் ஆபத்து உயர்ந்திருந்தது தெளிவானது. இவர்கள் ஏ.எம்.டி. என்ற பார்வைக்கோளாறால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

ஏ.எம்.டி. என்பது வயதானவர்களுக்கு ஏற்படும் பார்வைக் குறைபாடாகும். மாக்யுலா எனப்படும் பார்வை செல்கள் மீண்டும் உற்பத்தி ஆவது 70 வயதுக்கு மேல் குறைவதால் இந்த பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதில் புகைப்பழக்கம் உடையவர் களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

ஆய்வின்படி புகைப்பழக்கம் இல்லாதவர்களைவிட புகைப்பவர்களில் 11 சதவீதம் பேர் ஏ.எம்.டி. பாதிப்பால் பார்வை இழக்கிறார்கள்.

புகைப்பழக்கம் இருப்பவர்கள் 70 முதல் 80 வயதை கடக்கும்போது மற்றவர்களைவிட 5 மடங்கு வேகமாக ஏ.எம்.டி. பாதிப்புகள் ஏற்படுகிறது.
இத்தகைய கொடிய துன்பத்தைத் தரும் பழக்கத்தை ஆரம்பத்திலே கிள்ளி எறிவதுதான் சிறந்தது என்று டாக்டர்கள் மீண்டும் எச்சரிக்கை செய்கிறார்கள்.

பீர் குடித்தால் பெண்களுக்கு மார்பக புற்று நோய் வராது

பீர் குடிப்பது ஆண்களின் உடல் நலத்தை பாதிக்காது என்ற கருத்து நிலவுகிறது. தற்போது இது பெண்களின் உடல் நலத்துக்கும் நல்லது என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக தினமும் ஒரு கோப்பை பீர் அருந்தும் பெண்கள் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை ஜெர்மனியில் உள்ள ஹெய்டல் பர்க் கேன்சர் ஆய்வு மையம் நடத்தியுள்ளது. பீர் மதுபானத்தில் உள்ள சக்தி வாய்ந்த மூலக் கூறுகள் மார்பக புற்று நோயில் இருந்து பெண்களை காப்பாற்று வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக பீர் மது பானத்துக்கு மனமூட்டுவதற்காக ஒருவகை மலரை பயன்படுத்துவார்கள். அதில் உள்ள ஷான்தோகியூமோல் உடல் உறுப்பில் இருந்து டெஸ்போஸ்டெரோன் மற்றும் ஆஸ்ட்ரோஜெனை அதிக அளவில் சுரக்காமல் தடுக்கிறது.

அது பி.எஸ்.ஏ. என்ற புரோட்டீன் அதிக அளவில் உற்பத்தியாகாமல் தடுத்து நிறுத்துகிறது. அது மார்பக புற்று நோய் வராமல் பெண்களை பாதுகாக்கிறது. இந்த ஆய்வு தற்போதுதான் முதல் கட்டத்தில் உள்ளது. தொடர்ந்து நடைபெறும் ஆய்வின் மூலம் மார்பக புற்று நோய் மட்டுமின்றி புற்று நோய் வராமல் தடுக்க பீர் உதவும் என்று தெரிய வரும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பதட்டத்தை வெல்லப் பதினொரு வழிகள்

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று. ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும்.

எனவே பதட்டம் எதனால் உண்டாகிறது, அதனை எப்படித் தவிர்க்க
 லாம் என்று அறிய வேண்டும்.

அதிக வேலை முளையை பாதிக்குமாம்!

இன்றைய சமுதாயத்தில் சொந்தமாக தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி… அடுத்தவர்களிடம் வேலை பார்ப்பவர்களாக இருந்தாலும் சரி… குறிப்பிட்ட அளவில்தான் உழைக்க வேண்டும். வாழ்க்கையே உழைப்பு ஆனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
ஒரு வாரத்திற்கு 40 மணி நேரம்தான் உழைப்புக்கு செலவிட வேண்டும். உடல் உழைப்பை வெளிப்படுத்தி செய்யும் வேலையாக இருந்தாலும், சிந்தித்து செய்யும் வேலையாக இருந்தாலும் இந்த கால அளவை தாண்டி ஒருவர் வேலை செய்வது அவருக்கு நல்லதல்ல என்கிறது இந்த ஆய்வு.

வாரத்திற்கு 40 மணி நேரத்தையும் தாண்டி வேலை செய்தால், அதனால் ஏற்படும் பாதிப்பு உடனே தெரியாது என்று கூறியுள்ள ஆய்வை மேற்கொண்டவர்கள், நடுத்தர வயதை கடந்த பின்புதான் இந்த பாதிப்பு உங்களுக்கு தெரிய வரும். குறிப்பாக, முளையின் சுறுசுறுப்பு குறைய ஆரம்பிக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள்.

அவர்கள் மேலும் கூறும்போது, சாப்ட்வேர் நிறுவனங்களில் வாரத்திற்கு 5 நாட்கள் வேலை செய்பவர்கள் தினமும் 10 மணி நேரத்துக்கு குறையாமல் வேலை செய்கின்றனர். இதனால்தான் இவர்கள் எளிதில் சோர்வடைகின்றனர், மன அழுத்தத்துக்கும் ஆளாகின்றனர். அதில் இருந்து விடுபடத்தான் விடுமுறை நாட்களை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று கழிக்கின்றனர் என்றனர்.

நீங்களும் 40 மணி நேரத்தையும் தாண்டி, அலுவலகத்தையே கட்டி அழுபவர் என்றால் இப்போதே உஷாராகிவிடுங்கள். இல்லையென்றால்… பிரச்சினை உங்களுக்குத்தான்!

சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி?

அமெரிக்கா நாட்டில் 12 பேரில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு அல்லது சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட உபாதைகள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நம் நாட்டிலும் நிறையப் பேருக்கு சிறுநீரக வியாதிகள் இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர்.

ஆனால் சிறுநீரக வியாதிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் அவற்றை குணப்படுத்துவதும் அல்லது கட்டுப்படுத்துவதும் மிக எளிது.

சிறுநீரக வியாதி இல்லையா என்பதை ஒருவர் எவ்வாறு கண்டறிவது?

இறந்த முதியவர் சவப்பெட்டியில் இருந்து மீண்டும் எழுந்தார்

போலந்து நாட்டில் உள்ள கடாவைஸ் என்ற இடத்தை சேர்ந்தவர் ஜோசப் கூசி (Jozef Guzy வயது 76) தேன் சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் வீட்டில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
உடனே அவருடைய மனைவி லுட்மிலா  (Ludmila) ஆம்புலன்சை வரவழைத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர் பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக கூறினார்.

பின்னர் ஜோசப் கூசி உடலில் வெள்ளை துணியை சுற்றி மனைவியிடம் டாக்டர்கள் ஒப்படைத்தனர். உடலை வீட்டுக்கு கொண்ட வந்ததம் சவப்பெட்டிக்குள் வைத்து இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன.

ஜோசப் அடைபட்டு இருந்த சவப்பெட்டி

அப்போது சவப்பெட்டிக்குள் இருந்து முனகல் சத்தம் வந்தது. எங்கிருந்து சத்தம் வருகிறது என்று தெரியாமல் அங்கு இருந்தவர்கள் சுற்றும் முற்றும் பார்த்தனர். அடுத்த வினாடியில் சவப்பெட்டியை தட்டும் சத்தம் கேட்டது.

அதிர்ச்சி அடைந்த அவர்கள் சவப்பெட்டியை திறந்து பார்த்தனர். ஜோசப் கூசி உயிருடன் எழுந்தார். தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் திகைத்த அவரிடம் நடந்த விஷயங்களை கூறினார்கள்.

பின்னர் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். சில மணி நேரத்துக்கு பிறகு ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்.

இதுபற்றி கூறிய ஜோசப் கூசி, நான் உயிர் பிழைத்தது ஒரு பானை தேனை சேகரித்து மகிழ்ச்சியுடன் திரும்பியது போல இருக்கிறது என்று வேடிக்கையாக கூறினார்.

இளைய தலைமுறைக்கு..!

-சிறிய விஷயங்களுக்குக் கூட நீங்கள் டென்ஷன் ஆகிறீர்களா?


- பிரச்சினையை சமாளிக்கத் தெரியாமல் அடிக்கடி சத்தம் போடுகிறீர்களா?


- எதற்கெடுத்தாலும் மூக்கு நுனியில் கோபத்தை கொண்டு வருகிறீர்களா?'

இத்தனைக்கும் ஆம் என்றால் முதலில் அவற்றை கைவிட முயற்சியுங்கள். இல்லாவிட்டால் இளம் வயதில்கூட `ஹார்ட் அட்டாக்' வரும் அபாயம் உள்ளது.

ஆத்திரப்படும் போது `ஸ்ட்ரெஸ்' அதிகமாகி ரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது. அட்ரினலின் சுரப்பி அதிக வேலை செய்கிறது. அதனால் இதய தசைகளுக்கு அதிக ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. அப்படி கிடைக்காதபோது `ப்ளேட்லெட்ஸ்' என்ற பிசுபிசுப்பான திரவம் சுரந்து, ரத்தக்குழாய்களில் படிந்து, அதில் அடைப்பை ஏற்படுத்துகிறது. அடைப்பு ஏற்படுவதால் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. அஞ்சைனா என்ற மார்பு வலி, ரத்தக் குழாயில் 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை அடைப்பு ஏற்பட்டால் வரும்.

உணவு மற்றும் பழக்க வழக்க முரண்பாடே இதய பாதிப்பிற்கு அடிப்படை காரணியாக இருக்கிறது. ஆனாலும், மன அழுத்தம் ஆகும்போதுதான் அதிக பாதிப்பு இதயத்தில் ஏற்படுகிறது. கொலஸ்ட்ரால் போன்றவற்றால் ரத்த அழுத்தம் ஏற்படுபவர்களைவிட ஆத்திரம் மற்றும் டென்ஷன் அடைபவர்களுக்குத் தான் மன அழுத்தம் அதிகம். மற்ற இதயநோயாளிகளை விட `டென்ஷன் பார்ட்டிகளை' நான்கு மடங்கு அதிகமாக இதயநோய் தாக்கும். அமைதியாக செயல்படுபவர்களுக்கு பொதுவாகவே எந்த உடல் பாதிப்பும் வருவதில்லை. அவர்களின் உணவு, பழக்க வழக்கங்களில் மாற்றம் இருந்தால் மட்டுமே பாதிப்பு ஏற்படும். ஆனால் எதற்கெடுத்தாலும் கோபப்படுவோருக்கு மன அழுத்தம் ஏற்பட்டு, பல நோய்களுக்கு அது திறவுகோலாகிறது. இளைய தலைமுறையினருக்கு அதிகளவில் இப்போது மன அழுத்தம் ஏற்படுவதாக தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் இளந்தலைமுறையினர் மன அழுத்தத்தை தவிர்த்து மகிழ்ச்சியுடன் வாழ முன்வர வேண்டும்.

ஞாபகமறதியை தீர்க்கும் செல்போன் கதிர்வீச்சு!

செல்போன், செல்போன் கோபுரம் ஆகியவற்றில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு ஆபத்தானது. இது மனிதர்களுக்கு சில வியாதிகளை ஏற்படுத்தும் என்று அவ்வப்போது செய்திகள் வருவதுண்டு.

ஆனால் செல்போன் கதிர்களால் ஞாபக மறதி வியாதிக்கு தீர்வு கிடைக்கும் என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. Alsheimer என்பது ஒரு ஞாபகமறதி வியாதியாகும். வயதானவுடன் தொற்றிக் கொள்ளும் ஞாபகமறதி இந்த வகையைச் சேர்ந்ததுதான்.

இதற்கு தீர்வு காணும் முயற்சியில், அமெரிக்காவின் தெற்கு புளோரிடா பல்கலைக்கழக அல்சீமர் நோய்த்தடுப்பு மையம் ஆய்வு நடத்தியது. எலிகளில் இந்த வித பாதிப்புகளை ஏற்படுத்தி பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன.

அப்போது எலெக்ட்ரோமேக்னடிக் முறையில் சோதனை செய்யப்பட்டபோது, அந்த கதிர்வீச்சு, ஞாபகமறதி வியாதியை குறைப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முறையில் பயன்படுத்தப்பட்ட கதிர்கள் செல்போனில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சில் அதிகம் இருக்கும். எனவே செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு இந்த ஞாபகமறதி வியாதி தாக்க வாய்ப்பு குறைவு என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

Amyloid Beta என்ற வேதிப்பொருள் குறைபாடுதான் Alsheimer ஞாபகமறதிக்கு காரணமாக இருக்கிறது.

செல்போனில் இருந்து வெளிப்படும் கதிர்கள், மூளைசெல்களை தூண்டுவதால் ஞாபகமறதி பாதிப்பு உடையவர் களுக்கு அல்சீமரில் இருந்து முன்னேற்றம் கிடைக்கிறது.

எலிகளுக்கு தினமும் ஒரு மணி நேரம் வீதம் சுமார் 9 மாதங்கள் கதிர்வீச்சு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது Alsheimer பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது. சித்தம் கலங்காத, நினைவுத்திறன் பாதிப்பு உடையவர்களுக்கு மட்டும் இந்த முறையில் தீர்வு கிடைக்கும். மனிதர்களுக்கும் இந்த முறையில் சிகிச்சை அளிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். பக்க விளைவுகள் பற்றிய விரிவான ஆய்வுகள் நடத்தப்பட உள்ளது.

"உண்மையாகவே இது வினோதமாக ஏற்படும் அதிசயிக்கத்தக்க மாற்றம்'' என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

தண்ணீருக்குள் குறிப்பெடுக்க...

Aqua Notes எனப்படும் `வாட்டர் புரூப் நோட்ஸ்' குறிப்பேடை குளியலறை முதல்கொண்டு எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். தண்ணீர் பட்டாலும் எழுத்துக்கள் அழியாது. பேப்பரும் கிழியாது. இதற்கான விசேஷ பேப்பர் மற்றும் பென்சில் தயாரிக்கப்பட்டு உள்ளது.

குளிர்பானத்தில் `சார்ஜ்' ஆகும் நொக்கியா செல்போன்!

செல்போன்களின் ஒரே பிரச்சினை அவற்றை ஞாபகமாக `சார்ஜ்' செய்வதுதான். தொடர் பயணம் மேற்கொள்ளும்போதும், மின் இணைப்பு இல்லாத வெளியிடங்களுக்குச் சுற்றுலா செல்லும்போதும் `சார்ஜ்' இறங்கி செல்போன் தற்காலிகமாக உயிரிழந்துவிட்டால் சிரமம்.

இந்தப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு சீனாவைச் சேர்ந்த ஒரு வடிவமைப்பாளர், குளிர்பானத்தில் `சார்ஜ்' ஆகிக்கொள்ளும் செல்போனை வடிவமைத்திருக்கிறார்.
சிறிய `பென் டார்ச்' போல உள்ள இந்த செல்போனின் பின்புறத்தில் இனிப்பூட்டிய ஏதாவது ஒரு குளிர்பானத்தைக் கொஞ்சம் ஊற்றினால் போதும். உடனே செல்போன் `உயிர்' பெற்றுவிடும்.

இந்த செல்போனை உருவாக்கிய வடிவமைப்பாளர் டெய்சி ஜெங்க், ``ஒரு தனியார் செல்போன் நிறுவனத்துக்காக இயற்கைக்கு உகந்த (ஈகோ பிரெண்ட்லி) இந்த செல்போனை உருவாக்கியிருக்கிறேன். நான் மேற்கொண்ட ஆய்வில், செல்போனுக்கான மின் ஆதாரமாக பேட்டரியைப் பயன்படுத்துவது மிகவும் செலவுமிக்கது, அவற்றை உருவாக்குவதற்கு மிகுந்த மூல ஆதாரம் தேவைப்படுகிறது என்று கண்டுபிடித்தேன். பேட்டரி தயாரிப்பு, காலாவதியான பேட்டரியை அழிப்பது ஆகியவற்றால் மிகுந்த சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. எனவேதான் இயற்கையான பேட்டரியாக குளிர்பானத்தில் செயல்படும் செல்போனை உருவாக்கினேன்'' என்று பெருமையோடு விளக்கிக் கூறுகிறார்.

வெள்ளி, 29 ஜனவரி, 2010

முஜிபுர் ரஹ்மான் கொலை குற்றவாளிகளுக்கு தாமத தண்டனை ஏன்?

வங்கதேசத்தை உருவாக்கிய முஜிபுர் ரஹ்மான் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ஐந்து முன்னாள் ராணுவ அதிகாரிகள் 27.01.2010 அன்று தூக்கிலிடப்பட்டனர். அவர் கொலை செய்யப்பட்டு 35 ஆண்டுகள் தாமதமாக நீதி கிடைத்தாலும் இந்தத் தீர்ப்பை அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.

"வங்க பந்து' என்று அழைக்கப்பட்ட முஜிபுர் ரஹ்மான், 1971ல் பாகிஸ்தானிடமிருந்து வங்கதேசத்தை மீட்டு தனி நாடாக்கினார். பின் அந்நாட்டின் அதிபர் ஆனார்.அதன்பின் நான்கு ஆண்டுகள் கழித்து, 1975, ஆகஸ்ட் 15ம் தேதியன்று ஜூனியர் ராணுவ அதிகாரிகள் மத்தியில் வெடித்த புரட்சியின் போது, அவரது மாளிகைக்குள் ஒரு கும்பல் புகுந்து முஜிபுர் ரஹ்மான், அவர் மனைவி, மூன்று மகன்கள், இரண்டு மருமகள்கள் உள்ளிட்ட 20 பேரை, சரமாரியாக சுட்டுக் கொன்றது.இச்சம்பவத்தின் போது ரஹ்மானின் மற்றொரு மகளான ஷேக் ஹசீனாவும், இளைய சகோதரி ஷேக் ரெகானாவும் வெளிநாட்டில் இருந்ததால் தப்பினர்.அதன் பின் அந்நாட்டில் அமைந்த அரசு, கலவரத்தில் ஈடுபட்ட அனைத்து ராணுவ அதிகாரிகளுக்கும் உயர்பதவி அளித்தது. சிலர், கட்சிகள் தொடங்கி நடத்தி வந்தனர். முஜிபுர் ரஹ்மானைக் கொலை செய்தவர்களுக்கு மன்னிப்பு அளிக்க வகை செய்யும் சட்டமும் கொண்டுவரப்பட்டது.அச்சட்டத்தின் கருணையால் குற்றவாளிகள் சுதந்திரமாக உலா வந்தனர். 1998ல் தாகா கோர்ட், முஜிபுர் கொலை வழக்கில் 15 பேரைக் குற்றவாளிகளாக அறிவித்தது. அவர்களில் நான்கு பேர் மட்டும் உள்நாட்டில் இருந்தனர். மற்றவர்கள் ஏற்கனவே வெளிநாடுகளுக்குத் தப்பியோடிவிட்டனர்.
Bangladesh's former prime minister and Awami League chief Sheikh Hasina Wajed (L) receives flowers from her sister Rehana (R) and Khadina Hussain (C), sister of Bangladesh's founding father Sheikh Mujibur Rahman, during a family meet at her residence in Dhaka.

இந்நிலையில், 2001ல் பேகம் கலீதா ஜியா ஆட்சி அமைந்தவுடன், பல்வேறு காரணங்களைக் கூறி வழக்கு இழுத்தடிக்கப்பட்டது. 2007ல் அதுவரை கிடப்பில் போடப்பட்ட வழக்குத் திரும்பவும் தூசி தட்டப்பட்டது. 2008ல் குற்றவாளிகளுள் ஒருவரை அமெரிக்கா, வங்கதேசத்திடம் ஒப்படைத்தது.இதற்கிடையில், 2009ல் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஐந்து முன்னாள் ராணுவ அதிகாரிகள், சுப்ரீம் கோர்ட்டில் செய்திருந்த மனுவை கோர்ட் நிராகரித்து விட்டது.இதையடுத்து, முஜிபுர் மகள் ஷேக் ஹசீனா, 2009 தேர்தலில் ஜெயித்து ஆட்சி அமைத்தார். வழக்கை விரைவுபடுத்தினார். நேற்று முன்தினம் குற்றவாளிகளின் மறுபரிசீலனை மனுவை மீண்டும் சுப்ரீம் கோர்ட் நிராகரித்த சில மணி நேரங்களில், முன்னாள் ராணுவ அதிகாரிகள் ஐந்து பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட ஜெயிலுக்கு முன் நூற்றுக்கணக்கான மக்கள் கூடி, தண்டனையை உடனே நிறைவேற்றும்படி கோஷமிட்டனர். தாகா மத்திய சிறை மற்றும் காசிம்பூர் சிறைகளைச் சேர்ந்த ஏழுபேர் கொண்ட குழு, தண்டனையை நிறைவேற்றியது.பின் ஐந்து ஆம்புலன்சுகளில் கொண்டு வரப்பட்ட உடல்கள், குற்றவாளிகளின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஒருநாட்டின் அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 35 ஆண்டுகளுக்குப் பின் தாமதமாக கிடைத்துள்ள நீதி பற்றி கருத்து கூறிய சில வக்கீல்களும் அரசியல் ஆய்வாளர்களும், "முஜிபுர் கொலை வழக்கில் தாமதமாக தண்டனை நிறைவேற்றப்பட்டாலும், இது நீதியிடம் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை தக்கவைத்துள்ளது. மேலும் சட்டத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் பலப்படுத்தியுள்ளது' என்று தெரிவித்தனர்.

வியாழன், 28 ஜனவரி, 2010

நெட்டில் அரட்டை

இன்றைய செய்தித்தாள்களில் பல மோசடிகள், குறிப்பாக பாலியல் மோசடிகள் குறித்துப் படிக்கையில் பலர் இன்டர்நெட் சாட் ரூமில் தொடங்கிய பழக்கமே குற்ற வலையில் விழ தொடக்கமாயிருந்தது என வாக்குமூலம் கொடுத்திருப்பதைப் படித்திருக்கலாம். இன்டர்நெட்டில் சாட் ரூம் வழியே அரட்டை அடிப்பதைப் பல பள்ளி சிறுவர்களும் கல்லூரி மாணவர்களும் ஒரு போதையான பழக்கம் போல கொண்டுள்ளனர். தாமாகச் சென்று விழுந்தவர்கள் சிலர்; ஆனால் பலரும் குறிப்பிட்ட சில கிரிமினல்களின் வலையில் விழுந்தவர்களாகவே இருப்பார்கள். காரணம், இவர்கள் சாட் அறையில் பாதுகாப்பு வழிகளைக் கடைப் பிடிக்காதவர்களாக இருந்திருப்பார்கள். இந்த வழிகள் என்னவென்று பார்க்கலாம்.

1.இணையத்தில் பல அபாயகரமான பேர்வழிகள் இருப்பார்கள். இவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது கடினம். எனவே எந்த சாட் அறையிலும் உங்கள் உண்மையான பெயர், பெயர் அடங்கிய இமெயில் முகவரி, போன் எண், முகவரி போன்றவற்றைத் தரக் கூடாது.

2. எந்த நிலையிலும் உங்களுடைய அன்றாட வாழ்க்கை முறையினைக் கூற வேண்டாம். இது கிரிமினல்களுக்கு உங்களை வலை விரித்துப் பிடிக்க நேரத்தைத் தந்துவிடும்.

3. கம்ப்யூட்டர் வழி பழக்கமாகும் நபர்களை நேரில் சந்திப்பதைத் தவிர்க்கவும். உங்களுடைய நிஜ வாழ்வும் இன்டர்நெட் வாழ்வும் வெவ்வேறு. எனவே தவிர்ப்பது நல்லது. இல்லை சந்திப்பது நல்லதுதான் என எண்ணினால் பலர் இருக்கும் இடத்தில் சந்திக்கவும். தனியே சந்திப்பதோ அல்லது இதுவரை செல்லாத தனி இடத்தில் சந்திப்பதோ கூடவே கூடாது.

4. அரட்டை அரங்கங்களில் செல்கையில் மாடரேட்டர் என பொதுவான ஒரு மானிட்டர் இருக்கும் அறையில் செல்லவும். இதனால் ஒருவர் மற்றொருவருக்கு விரிக்கும் வலை தெரிந்துவிடும். மேலும் உங்களிடமிருந்து தகவல்களைப் பெற்று அவர் சென்றுவிட முடியாது.

5. அரட்டை அடிக்கையில் எதிர் நபரிடமிருந்து ஏதேனும் இணைய தள முகவரி கிடைத்தால் அதனைக் கிளிக் செய்து திறக்க வேண்டாம். அதில் நிச்சயமாய் வைரஸ் இருக்கும் வாய்ப்புகள் உண்டு. 6. எந்த நிலையிலும் உங்கள் போட்டோவினை அரட்டையில் எதிரில் உள்ளவருக்கு அனுப்ப வேண்டாம். உங்களை அவர் அறிந்து கொள்ளும் வழி இருப்பதுடன் அதனை அவர் தவறான வழிகளில் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கிறது.

இன்டர்நெட் வழி சென்று அரட்டை அறைகளில் மற்றவருடன் பேசுவது நல்ல மகிழ்ச்சியான அனுபவத்தினை தரலாம். ஆனால் இதனை உங்களுக்கு மிகத் தெரிந்த நண்பர், உறவினர், உடன் பிறந்தவர் மற்றும் உடன் பணியாற்றுபவர்களுடன் வைத்துக் கொள்ளுங்களேன். புதிய நண்பர்களை அளவில் தூரத்திலேயே வைத்துக் கொள்ளுங்கள். மேலே சொன்னவை அனைவருக்கும் பொருந்தாது என்றாலும் ஆபத்தை தவிர்ப்பதற்கான வழிகளைத் தருகின்றன என்பது உண்மை.

இலவச மென்பொருட்கள்

1. இயர் பான் வியூ (Irfanview): இதனை http://www.irfanview.com/ என்ற இணையதளத்தில் பெறலாம். கிராபிக்ஸ் வியுவர் புரோகிராம். ஒரே கிளிக்கில் உங்கள் இமேஜ் பைல் மற்றும் பலவகையான டிஜிட்டல் வீடியோக்களைப் பார்க்க இது உதவும். இதனைப் பயன்படுத்தி பைல்களை வேறு பார்மட்டிற்கு மாற்றலாம். சிறிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். குறிப்புகளை எழுதலாம்.

2. ட்வீக் யு.ஐ (Tweak UI): : www.microsoft.com/windowsxp/downloads/powertoys/xppowertoys.mspx என்ற மைக்ரோசாப்ட் நிறுவன முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம். இதனை மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிகமாக பரிந்துரைக்காத போதும் இதனைப் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். பல பயன்பாடுகளுக்கு இது ஏற்றதாக உள்ளதால் இது இல்லை என்றால் சிலருக்குக் கம்ப்யூட்டர் இயக்குவது கடினமாகும். இதனை இறக்கிப் பதிந்து பின் இதன் பயன்பாடுகளின் பட்டியலைக் காணலாம்.

3.டபுள்கில்லர் (DoubleKiller) : கிடைக்கும் இணைய தள முகவரி: http://www.bigbangenterprises.%20de/en/doublekiller இதன் மேம்படுத்தப்பட்ட புரோகிராமை பணம் கட்டியும் வாங்கலாம். உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு பைலைப் பல இடங்களில் வைத்திருப்பீர்கள். குறிப்பாக சினிமா பாடல்களைப் பதிந்து வைத்துவிட்டு அவற்றை அவரவருக்கு குரூப் குரூப்பாக மீண்டும் இரண்டு முறையோ அல்லது பல முறையோ தனித்தனி போல்டர்களில் பதிந்து ஹார்ட் டிஸ்க்கின் இடத்தைக் காலி செய்திருப்பீர்கள். இத்தகைய டூப்ளிகேட் பைல்களை இனம் கண்டு உங்கள் அனுமதியுடன் இந்த புரோகிராம் அழித்துவிடும்.

4. எக்ஸ்புளோரர் எக்ஸ்பி (ExplorerXP) : http://www.explorerxp.com/ என்ற முகவரியில் கிடைக்கிறது. எக்ஸ்பி சிஸ்டத்தில்தான் இது இயங்கும். விண்டோஸ் எக்ஸ்புளோரர் தொகுப்பிற்கு மாற்றானது. இதனுடைய டேப்கள் தனி வகையானவை. இந்த சிறிய புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பைல்கள் மற்றும் போல்டர்களை அதன் அளவு மற்றும் பிற பண்புகளுடன் காட்டுகிறது.

5. பிரீ கமாண்டர் (FreeCommander): http://www.freecommander.com/ இணையதளத்தில் இதனைப் பெறலாம். இந்த சிறிய புரோகிராமினை உங்கள் யு.எஸ்.பி. டிரைவில் கூட எடுத்துச் செல்லலாம். எந்த கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தி அதில் உள்ள பைல்களைக் கையாளலாம்.

6. க்யூ டி டேப் பார் (QTTabBar): qttabbar.wikidot.com தளத்தில் கிடைக்கும் இந்த புரோகிராம் விண்டோஸ் எக்ஸ்புளோரரில் சில கூடுதல் பயன்பாடுகளைத் தருகிறது. டேப்கள் வழியே பைல்களைக் கையாளும் வசதியைத் தருகிறது. இந்த பயன்பாட்டுப் பைலை இறக்கி இன்ஸ்டால் செய்த பின்னர் எக்ஸ்புளோரர் சென்று டூல் பாரில் கிளிக் செய்து அதில் என்பதில் செக் செய்திடவும். அதில் உள்ள பட்டன் பார் உங்களுக்குக் கூடுதல் வசதிகள் தருவதனைக் காணலாம்.

7. டாஸ்க்பார் ஷபிள் 2.2 (Taskbar Shuffle 2.2) : www.freeweb.com/nerdcave/taskbarshuffle.htm என்ற தள முகவரியில் உள்ள இணையப் பக்கத்தில் இது கிடைக்கிறது. டாஸ்க் பாரில் நீங்கள் பயன்படுத்தும் பல புரோகிராம்கள் வரிசையாக இடம் பெற்றிருக்கும். ஓரிரு புரோகிராம்களை மட்டும் நீங்கள் அடுத்தடுத்து பயன்படுத்த விரும்புவீர்கள். ஆனால் ஒவ்வொன்றும் ஒரு கோடியில் இருக்கலாம். அடுத்தடுத்து இருந்தால் நல்லது என்று எண்ணுகிறீர்கள். எனவே டாஸ்க் பார் உங்களைக் கட்டுப்படுத்தாமல் நீங்கள் அதனைக் கட்டுப்படுத்த விரும்புகிறீர்கள். அப்படியானால் உங்களுக்கு இந்த புரோகிராம் அவசியம் தேவை. நீங்கள் விரும்பும் வகையில் இயங்கும் புரோகிராம்களின் பட்டன்களை அமைத்துக் கொள்ள உதவுகிறது. சில டாகுமெண்ட்களை இணைத்து ஒரே பட்டனில் அமைத்துக் கொள்ளவும் உதவுகிறது. இதன் சிறப்பு என்னவென்றால் விண்டோஸ் 95 தொகுப்பு முதல் அனைத்திலும் இது இயங்குகிறது.

8. பிடாஸ்சியோ (Pitaschio) : pitaschio.ara3.net முகவரியில் கிடைக்கும் இந்த புரோகிராம் உங்கள் ஒர்க்கிங் ஸ்டைலுக்கேற்ற வகையில் விண்டோஸைத் தருகிறது. இது விண்டோவை உங்கள் ட்ரேக்கு சுருக்குகிறது. அப்படியே இழுத்துச் செல்ல உதவுகிறது. சில குறிப்பிட்ட கீகளின் பயன்பாட்டை அந்த செயலிலிருந்து விலக்குகிறது. எடுத்துக்காட்டாக விண்டோஸ் கீயை செயல் இழக்கச் செய்கிறது. இதனால் தேவையில்லாமல் அதனை அழுத்தி ஸ்டார்ட் பட்டனை அழுத்திய நிலை ஏற்படாது அல்லவா? உங்கள் கீ போர்டை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்ற புள்ளி விபரத்தினைத் தருகிறது.

9. ரீசைஸ் எனேபில் (ResizeEnable) : கிடைக்கும் இணைய தள முகவரி: www.digitallis.co.uk/pc/downloads.html இயக்குவதற்கு எளிதானது. விண்டோவில் எழும்பி வரும் பாப் அப் விண்டோவின் அளவைக் குறைக்க நீட்ட இது உதவுகிறது. தேவை என்றால் நீட்டிக் கொள்ளலாம். இல்லை என்றால் குறைத்துக் கொள்ளலாம்.

10. ட்ரூ கிரிப்ட் (TrueCrypt) : பைல்களின் அளவைச் சுருக்கி விரித்துத்தான் பல புரோகிராம்கள் இயங்குகின்றன. அதே போல நீங்களும் உங்கள் பைல், போல்டர் ஏன் மொத்த டிரைவினையும் சுருக்கி வைத்துக் கொள்ள விரும்புகிறீர்களா? http://www.truecrypt.org/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்று இந்த புரோகிராமினை இறக்கிப் பதிந்து கொள்ளுங்கள். இதனைப் பயன்படுத்தி பிளாஷ் டிரைவில் உள்ள பைல்களையும் போல்டர்களையும் கூட சுருக்கி வைத்துக் கொள்ளலாம்.

11. டிபிராக்ளர் (Defraggler) : சிதறிய வகையில் ஹார்ட் டிஸ்க்கில் பதியப்பட்டிருக்கும் பைல்களைக் கூடுமானவரை ஒரே இடத்தில் பதிந்து வைக்கும் பணியே டிபிராக் எனப்படுவதாகும். துண்டு துண்டாக ஹார்ட் டிஸ்க்கில் இடம் பெற்றிருக்கும் பைல்களை ஒரே இடத்தில் பதிய வைப்பதால் கம்ப்யூட்டரின் சிபியூ அவற்றைத்தேடிப் படிக்கும் நேரம் குறைகிறது. இந்த வேலையை விண்டோஸ் சிஸ்டத்தில் உள்ள டிபிராக் பைல் யுடிலிட்டி மேற்கொள்கிறது. டிபிராக்ளர் தொகுப்பும் இந்த வேலையை மேற்கொள்கிறது. ஆனால் இதனைப் பயன்படுத்தி தனி ஒரு பைலையும் நாம் டிபிராக் செய்திட முடியும். அல்லது தொடர்புடைய பைல்களின் தொகுப்பினையும் மொத்தமாகத் தேர்ந்தெடுத்து டிபிராக் செய்திட முடியும். இந்த ஒரு பைலை பிளாஷ் டிரைவில் வைத்துக் கூட இயக்கலாம். இந்த பைல் கிடைக்கும் இணைய தளத்தின் முகவரி: http://www.defraggler.com/.

12. சிஸ்டம் ரெஸ்க்யூ சிடி: இந்த புரோகிராம் தரும் சிடி லினக்ஸ் சிஸ்டத்தை உங்கள் கம்ப்யூட்டருக்குப் பூட் செய்து தரும். ஒரு சிடியை லினக்ஸ் சிஸ்டம் தரக்கூடிய பூட்டபிள் டிஸ்க்காக மாற்றிக் கொண்டால் விண்டோஸ் சிஸ்டத்திற்கு என்ன பயன்? என்ற கேள்வி எழுகிறதா? உங்கள் விண்டோஸ் சிஸ்டம் கிராஷ் ஆகி கம்ப்யூட்டர் முன் நீங்கள் விழித்துக் கொண்டு கைகளைப் பிசைந்து கொண்டு இருக்கையில் இதனுடைய அருமை தெரியும். இதனை வைத்து பூட் செய்தால் கிடைக்கும் சிஸ்டம் கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து டிரைவ்களுக்கும் வழி காட்டுகிறது. நெட்வொர்க் டிரைவ்களுக்கும் இது வழி நடத்தும். எனவே உங்களுக்குப் பிரியமான கம்ப்யூட்டர் சரியான நேரத்தில் காலை வாரிவிடுகையில் இந்த புரோகிராம் சிடி உங்களுக்குக் கை கொடுத்து தூக்கிவிடும். இந்த புரோகிராம் கிடைக்கும் இணைய தளத்தின் முகவரி: http://www.sysresccd.org/

என்ன விபரம்? யார் பைலை எழுதியது?

உங்கள் வர்த்தக நிறுவனம் அல்லது அலுவலகத்தில் பல்வேறு எக்ஸெல் பைல்களை உருவாக்கிக் கையாண்டு வருவீர்கள். அலுவலக தகவல்களைப் பலர் பல நாட்களில் மாற்றியும் அதிகப்படுத்தியும் கையாளுவார்கள். இது பற்றிக் குறித்து வைத்திட பைல் புராபர்ட்டீஸ் என்று ஒரு விண்டோ ஒவ்வொரு பைலிலும் உள்ளது. இதில் பைல் குறித்த பல்வேறு தகவல்களைத் தர முடியும். பைலைக் கையாளும் ஒவ்வொருவரும் இதில் என்று யாரால் பைல் படிக்கப்பட்டது மற்றும் திருத்தப்பட்டது என எழுத முடியும்.

இதற்கு ஒரு பைலில் “File” மெனு கிளிக் செய்து அதில் வரும் “Properties" பிரிவைத் தேர்ந்தெடுத்தால் இந்த தகவல்களை உள்ளிட விண்டோ ஒன்று “Summary”, “Custom” போன்ற பல டேப்களுடன் கிடைக்கும். இதிலும் title, subject, author, manager, category, keywords, comments எனப் பல பிரிவுகள் இருக்கும். இதில் உள்ள பிரிவுகளின் அடிப்படையில் பைல் குறித்த தகவல்களை நீங்கள் உள்ளிடலாம்.

அது சரி! ஞாபகமாக ஒவ்வொரு முறையும் பைலினை எடிட் செய்து மூடுகையில் இந்த தகவல்களை உள்ளீடு செய்திட வேண்டுமே! நாம்தான் வேலை முடிந்த பின் பைலை மூடிச் செல்வதில் தானே கண்ணும் கருத்துமாக இருப்போம். நமக்கு யார் இதனை ஞாபகமூட் டும் வேலையை யார் செய்வார் கள்? என்று எண்ணுகிறீர்களா? கவலைப் படாதீர்கள். எக்ஸெல் ஒர்க்புக்கே செய்திடும்.


இதற்குக் கீழ்க்காணும் வழிகளில் செட் செய்திடவும்.


1 “Tools” மெனு கிளிக் செய்து அதில் “Options” பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.

2. இனி கிடைக்கும் “Options” என்னும் பல டேப்கள் அடங்கிய விண்டோவில் “General” என்னும் டேபில் கிளிக் செய்திடவும்.

3. இதில் “Prompt for workbook properties” என்னும் பிரிவில் செக் செய்திடவும்.

4. இதன்பின் ஓகே கிளிக் செய்து விண்டோவினை மூடவும். இனி ஒவ்வொரு முறை நீங்கள் எக்ஸெல் ஒர்க்புக் கினை சேவ் செய்து மூடப் போகையில் என்னங்க! பெர்சனல் தகவல்களைப் போடலியா?” என்று எக்ஸெல் உங்களுக்கு நினைவூட்டும். பைசாவிற்கும் ரூபாய்க்கும் இடையே புள்ளி எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் கரன்சியான ரூபாய் எவ்வளவு என்று குறிப்பிடுகையில் சரியாகக் கணக்கிடும் வகையில் பைசாவையும் சேர்த்துக் குறிப்பிடுவோம். ஆனால் ஒவ்வொரு முறையும் ரூபாய்க்கும் பைசாவிற்கு இடையே புள்ளி அமைப்பது சற்று சிரமமாக இருக்கும்.

இதனை எக்ஸெல் புரோகிராமே அமைக்கும்படி செட் செய்திடலாம். எப்படி என்று பார்ப்போமா! எடுத்துக் காட்டாக நீங்கள் பண மதிப்பைக் குறிப்பிடுகையில் ரூபாய் பைசா இணைந்த எண்ணை புள்ளி இடாமல் முதலில் அமைக்கவும். எடுத்துக் காட்டாக 11245, 2345, 5693, 236798 என அமைப்பதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் கீழ்க்காணும் முறையில் அமைத்துவிட்டால் இந்த எண்கள் 112.45, 23.45, 56.93, 2367.98 என அமைக்கப்படும்.


நீங்கள் செட் செய்திட வேண்டிய முறை:


1. “Tools மெனு கிளிக் செய்து அதில் “ “Options” பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.

2. இனி கிடைக்கும் “Options” என்னும் பல டேப்கள் அடங்கிய விண்டோவில் “Edit” என்னும் டேபில் கிளிக் செய்திடவும். இதில் “Fixed decimal” என்னும் பிரிவில் செக் செய்திடவும். இப்போது Places” என்னும் இடத்தின் முன்னால் “2” என அமைத்திடவும். பின் ஓகே கிளிக் செய்து விண்டோவை மூடவும்.

இனி நீங்கள் அமைத்திடும் எண்களின் இறுதி இரண்டு இலக்கங்களுக்கு முன்னால் புள்ளி தானே அமைக்கப்படும். இந்த செயல்பாடு தேவையில் லை என்றால் “Fixed decimal” என்னும் பிரிவின் முன் உள்ள டிக் அடையாளத்தை எடுத்து விடவும்.

RAM அண்ட் ROM வித்தியாசம்


கம்ப்யூட்டர் தன்னிடம் இடும் தகவல்களை 0 மற்றும் 1 என்ற இரு இலக்கங்களின் கூட்டு அமைப்பில்தான் நினைவில் கொள்கிறது. எனவே தான் இந்த இரண்டையும் பைனரி (இரண்டு) டிஜிட் (இலக்கங்கள்) என அழைக்கின்றனர். இந்த சொல்லின் சுருக்கமே பிட். இந்த இரு எண்கள் (பைனரி டிஜிட்கள்) மொத்தமாக எட்டுமுறை எழுதப்பட்ட கூட்டே ஒரு பைட். எனவே ஒரு பைட் என்பது எட்டு பைனரி டிஜிட் அடங்கிய ஒரு தொகுப்பு. கம்ப்யூட்டருக்கு ஒரு எழுத்து அல்லது எண்ணை எழுதி வைக்க ஒரு பைட் போதும். இப்படியே மொத்த மொத்தமாய் எழுதுகையில் 1024 பைட்கள் ஒரு கிலோ பைட் என்றும் (ஒரு கேபி) 1024 கிலோ பைட்கள் ஒரு மெகா பைட் (எம் பி) என்றும் 1024 மெகா பைட்கள் ஒரு கிகா பைட் என்றும் 1024 கிகா பைட்கள் ஒரு டெரா பைட் என்றும் அழைக்கப் படுகின்றன. இந்த பெருக்கம் குறித்து ஏற்கனவே இங்கு எழுதப்பட்டது. கம்ப்யூட்டர் பயன்பாட்டுக்கு வந்த புதிதில் ஒரு மெகா பைட் அளவிலான தகவல் தொகுப்பு அல்லது டிஸ்க்குகள் மிகப் பெரிதாக எண்ணப்பட்டன.

ஆனால் தொழில் நுட்பம் வளர்ந்த இந்த நாளில் கிகாபைட்கள் தூசியாய் எண்ணப்பட்டு டெராபைட் கள் சாதாரணமாய்ப் பேசப் படும் அளவிற்கு வந்துவிட்டன. என்ன வளர்ச்சி அடைந்தாலும் இன்னும் தகவல் நினைவகங்கள் (டேட்டா மெமரி) இதே அளவுகளில் தான் பேசப்படுகின்றன. கம்ப்யூட்டரில் மெமரி பல நிலைகளில் பல்வேறு பயன் பாடுகளில் உள்ளது. இவற்றில் RAM என்பது Random Access Memory என்பதன் சுருக்கம் ஆகும். கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் உறுப்பாக மதர்போர்டில் பதிந்தோ அல்லது வயர் மூலம் இணைக்கப்பட்டோ கிடைக்கிறது. கம்ப்யூட்டர் சரியாக இயங்கிட சில அடிப்படை புரோகிராம்களை இயக்கவும் சில கட்டளைகளைச் செயல்படுத்தவும் RAM பயன்படுகிறது. இந்த நினைவகம் கம்ப்யூட்டர் மின்சக்தியைப் பெற்ற பின்னரே செயல்படும். நாம் பயன்படுத்தும் புரோகிராம்கள் RAM மெமரியில் தற்காலிகமாக எழுதப்பட்டு இயக்கப்படுகின்றன.

RAM என்பதனை ஒரு பெரிய விளையாட்டு மைதானமாக எண்ணிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு புரோகிராமும் ஒரு குறிப் பிட்ட அளவு இடத்தை எடுத்துக் கொண்டு அங்கு இயங்குகின்றன. இந்த இடத்தில் ஒன்று அல்லது குறிப்பிட்ட அளவிலான புரோகிராம்களை எடுத்துக் கொள்ள முடியும். ஏனென்றால் RAM மெமரியின் அளவு வரையறை செய்யப்பட்டதே. ஒரு புரோகிராமினை நீங்கள் முடித்து மூடுகையில் அந்த புரோகிராம் RAM மெமரியில் இருந்து எடுக்கப்படுகிறது. அந்த புரோகிராம் இருந்த இடத்தில் வேறு புரோகிராம் வைக்கப்பட்டு பயன்படுத்தப்படலாம். சில வேளைகளில் விண்டோஸ் உட்பட சில ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் புரோகிராம்களை மூடியபின்னரும் மெமரியின் இடத்தை அதற்கென வைத்திருக்கும்.

எப்படி இருந்தாலும் மின்சக்தியின் அடிப்படையிலேயே RAMமெமரி இயங்குவதால் மின்சக்தியினை நிறுத்தினால் அனைத்து புரோகிராம்களும் RAM மெமரியிலிருந்து நீக்கப்பட்டு கிளீன் ஸ்லேட் ஆகிவிடும். நீங்கள் அதிகமான எண்ணிக்கையில் புரோகிராம்கள் அல்லது தகவல் களைக் கொண்டு இயக்க விரும்பி னால் உங்கள் கம்ப்யூட்டரில் அதிக RAM மெமரி வேண்டியதிருக்கும். அதிக எண்ணிக்கையில் பஸ்கள் வந்து செல்ல பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்திட பக்கத்து இடத்தை வளைத்துப் போடுவது போல கூடுதலாக சற்று இடத்தை இணைப்பதுதான் அதிக மெமரியைத் தரும். இதனை கூடுதல் ராம் மெமரி ஸ்டிக் இணைத்து மேற்கொள்ளலாம். இது சிறிய செவ்வக வடிவிலான ஸ்டிக் வடிவில் கிடைக்கின்றன. இதில் மெமரி மாட்யூல்கள் எனப்படும் காலி இடங்கள் இருக்கும். இவற் றை கம்ப்யூட்டர் மதர் போர்டில் இதற்கென உள்ள இடங்களில் இணைத்து வைக்கலாம்.


இவை இருவகைகளில் தற்போது பிரபலமாய் உள்ளன. அவை:

SIMM எனப்படும் Single Inline Memory Module மற்றும் DIMM எனப்படும் Dual Inline Memory Module ஆகும். முதல் வகை இன்னும் புழக்கத்தில் இருந்தாலும் இரண்டாவது வகையே அடிப்படை தரத்தைக் கொண்டதாக ஆக்கப்பட்டுள்ளது. உங்கள் கம்ப்யூட்டரின் மெமரி அதிக அளவில் இருந்தால் தான் நிறைய அளவிலான எண்ணிக்கையில் புரோகிராம்களை இயக்க முடியும். தற்போதைய மல்ட்டி மீடியா (ஆடியோ, வீடியோ, படங்கள் ஆகியன) புரோகிராம்கள் பெரிய அளவில் அமைவதால் அவற்றைக் கையாள அதிக இடம் தேவையாய் உள்ளது. இன்றைய நிலையில் ஒரு ஜிபி ராம் மெமரி ஒரு கம்ப்யூட்டர் இயங்க தேவையாய் உள்ளது.

இனி அடுத்ததான மெமரி குறித்து பார்க்கலாம். . ROM என்பது Read Only Memory என்பதன் சுருக்கமாகும். மதர் போர்டில் உள்ள சிப்களில் மாற்றமுடியாத கட்டளைகள் அடங்கிய புரோகிராம்களைக் கொண்டுள்ள மெமரி இது. கம்ப்யூட்டர் இயக்கத்தில் உள்ளதோ இல்லையோ இதில் உள்ள புரோகிராம்கள் இயங்குவதற்கு தயாராய் எப்போதும் ரெடியாக இருக்கும். உங்கள் கம்ப்யூட்டரை இயக்கத் தேவையான சில அடிப்படை புரோகிராம்களை இது கொண்டிருக்கும். இவை கம்ப்யூட்டர் இயக்கத்தின் உயிர்நாடியான இயக்கத்தைக் கொண்டிருப்பதால் இவை மாற்றப்படக் கூடாது. அதே போல இதனை மாற்றி வேறு சில புரோகிராம்களை இணைப்பதுவும் கூடாது. இதனை மாற்றுவதும் அவ்வளவு எளிதான வேலை அல்ல. வீட்டுக்கு கேஸ் மற்றும் மின்சாரம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் இந்த ROM மெமரியில் உள்ள புரோகிராம்கள். எனவே இந்த வகை மெமரியே லேசர் பிரிண்டர், கால்குலேட்டர் போன்ற சாதனங்களிலும் சில விஷயங்களை எப்போதும் நினைவில் கொண்டு இயங்க பயன்படுத்தப்படுகின்றன. கம்ப்யூட்டரின் திறன் அதிகப்படுத்தப்படுகிறது என்று சொல்கையில் இந்த இரு நினைவகங்களும் அதில் நிச்சயமாய் சம்பந்தப் படுத்தப்படுகின்றன. உங்கள் கம்ப்யூட்டரின் RAM மெமரியை எவ்வளவு அதிகப்படுத்துகிறீர்களோ அந்த அளவிற்கு உங்கள் கம்ப்யூட்டரின் திறனும் கூடும்.

டாகுமெண்ட்டில் வாட்டர் மார்க்

வேர்ட் தொகுப்பில் டேபிள் ஒன்றை உருவாக்கி இருக்கிறீர்கள். அதில் உள்ள செல்களில் வரிசையாக எண்களை அமைக்க வேண்டும். என்ன செய்யலாம்? வரிசையாக 1,2,3, என டைப் செய்து கொண்டு போவீர்கள், இல்லையா? தேவையே இல்லை. எந்த நெட்டு வரிசையில் எண்கள் அமைய வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுத்து பின் புல்லட் அருகே உள்ள Numbering என்ற ஐகானை அழுத்தவும்.

வரிசையாக எண்கள் அமைக்கப்படும். ஆனால் செல்களில் உள்ள டெக்ஸ்ட் அமைத்து அதில் என்டர் தட்டி வரிசையாக டெக்ஸ்ட் அமைத்திருந்தால் எண்கள் சற்று தாறுமாறாக வரலாம். டாகுமெண்ட்டில் வாட்டர் மார்க் அமைப்போமா! வாட்டர் மார்க்கா? டாகுமெண்ட்டில் அமைந்தால் சிறப்பாகத்தான் இருக்கும் இல்லையா? நீங்கள் வேர்டில் பெர்சனல் கடிதம் உங்கள் மனம் விரும்பிய காதலிக்கு எழுதுகிறீர்கள். அதன் பின்னணியில் அவர் உங்களுக்கு அளித்த படம் டெக்ஸ்ட்டைக் கெடுக்காத வகையில் வாட்டர் மார்க்காக இருந்தால் நன்றாகத்தானே இருக்கும். அல்லது உங்கள் சிறிய நிறுவனத்திற்கென பல கடிதங்கள் தயாரிக்கிறீர்கள். அந்தக் கடிதங்களின் பின்னணியில் நிறுவனத்தின் பெயர் அல்லது இலச்சினை இருந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும். வேர்ட் தொகுப்பில் இந்த வாட்டர் மார்க்கினை அமைத்திட வழி உள்ளது.

முதலில் எந்த டாகுமெண்ட்டிற்கு வாட்டர் மார்க் அமைத்திட வேண்டுமோ அதனைத் திறந்திடுங்கள். பின் டூல் பாரில் Format கிளிக் செய்து வரும் மெனுவில் Background என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். அதில் கிடைக்கும் சிறிய விண்டோவில் Printed Watermark என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர் காட்டப்படும் விண்டோவில் Nணி ஙிச்tஞுணூட்ச்ணூடு, கடிஞிtதணூஞு ஙிச்tஞுணூட்ச்ணூடு மற்றும் கூஞுதுt ஙிச்tஞுணூட்ச்ணூடு என மூன்று பிரிவுகள் இருக்கும். இதில் நீங்கள் அமைக்க விரும்பும் பிரிவினைத் தேர்ந்தெடுத்து அதில் கேட்கும் பைல் அல்லது டெக்ஸ்ட்டினைத் தரவும். பின் அனைத்து விண்டோக்களுக்கும் ஓகே கொடுத்து வெளியே வந்தால் உங்கள் டாகுமெண்ட்டில் நீங்கள் அமைத்து வைத்த படம் அல்லது டெக்ஸ்ட் மெல்லிய கிரே கலரில் டெக்ஸ்ட்டுக்குப் பின்புறம் இருப்பதைக் காண்பீர்கள். உங்கள் மனதிற்கும் சந்தோஷமாக இருப்பதனை உணர்வீர்கள்.



டேபிள் எழுத்துக்களின் அகலத்தைக் குறைக்க:

வேர்டில் டேபிள் அமைக்கிறீர்கள். செல் ஒன்றில் டெக்ஸ்ட அடிக்கும் போது அகலத்திற்குச் சற்று அதிகமானால் அது என்ன செய்கிறது. சொல்லை அப்படியே சுழற்றி அடுத்த வரிக்குக் கொண்டு செல்கிறது.

இதனால் நீங்கள் எதிர்பார்த்து அமைத்த நீளத்திற்கும் சற்று அதிகமான உயரத்தினை செல் அமைத்துக் கொள்கிறது. மற்ற செல்களோடு ஒப்பிடுகையில் இது சற்று வித்தியாசமாகத் தெரிவதால் உங்களுக்கு மனது ஒப்பவில்லை. உடனே எழுத்துக்களைச் சற்று சிறியதாக்கி அடுத்த வரி சொல்லை மேலே இருக்கும் வரிக்கே கொண்டு செல்கிறீர்கள். ஆனாலும் மற்ற செல்களில் உள்ளதைக் காட்டிலும் எழுத்துக்கள் சிறியதாக இருப்பது உங்களை அதிருப்தியாக்குகிறது.

எழுத்தும் சிறியதாகக் கூடாது; ஆனால் வரிகளும் அதிகமாகக் கூடாது என்று விரும்புபவர்களுக்கு என்றே வேர்ட் ஒரு வழி தருகிறது. எழுத்தின் அளவை மாற்றாமல் அதன் உயரத்தை மாற்றாமல் அகலத்தை மட்டும் குறைக்கிறது. இதனால் எந்த வித்தியாசமும் தெரியாது. அதே நேரத்தில் வரிகளின் எண்ணிக்கையும் கூடுதலாவதில்லை. இதற்கு Tools பாரில் Table கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Table Properties தேர்ந்தெடுங்கள். இதில் Cell என்னும் டேபில் கிளிக் செய்தால் Cell Options என்ற பிரிவு கிடைக்கும்.

இந்த விண்டோவில் கீழாக Options என்பதன் கீழ் Wrap text மற்றும் Fit text என்ற இரு பிரிவுகள் இருக்கும். இதில் Fit text என்பதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தி ஓகே கிளிக் செய்து வெளியேறுங்கள். இனி நீங்கள் டேபிள் செல்களில் டெக்ஸ்ட் அமைக்கையில் கூடுமானவரை எழுத்துக்களின் அகலத்தைக் குறைத்து டெக்ஸ்ட்டை அமைக்க வேர்ட் டேபிள் முயற்சி செய்திடும்.

தேவையற்ற கோடு வராமல் தடுக்கலாம்: வேர்ட் தொகுப்பில் தாமாகவே இயங்கும் பார்மட் சம்பந்தமான பல செயல்பாடுகள் உள்ளன. இதில் நாம் அடிக்கடி சந்திப்பது படுக்கைக் கோடு அமைவது தான். அதாவது ஹைபன் அல்லது அடிக்கோடு அல்லது சிறிய வளைவு கோடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் உடனே வேர்ட் அதனை அந்த அளவிற் கான படுக்கைக் கோடாக மாற்றிவிடும். இது நமக்கு வசதி என்றாலும் இதனை நீக்குவது எளிதல்ல. ஏனென்றால் இது வேர்ட் ஏற்படுத்திய பார்டர் லைனாகும்.

தற்போது பயன்படுத்தப்படும் வேர்ட் தொகுப்புகளில் இதற்கு ஒரு வழி தரப்பட்டுள்ளது. கர்சரை எந்த கோட்டினை அழிக்க வேண்டுமோ அந்த கோட்டின் தொடக்கத்திற்குக் கொண்டு செல்லவும். பின் Format மெனு சென்று Borders and Shading என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து அதில் உள்ள None பிரிவைக் கிளிக் செய்திடவும். இந்த பிரச்னை தொடர்ந்து வராமல் இருக்க வேண்டும் என்றால் Tools மெனுவிற்குச் செல்லுங்கள். அதில் Auto Correct Options பிரிவைத் தேர்ந்தெடுங்கள். பின் அதில் AutoFormat As You Type என்ற டேபிற்குச் செல்லுங்கள். Apply as you type என்ற இடத்தைத் தேடிக் கண்டு பிடியுங்கள். அதில் Border Lines என்ற இடத்திற்கு எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்து விட்டு அனைத்திற்கும் ஓகே டிக் செய்து மூடுங்கள்.

ரைட் கிளிக்குடன் புதுவிதமான ட்ராக் அண்ட் ட்ராப்

பொதுவாக வேர்ட் டாகுமெண்ட்டில் செலக்ட் செய்து பேஸ்ட் செய்கையில் தேவையான டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்துவிட்டு இடது கிளிக் பட்டனை அழுத்தியவாறே இழுத்து வந்து தேவைப்படும் இடத்தில் விட்டுவிடுவோம். இடது பட்டன் இல்லாமல் அடுத்த முறை வலது பக்க பட்டனை அழுத்திப் பாருங்கள். உங்களுக்குக் கிடைக்கும் அனுபவம் வேறு மாதிரிப் பயன் உள்ளதாக இருக்கும்.

எப்போதும் போல டெக்ஸ்ட்டின் எந்த பகுதியை காப்பி / பேஸ்ட் செய்திட வேண்டுமோ அதனை ஹைலைட் செய்திடவும். ஹைலைட் ஆன டெக்ஸ்ட் மீது மவுஸ் கர்சர் பாய்ண்ட்டைக் கொண்டு செல்லவும். இப்போது ரைட் கிளிக் செய்திடவும். அப்படியே டெக்ஸ்ட்டை புதிய இடத்திற்கு, எந்த இடத்தில் ஒட்ட வேண்டுமோ அந்த இடத்திற்கு, கொண்டு செல்லவும். அங்கு சென்று மவுஸின் ரைட் கிளிக் பட்டனை விட்டவுடன் நீங்கள் எப்போதும் இது போல ட்ராக் அண்ட் ட்ராப் செய்தது போல டெக்ஸ்ட் அங்கு ஒட்டப்படவில்லை என்பதை உணர்வீர்கள். அதற்குப் பதிலாக ஒரு சிறிய மெனு உண்டாகி இருப்பதைக் காணலாம்.

Move Here, Copy Here, Link Here, Create Hyperlink Here மற்றும் Cancel ஆகிய பிரிவுகள் இருக்கும். இதில் மூவ் ஹியர் மற்றும் காப்பி ஹியர் நாம் எல்லாரும் அறிந்த ஒன்றுதான். டெக்ஸ்ட் இருந்த இடத்தில் இல்லாமல் புதிய இடத்தில் அமைத்திட மூவ்ஹியர் பயன்படுத்தலாம். பழைய இடத்திலும் இருக்கட்டும்; புதிய இடத்திலும் இருக்கட்டும் என்றால் காப்பி ஹியர் பயன்படுத்தலாம். லிங்க் ஹியர் என்பது எதனைக் குறிக்கிறது? இதுதான் புதுமையான பயன்பாடு. இதனைத் தேர்ந்தெடுக்கையில் அந்த டெக்ஸ்ட் புதிய இடத்தில் காப்பி செய்யப்படும். ஆனால் பழைய இடத்தில் உள்ள டெக்ஸ்ட்டில் ஏதேனும் மாற்றங்களை உண்டாக்கினால் டெக்ஸ்ட் காப்பி செய்த இடத்தில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்றால் உடனே அங்கு ஏற்படுத்திய மாற்றங்கள் இங்கும் மேற்கொள்ளப்படும்.

மேலும் புதிய இடத்தில் ஒட்டப்பட்ட டெக்ஸ்ட் கிரே கலரில் முதலில் காப்பி செய்யப்படும். டாகுமெண்ட்டை சேவ் செய்து மூடுகையில் இந்த டாகுமெண்ட்டில் லிங்க் உள்ளது. இணைத்து சேவ் செய்திடவா என்று கேள்வி கேட்டு மூடும். பின்னர் பைலினைத் திறந்து ஒட்டப்பட்ட டெக்ஸ்ட்டில் மாற்றங்களை மேற்கொண்டால் மீண்டும் ஒட்டப்பட்ட டெக்ஸ்ட்டிலும் மாற்றங்களை உண்டு பண்ணும். இந்த லிங்க் ஒட்டல் அந்த பைலின் கட்டமைப்பில் ஓர் அங்கமாக எப்போதும் இருக்கும்.

அடுத்தபடியாக உள்ள Create Hyperlink Here வேறுவிதமான அனுபவத்தினைத் தருகிறது. இதனைக் கிளிக் செய்தாலும் லிங்க் ஏற்படுகிறது. ஒட்டப்பட்ட இடத்திற்குச் சென்ற பின் ஒரிஜினலாக இந்த டெக்ஸ்ட் எப்படி இருந்தது என்று பார்க்க விருப்பமா? அது எங்கிருக்கிறது? என்று அறிய ஒட்டப்பட்ட வரி ஒன்றில் கர்சரை வைத்து கண்ட்ரோல் அழுத்தி மவுஸ் கிளிக் செய்தால் கர்சர் ஒரிஜினல் டெக்ஸ்ட் உள்ள இடத்தில் சென்று நிற்கும். ஆனால் முதலில் கூறப்பட்டது போல ஒரிஜினலில் மாற்றங்கள் செய்தால் ஒட்டப்பட்ட இடத்தில் மாற்றங்கள் ஏற்படாது. நாம் தான் நாமாக அவற்றை மேற்கொள்ள வேண்டும்.

வேர்ட் தொகுப்பில்....


வேர்ட் தொகுப்பில் டேபிள் ஒன்றை உருவாக்குகிறீர்கள். அதனை பிரிண்ட் எடுக்க முயற்சிக்கையில் அது பல பக்கங்களில் அமைந்திருப்பதனையும் அடுத்த அடுத்த பக்கங்களில் டேபிளில் உள்ள வரிசைகளுக்கான தலைப்புகள் இல்லை என்பதனையும் உணர்கிறீர்கள். ஒவ்வொரு பக்கத்திலும் ஹெடர்கள் வந்தால் தானே ஒவ்வொரு காலமும் எது குறித்த தகவல்களைக் கொண்டுள்ளன என்று எளிதாகத் தெரியும். உடனே முதல் பக்கத்தில் இருக்கும் டேபிள் தலைப்பு உள்ள படுக்கை வரிசையினை அப்படியே காப்பி செய்து ஒவ்வொரு பக்கத்தின் முதல் வரிசையிலும் புதிய வரிசையினை ஏற்படுத்தி பேஸ்ட் செய்திடலாம். ஆனால் இது இன்னும் பிரச்னையை ஏற்படுத்தும்.

பின்னாளில் ஏதேனும் ஒரு வரிசையை இணைத்தாலோ அல்லது நீக்கினாலோ இரண்டாம் பக்கத்திலிருந்து உள்ள தலைப்பு அடுத்த பக்கத்திற்கோ அல்லது முந்தைய பக்கத்திற்கோ செல்லும். இந்த குழப்பத்தினைச் சரி செய்திட ஒரு வழியினை வேர்ட் தருகிறது. இதற்கான தீர்வினை Headings என்ற பகுதியில் பெறலாம். ஆம்; முதலில் முதல் பக்கத்தில் டேபிள் தலைப்பு அமைத்த வரிசையினை செலக்ட் செய்திடவும். பின் Table மெனு செல்லவும். விரியும் மெனுவில் கிடைக்கும் பிரிவுகளில் Heading Rows Repeat choice என்ற பிரிவினைக் கிளிக் செய்திடவும். பழைய வேர்ட் தொகுப்பாக இருந்தால் Headings என்று மட்டுமே இருக்கும். இனி பார்த்தால் ஒவ்வொரு பக்கத்திலும் தலைப்பில் இந்த ஹெடர்கள் இருக்கும். நீங்கள் எத்தனை வரிசையினை சேர்த்தாலும் நீக்கினாலும் இது அப்படியே தான் இருக்கும். இந்த ஹெடர்களில் மாற்றம் செய்திட வேண்டும் எனத் திட்டமிட்டால் முதல் பக்கத்தில் உள்ள தலைப்பு வரிசையில் மட்டுமே மாற்ற முடியும். இரண்டாவது பக்கத்திலோ அல்லது வேறு பக்கத்திலோ உள்ள ஹெடரில் மாற்ற முடியாது. மேலும் முதல் பக்கத்தில் என்ன மாறுதல் செய்கிறோமோ அது மற்ற பக்கத்திலும் அப்படியே மாற்றப்படும். எத்தனை வசதிகள் பார்த்தீர்களா!

டேட் அன்டு டைம் ஷார்ட் கட்

வேர்ட் அல்லது பிரசன்டேசன் பைல்களில் அடிக்கடி தேதி மற்றும் நேரத்தினை பதிபவரா நீங்கள்! என்ன செய்கிறீர்கள்? ஒவ்வொரு முறையும் டைப் செய்கிறீர்களா? வேண்டாமே! வேர்டில் Alt + Shift + D என அழுத்துங்கள். தேதி சிஸ்டத்திலிருந்து எடுத்து டைப் செய்யப்படும். நேரத்தை இடைச் செருக Alt + Shift + T அழுத்தலாம்.

பவர் பாயிண்ட்டில் இந்த கீகளை அழுத்தினால் ஒரு கட்டம் கிடைக்கும். இதில் எந்த மாதிரி வகையில் டேட் மற்றும் டைம் அமைக்க வேண்டும் மற்றும் எந்த ஸ்லைடில் அமைக்க வேண்டும் என்பதனை முடிவெடுத்து செட் செய்து ஓகே அழுத்தினால் அதே போல தேதியும் நேரமும் அமைக்கப்படும். பார்த்தீர்களா! தேதியும் நேரமும் உங்கள் பிங்கர் டிப்ஸில் உள்ளதே!

தென்கொரிய அதிபர் மனைவி மூதாததையர் அயோத்தி நகரத்தினர்


தற்போதைய தென்கொரிய அதிபர் லீ யுங் மியுங் பக்கின்(Lee Myung-bak) மனைவி, கிம் யூன் யோக்கின் (Kim Yoon-ok) முன்னோர்கள், அயோத்தியைச் சேர்ந்தவர்கள் என்ற சுவையான தகவல் வெளியாகியுள்ளது.

தென் கொரிய அதிபர் மாளிகை வட்டாரத் தகவல்களின் அடிப்படையில் "தி கொரியா டைம்ஸ்' வெளியிட்டுள்ள செய்தி:அதிபர் மனைவி கிம்மின் முன்னோர், அயோத்தி அரச பரம்பரையைச் சேர்ந்தவர்கள். அந்த பரம்பரையில் பிறந்த ஹியோ வாங் யோக் என்ற பெண், கொரியாவுக்கு வந்து அப்போது இங்கு அரசாண்ட மன்னரை மணந்து கொண்டார்.கொரிய மொழியில் எழுதப்பட்ட 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த "சம்கக் யுசா' என்ற நூலில் இந்த செய்தி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன்படி, ஹியோ, தன் கனவில் அடிக்கடி ஒரு அழகான இளைஞரைக் கண்டார். அவரைக் கண்டுபிடிப்பதற்காக தன் பெற்றோர்களின் அனுமதியுடன் கப்பலேறி தென்கொரியா வந்து சேர்ந்தார்.

அப்படி வரும்போது, தன்னுடன் மீன்கள் படம் பொறித்த கல் ஒன்றையும் கொண்டு வந்தார்.தென்கொரியாவில், கயா பேரரசின் மன்னன் சுரோவைக் கண்டார். அவர்தான் தான் கனவில் கண்ட இளைஞர் என்று உணர்ந்த ஹியோ, சுரோவை மணந்து கொண்டார். இவர்களுக்குப் பிறந்த வாரிசுகள் மூலம்தான், கொரியாவில் கிம்ஹே கிம்ஸ் பேரரசு அமைந்தது.கடந்த 2004ல் கயா அரசர்களின் கல்லறைகளிலிருந்து எடுக்கப்பட்ட மரபணுக்களும், இந்தியாவில் இப்பகுதியில் உள்ள குடிகளின் மரபணுக்களும் ஒத்திருந்தன. இதிலிருந்து கொரிய அரச பரம்பரைக்கும் இந்திய அரச பரம்பரைக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது.ஹியோ கொண்டு வந்த மீன்கள்படம் பொறித்த கல்லையும் தொல்பொருளாய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.இவ்வாறு "தி கொரியா டைம்ஸ்' கூறியுள்ளது.

வேர்டில் உள்ள டேபிளில் காணப்படும் டேட்டாவினைக் கொண்டு, அதனை ஒரு சார்ட் ஆக மாற்ற

வேர்ட் 97 முதல் இந்த வசதி தரப்பட்டுள்ளது. வேர்டில் உள்ள நீங்கள் குறிப்பிடும் அட்டவணையில் எண்களில் டேட்டா தரப்பட்டிருக்க வேண்டும்.

1. முதலில் சம்பந்தப்பட்ட டேபிளைத் தேர்ந்தெடுக்கவும்.

2. இன்ஸெர்ட் (Insert) மெனு செல்லவும். இதில் ஆப்ஜெக்ட் (Object) என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் ஆப்ஜெக்ட் டயலாக் பாக்ஸைக் காட்டும்.

3. இதில் ஆப்ஜெக்ட் டைப் (Object Types) என்பதில் ஒரு பட்டியல் காட்டப்படும். இந்த பட்டியலில் Microsoft Graph Chart என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். சில வேர்ட் தொகுப்புகளில் இது அந்த வேர்ட் தொகுப்பின் குறிப்பிட்ட பெயருடன் இருக்கலாம். எடுத்துக் காட்டாக Microsoft Graph 2000 Chart என இருக்கலாம்.

4. ஓகே கிளிக் செய்தவுடன் சார்ட் கிடைக்கும்.

5. இந்த சார்ட்டினை உங்கள் விருப்பத்திற் கேற்றபடி மாற்றிக் கொள்ளலாம்.

6. சார்ட்டுக்கு வெளியே கர்சரைக் கொண்டு வந்து தொடர்ந்து டாகுமெண்ட்டில் பணியாற்றலாம்.


=rand(5,4) என்ற கட்டளை

=rand(5,4) என்ற கட்டளை வேர்ட்டில் டெக்ஸ்ட் அமைக்க பயன்படுகிறது. வேர்டில் ஏதேனும் ஒரு பயன் பாட்டினை சோதனை செய்திட திட்டமிடுகிறீர்கள். அதற்கு டெக்ஸ்ட் வேண்டும். இதற்காக டைப் செய்து கொண்டிருக்க முடியாது. எனவே வேர்டில் இந்த கட்டளையைப் பயன்படுத்தலாம். இதனை டாகுமெண்ட் ஒன்றில் முதல் வரியில் தொடக்கமாகத் தந்தால் The quick brown fox jumps over the lazy dog என்ற வாக்கியம் தரப்படும். இந்த வாக்கியத்தின் சிறப்பினை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். இது ஆங்கில மொழியின் அனைத்து எழுத்துகளும் உள்ள ஒரு வாக்கியம் ஆகும். நீங்கள் தந்துள்ள பார்முலாவில் உள்ள எண்களுக்கும் ஒரு வேலை தரப்படுகிறது. முதலில் தரப்பட்டுள்ள எண் பத்தியைக் குறிக்கிறது. அடுத்த எண் அந்த பத்தியில் இந்த வாக்கியம் எத்தனை முறை காட்டப்படும் என்பது குறிக்கப்படுகிறது. இங்கு ஐந்து பத்திகளில், ஒவ்வொரு பத்தியிலும் தலா நான்கு முறை இந்த வாக்கியம் அமைக்கப்படும்.

கேப்ஸ் லாக் கீ அழுத்தப்படுகையில் சிறிய அளவில் ஒலி கேட்கும் வகையில் செட் செய்திட

கேப்ஸ் லாக் மட்டுமின்றி, Num Lock மற்றும் Scroll Lock key ஆகியவற்றையும் அழுத்துகையில் ஒலி ஏற்படும். இதனால் நாம் பெரிய டாகுமெண்ட்களை வேக வேகமாக டைப் செய்திடுகையில் நம்மை அறியாமல் இந்த கீகளை அழுத்துவது நமக்கு அறிவிக்கப்படுகிறது. இதனை எச்சரிக்கையாக நாம் எடுத்துக் கொண்டு செயல்படலாம். இந்த கீகளுக்கும், குறிப்பிட்ட இந்த வசதிக்கும் டாகிள் கீஸ் (Toggle Keys) என்று பெயர். இதனை இயக்க ஸ்டார்ட் பட்டன் அழுத்தி கண்ட்ரோல் பேனல் தேர்ந்தெடுத்து அதில் Accessibility Options என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Accessibility Options என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் உள்ள பிரிவுகளில் Toggle Keys என்ற பிரிவிற்குச் செல்லவும். இங்கு Use Toggle Keys என்று உள்ள இடத்தில் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின் அப்ளை மற்றும் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கட், டெலீட், பேக் ஸ்பேஸ்

கட், டெலீட், பேக் ஸ்பேஸ் இவற்றில் எதை அழுத்தினாலும் அது பின் நோக்கியோ அல்லது கர்சர் தேர்ந்தெடுத்தனையோ அழிக்கிறது. இதில் என்ன வேறுபாடு உள்ளது?

அடிப்படையில் எல்லாம் ஒன்றுதான். ஆனால் இவற்றின் செயல்பாடுகளில் சிறிய வேறுபாடு உள்ளது. இங்கு அதனைப் பார்க்கலாம். ஒரு டாகுமெண்ட், பிரசன்டேஷன், ஒர்க்ஷீட் என எந்த வகையாக இருந்தாலும் இதன் செயல்பாடு டெக்ஸ்ட்டை நீக்கும் வகையிலேயே இருக்கும். ஆனால் நீக்கப்பட்ட டெக்ஸ்ட்டை அல்லது ஆப்ஜெக்ட்டை சிஸ்டம் எப்படி செயல்படுத்துகிறது என்பதில் தான் வேறுபாடு உள்ளது. இவற்றில் கட்(CutCtrl+C) செய்கையில் நீக்கப்பட்ட டெக்ஸ்ட் கிளிப் போர்டுக்குச் செல்கிறது. அங்கு வைக்கப்படுவதால் அதனை எப்போது வேண்டுமென்றாலும் நீங்கள் அணுகி, பெற்று பயன்படுத்தலாம். ஆனால் டெலீட் மற்றும் பேக்ஸ்பேஸ் (Delete/Backspace) பயன் படுத்துகையில் நீக்கப்படும் டெக்ஸ்ட் மறைந்து விடுகிறது. இதனை உடனே அன் டூ (Undo Ctrl+z) செய்தால் மட்டுமே மீண்டும் கிடைக்கும். எனவே அழிப்பதனைத் தக்கவைத்துக் கொள்ள எண்ணினால், கட் செய்திடுங்கள். மீண்டும் அறவே வேண்டாம் என எண்ணினால் டெலீட் அல்லது பேக் ஸ்பேஸ் பயன்படுத்துங்கள்

விண்டோஸ் விஸ்டாவுடன் வந்த பல கேம்ஸ்கள் (Solitaire, Free Cell and Minesweeper) நீக்குவதற்கு

மேற்குறிப்பிட்ட கேம்ஸ்களை நீக்கலாம். அதனால் சிஸ்டம் இயங்கும் தன்மையில் எந்த மாற்றமும் இருக்காது.

Start>Control Panel செல்லவும். பின் Programs and Features என்பதில் டபுள் கிளிக் செய்திடவும். இதில் "Turn Windows Features On or Off" என்ற ஆப்ஷனைக் காணலாம். இதில் கிளிக் செய்தால் விண்டோ ஒன்று கிடைக்கும். இதில் உள்ள "Games" என்னும் பிரிவை விரிக்கவும். எந்த கேம்ஸ் எல்லாம் வேண்டாமோ அவற்றின் முன் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இந்த கேம்ஸ் அன் இன்ஸ்டால் ஆகிவிடும். பின் எப்போது இவை தேவையோ, அப்போது மீண்டும் இதே வழியாக அவற்றை இன்ஸ்டால் செய்திடலாம்.

அகர வரிசைப்படி புரோகிராம்கள்

நம் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்துள்ள புரோகிராம் களுக்கு ஐகான்களை திரையில் அமைத்து கிளிக் செய்து இயக்குகிறோம். ஆனால் சில புரோகிராம்களை இயக்க Start>All Programs சென்று குறிப்பிட்ட புரோகிராமினைப் பட்டியலில் தேடி கிளிக் செய்கிறோம். இந்த புரோகிராம்கள் எழுத்து வரிசைப்படி இருப்பதால் நம் தேடும் வேலை எளிதாகிறது. ஆனால் புதிய புரோகிராம்களை நாம் இன்ஸ்டால் செய்வதால் அவை லிஸ்ட்டின் பின்புறம் ஒட்டிக் கொள்கின்றன. நம் தேடும் பணி கடினமாகிறது. அவற்றையும் அகர வரிசைப்படி அடுக்கினால் வேலை எளிதாகும் அல்லவா? அதற்கு பட்டியலிடப்பட்டுள்ள புரோகிராம்களில் ஏதேனும் ஒன்றில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Sort by Names என்பதில் ஒரு முறை கிளிக் செய்திடவும். அனைத்து புரோகிராம்களும் அகர வரிசைப்படுத்தப்படும்.

Microsoft Word டொக்குமெண்ட்டை இரண்டாக பிரிப்பது எப்படி?

வேர்ட் டொக்குமெண்ட் ஒன்றில் இரண்டு இடங்களில் ஒரே நேரத்தில் வேலை செய்ய விரும்பினால் வேர்டில் அதற்கான செட் அப் செய்துவிட்டால் ஓகே. டொக்குமெண்ட் விண்டோவினைப் பிரித்து, ஒவ்வொன்றிலும் அந்த டொக்குமெண்ட்டின் இரு வேறு இடங்களில் ஒரே நேரத்தில் பணியாற்றலாம்.

வேர்ட் 2003 வைத்திருப்பவர்கள், கீழே குறிப்பிடுவது போல் செட் செய்திடவும். வேர்ட் டொக்குமெண்ட்டைத் திறக்கவும். மெனு பாரில் விண்டோ (Window) என்பதில் கிளிக் செய்தால் கிடைக்கும் மெனுவில் Split என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பைல் இரு பிரிவுகளாகக் காட்டப்படும். புதிதாய்த் திறக்கப்பட்ட பிரிவில் டாகுமெண்ட்டின் தொடக்க பக்கம் காட்டப்படும். இனி நீங்கள் ஒரே டாகுமெண்ட்டில் இரண்டு இடங்களில் செயல்படலாம்.

வேர்ட் 2007 வைத்திருப்பவர்கள் ரிப்பனில் வியூ (View) டேப்பில் கிளிக் செய்திடவும். அதன்பின் விண்டோ குரூப்பில் ஸ்பிளிட் Split டூலில் கிளிக் செய்திடவும்.
நீங்கள் ஸ்பிளிட் கட்டளை கொடுத்தவுடன், நீளமான படுக்கைக் கோடு ஒன்று டாகுமெண்ட்டில் காட்டப்படும். இதனை மவுஸ் மூலம் நகர்த்தலாம். பின் கிளிக் செய்தால், எங்கு அந்த கோட்டினை வைத்தீர்களோ, அந்த இடத்தில் கோடு அமைக்கப்பட்டு, டொக்குமெண்ட் பிரித்துக் காட்டப்படும்.
இந்த பிரிவு தேவையில்லை என்று முடிவு செய்தால், மீண்டும் அதே மெனுவில் சென்று நீக்கலாம்.


வேர்ட்: சில வழிகள்

உடனடியாக ஒரு டாகுமெண்ட்டில் ஸ்பெல்லிங் சோதனை மேற்கொள்ள எப்7 அழுத்தவும். ஹைபன் பயன்படுத்திய சொற்கள் பிரியாமல் இருக்க வேண்டும் என்றால் ஹைபன் டைப் செய்திடுகையில் கண்ட்ரோல் +ஷிப்ட் கீகளை அழுத்திக் கொள்ளுங்கள். குறிப்பிட்ட இரண்டு சொற்கள் வரி ஓரங்களில் பிரியாமல் அமைய வேண்டும் என்றால் கண்ட்ரோல்+ஷிப்ட்+ஸ்பேஸ் பயன்படுத்துங்கள்.

குறுக்கே வரும் மவுஸ் கர்சரை ஒதுக்க : மவுஸ் கர்சர் நமக்குப் பல வழிகளில் உதவிடும் ஒரு சாதனமாகும். ஆனால் வேக வேகமாக டைப் செய்பவர்களுக்கு அது ஒரு தொல்லை தரும் இடமாகும். இதை ஒதுக்க முடியவில்லையே என அவர்கள் ஆதங்கப்படலாம். அதனை ஒதுக்கவும் வழி உள்ளது. Start, Settings, Control Panel எனச் செல்லவும். பின் Mouse என்று உள்ள ஐகானில் இருமுறை கிளிக் செய்திடவும். இப்போது மவுஸ் பிராபர்ட்டீஸ் விண்டோ கிடைக்கும். இதில் உள்ள ஐந்து டேப்களில் Pointer Options என்று ஒரு டேப் நடுநாயகமாக இருக்கும். இதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் உள்ள மூன்று பிரிவுகளில் மூன்றாவதில் நடுவில் Hide Pointer While Typing என இருக்கும். இதில் உள்ள சிறிய கட்டத்தில் டிக் அடையாளம் ஒன்றை மேற்கொள்ளவும். பின் அப்ளை, அதன் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் டைப் அடிக்கையில் மவுஸ் கர்சர் குறுக்கே வராது.
ஐகான் பட்டன்கள் எதற்காக?

வேர்டில் மெனு பாரினை ஒட்டி நிறைய பட்டன்கள் உள்ளன. இந்த பட்டன்களின் பெயர்கள் என்னவென்று தெரியவில்லை. சிறிய ஐகான்களாகத் தோற்றமளிக்கின்றன. பெயர் தெரிய வேண்டுமா? உடனே மவுஸின் கர்சரை இந்த பட்டன் அருகே கொண்டு செல்லுங்கள். உடனே அந்த பட்டனின் பெயர் தெரியும்.

பைலை அறவே நீக்கிட ஒரு பைலை அழிக்கிறீர்கள். அது நிச்சயமாக அழிக்கப்பட வேண்டும்; ரீ சைக்கிள் பின்னுக்குச் செல்ல வேண்டாம் என முடிவு செய்தால் அந்த பைலைத் தேர்ந்தெடுத்து டெலீட் பட்டனை அழுத்துகையில் ஷிப்ட் கீயை அழுத்தியபடி அழுத்தவும். பைல் ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லாது.

மார்ஜின் மாற்ற

டாகுமென்ட் அமைக்க காலி பக்கம் ஒன்றைத் திறந்தவுடன் அதில் தரப்பட்டிருக்கும் மார்ஜின் உங்களுக்குப் பிடிக்கவில்லையா? அதனை மாற்றி அமைக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் File மெனுவில்Page Setup செல்லவும். அங்கு Margins டேப்பில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் மார்ஜின் வெளியைக் கூட்டவும் குறைக்கவும் வசதிகள் தரப்பட்டிருக்கும். மாற்றிக்கொள்ளலாம். காலியாக இருக்கும்போதுதான் மாற்ற வேண்டும் என்பதில்லை. டாகுமெண்ட் உருவானபின்னும் மேலே சொன்ன வழியில் மாற்றலாம். மாற்றுவதற்கேற்ப உங்கள் டாகுமெண்ட் தோற்றமும் மாறும்.

விரும்பிய வகையில் கலரில் பார்டர் அமைக்க:

வேர்ட் டேபிளில் விரும்பிய கலரிலும் வகையிலும் பார்டர்களை அமைக்கலாம். Tables and Borders மெனுவினைத் திரையில் பெறவும். இதற்கு View மெனுவிலிருந்து Toolbars என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் துணை மெனுவில் Tables and Borders என்பதைத் தேர்ந்தெடுத்தால் இந்த மெனு திரைக்கு வரும். லைன் ஸ்டைல் என்ற பீல்டில் கிடைக்கும் ட்ராப் டவுண் லிஸ்ட்டில் உங்களுக்குப் பிடித்த பார்டர் Line Style ஐத் தேர்ந்தெடுக்கவும். பார்டருக்கான கலர் தேர்ந்தெடுக்க Border Color என்பதில் கிளிக் செய்திடவும். இனி Draw Table என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் பென்சில் போன்ற கர்சரின் துணை கொண்டு நீங்கள் விரும்பிய பார்டர் லைனை தேர்ந்தெடுத்த வண்ணத்தில் அமைக்கலாம். மேலே கூறிய வழிகளை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுத்து டேபிளில் பார்டர்களை அமைக்கலாம்.

ஜிமெயில் சர்வீசஸ் திடீரென முடங்கிப் போனால்.....

ஜிமெயில் சர்வீசஸ் திடீரென முடங்கிப் போனால், அது சரியாகும் வரை தவிக்க வேண்டும். ஆனால் கூகுள் மெயிலை வேறு சில வழிகளிலும் பெறலாம் என்பதைப் பலர் அறிந்திருப்பதில்லை. இங்கு அந்த வழிகளைக் காணலாம்.

இமெயிலுடன் பிசினஸ் கார்ட்

பிசினஸ் கார்ட் ஏன் இணைக்க வேண்டும்? நீங்கள் ஒரு வர்த்தக நிறுவனம் நடத்தலாம்; அதனையும் அதில் உங்கள் பங்களிப்பினையும் தெளிவாக தனித்துக் காட்ட இது உதவுகிறது. அல்லது நீங்கள் தனியே உங்களின் சொந்த பிசினஸை நடத்தி வருகிறீர்கள். அதைப் பற்றி மற்றவர் அறிந்து கொள்ள இமெயில் ஒரு நல்ல சாதனம். ஒரு சிலரோ எல்லாரும் வைத்திருக்கிறார்கள்; நானும் ஒன்று அமைத்துப் பயன்படுத்துவேன் என்று எண்ணலாம். எது எப்படியோ! பிசினஸ் கார்ட் பல பயன்களைத் தருகிறது என்பதே உண்மை. அதனை எப்படித் தயாரிப்பது, இமெயிலுடன் இணைப்பது என்று பார்ப்போம்.

முதலில் அவுட்லுக் எக்ஸ்பிரஸ்ஸைத் திறந்து கொள்ளுங்கள். பின் Tools மெனு சென்று அதில் Address Book கிளிக் செய்து திறக்கவும். இதில் நீங்கள் மற்றவர்களின் பெயர், செல்லப் பெயர், மின் அஞ்சல் முகவரிகள் மற்றும் பிற தகவல்களைப் போட்டு வைத்திருப்பீர்கள். இப்போது உங்களுக்காக ஒரு முகவரியைப் போட்டு வைத்திட வேண்டும். எனவே New > New Contact என்பதில் கிளிக் செய்து உங்கள் பெயர் மற்றும் நீங்கள் விரும்பும் வகையில் பிசினஸ் நிறுவனப் பெயர் முதலியவற்றைப் போட்டு வைக்கவும். எல்லாம் முடிந்த பின்னர் ஜஸ்ட் ஓகே என்டர் செய்திடுங்கள். இனி அட்ரஸ் புக்கில் உங்களுடைய பெயர் தொடர்பு கொள்ளவேண்டியவர்களின் (list of contacts) பட்டியலில் இருக்கும் அல்லவா! அதனைத் தேர்ந்தெடுத்து ஹை லைட் செய்திடுங்கள். அடுத்து File மெனு சென்று Export தேர்ந்தெடுத்து பின் Business Card (vCard) தேர்ந்தெடுங்கள்.

இதில் விகார்ட் என்பது வழக்கமாக நாம் நம் பிசினஸ் குறித்து அடித்து வைத்துக் கொள்ளும் கார்டுகள். இப்போது புதிய விண்டோ ஒன்று திறக்கப்படும். அதில் உங்கள் பிசினஸ் கார்ட் பைலை எங்கு சேவ் செய்து வைக்க என்று கேட்கப்படும். நீங்கள் மை டாகுமெண்ட்ஸ் அல்லது டெஸ்க் டாப்பில் கூட சேவ் செய்து வைக்கலாம். நீங்கள் எளிதில் சென்று எடுத்துக் கொள்ளக் கூடிய டைரக்டரியாக இருக்க வேண்டும்.

ஓ.கே. இப்போது பிசினஸ் கார்ட் தயார். இதனை எப்படி அனுப்ப போகிறோம்? குறிப்பிட்ட இமெயில் கடிதங்களுக்கு மட்டும் அனுப்ப வேண்டும் என்றால் மெசேஜ் எழுதி அமைத்த பின்னர் Insert மெனு செல்லவும். அங்கு My Business Card என்பதனைத் தேர்வு செய்திடவும். பின் இமெயிலுடன் பிசினஸ் கார்ட் தானாகச் சேர்த்துக் கொள்ளப்படும். ஒவ்வொரு இமெயில் கடிதத்துடனும் சேர்க்கப்பட வேண்டும் என்றால் Tools > Options சென்று அங்கு Compose பிரிவிற்குச் செல்லவும். இந்த பெட்டியின் அடியில் பிசினஸ் கார்ட் செக்ஷன் கிடைக்கும். அங்கு Mail என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அங்கு கிடைக்கும் கீழ் விரி மெனுவில் உங்கள் பெயர் இருப்பதைக் காணலாம். அதன்பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி அனைத்து இமெயில்களிலும் உங்கள் பிசினஸ் கார்ட் இணைந்து செல்லும். உங்கள் வர்த்தகம் அல்லது அலுவல் குறித்து உங்கள் நண்பர்கள் தெளிவாக அறிந்து கொள்வார்கள்.

ஏன் தமிழ் மட்டும் மாறி உள்ளது?

கீ போர்டில் ஆங்கில எழுத்துக்கள் அப்படியே டைப் ரைட்டரில் இருப்பது போல் இருக்கிறது. ஆனால் தமிழில் அடிக்கையில் ஒரு சில எழுத்துக்களுக்கு தமிழ் டைப்ரைட்டரில் இருப்பது போலவும் பல எழுத்துக்களுக்கு விதம் விதமாகவும் இருக்கின்றன. ஏன் இந்த வேறுபாடு?

கம்ப்யூட்டர் மற்றும் அதற்கான கீ போர்டு தொடக்கத்தில் தயாரிக்கப்படுகையில் ஆங்கிலத்தை அடிப்படையாக வைத்தே உருவானது. அதனால் ஆங்கில டைப் ரைட்டரில் உள்ள QWERTY என்ற கீ போர்டு போலவே கம்ப்யூட்டர் கீ போர்டும் உருவாக்கப் பட்டது. ஆனால் டைப்ரைட்டரில் A என்ற கீயை அழுத்துகையில் A க்கான எழுத்து உள்ள ஹேண்டில் தூக்கப்பட்டு அந்த எழுத்து பதிக்கப்படுகிறது. கம்ப்யூட்டரில் அவ்வாறு ஏதும் நடைபெறவில்லை. A என்ற எழுத்து உள்ள கீ கேப் (Key Cap) அழுத்தப்படும்போது கீ போர்டு டிரைவர் எனப்படும் சிறிய சாப்ட்வேர் தொகுப்பு செயல்பட்டு, சர்க்யூட் முழுமையாகி, அதற்கான எழுத்து மானிட்டரில் காட்டப்படுகிறது. தமிழுக்கென எழுத்துக்களையும் கீ போர்டு டிரைவர்களையும் உருவாக்கியவர்கள் தொடக்கத்தில் தமிழ் டைப்ரைட்டரில் உள்ள கீ போர்டு மாதிரியே டிரைவர்கள் எழுதினார்கள். புள்ளி எழுத்துக்கள், கொம்பு எழுத்துக்களில் உள்ள சிரமங்களைக் களையவும் கம்ப்யூட்டர் புரோகிராம் தருகின்ற சுதந்திரத்தைப் பயன்படுத்தவும் பின்னர் திட்டமிட்டு தாங்களாக பல மாற்றங்களை உருவாக்கினார்கள். இதனால் டைப் ரைட்டரில் A என்ற கீயினை தமிழுக்கென அழுத்தினால் ‘ய’ வர வேண்டும். ஒரு சிலரின் புரோகிராம் படி அங்கு ‘அ’ அல்லது ‘க’ என அவர்கள் இஷ்டப்படி வந்தது. இது போல ஏறத்தாழ 156 வகைகள் இருந்தன. இவற்றை ஒருங்கிணைத்து தமிழ் நெட் 99 என்ற கீ போர்டு உருவானது. ஷிப்ட் கீயை அழுத்தாமலேயே தமிழ் எழுத்துக்களை டைப் அடிக்க இயலும். இதனால் நேரம் மிச்சமாவதுடன் விரல்கள் இயங்குவது குறைந்தது. ஆங்கில டைப் ரைட்டர் கீ போர்டு அடிப்படையில் ஆங்கில எழுத்துக்களின் ஒலியின் அடிப்படையில் தமிழ் எழுத்துக்களை அடிக்கக் கூடிய போனடிக் கீ போர்டு (Phonetic) புரோகிராம் தற்போது ஆங்கில டைப்ரைட்டிங் கீ போர்டு தெரிந்தவர்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது. இதன் மூலம் ‘ammaa’ என்று டைப் செய்தால் ‘அம்மா’ என்று கிடைக்கும். தமிழ் வேர்ட் பிராசசர்களும் (இல வசமாக எனில் முரசு அஞ்சல் மற்றும் குறள் தமிழ்ச் செயலி) இந்த வகை கீ போர்டுகளைத் தந்துள்ளனர். இத்தொகுப்புகளுடன் இணைந்தே இந்த கீ போர்டு டிரைவர்களும் உங்கள் கம்ப்யூட்டரில் பதியப்படும். எனவே எளிதாகத் தேவையானதைத் தேர்ந்தெடுத்து நீங்கள் ஆங்கில கீ போர்டு வழியாகத் தமிழ் எழுத்துக்களை டைப் செய்திடலாம்.

எக்ஸெல் தொகுப்பில் தேதி பார்மட் இஷ்டம் போல கிடைக்க

எக்ஸெல் தொகுப்பில் 21–11 என டைப் செய்தால் அது 21 November என மாறிவிடுகிறது. அதற்குப் பதிலாக நான் டைப் செய்த பார்மட்டிலேயே (Format) இருக்க வேண்டும் என்றால் எங்கு மாற்றம் செய்திட வேண்டும்?

"21–11'' என மேற்கோள் குறிக்குள் அதனை டைப் செய்யுங்கள். மீண்டும் சொல்கிறேன், அடைப்புக் குறிக்குள் இவை இருக்க வேண்டும். பின் அது மாறாது.


எக்ஸெல் ஹைலைட்டிங்

எக்ஸெல் வேர்க் ஷீட்டில் நெட்டு மற்றும் படுக்கை வரிசைகளை ஹைலைட் செய்திட விரும்புகிறீர்களா! இதோ இந்த சுருக்கு வழிகளைப் பாருங்கள். மவுஸ் இல்லாமல் இரண்டு கீகளைப் பயன்படுத்தி நெட்டு வரிசையையும் படுக்கை வரிசையையும் ஹைலைட் செய்திடலாம். Ctrl + Spacebar அழுத்தினால் நீங்கள் எந்த செல்லில் இருக்கிறீர்களோ அந்த செல் ஹைலைட் ஆகும். Shift + Spacebar கீகளை அழுத்தினால் எந்த செல்லில் இருக்கிறீர்களோ அந்த செல் இருக்கும் நெட்டு வரிசை ஹைலைட் ஆகும். பல வரிசைகளை இணைத்து ஹைலைட் செய்திட ஷிப்ட் மற்றும் ஆரோ (Shift + Arrow) கீகளை இணைத்துப் பயன்படுத்தலாம்.


வேர்க் புக் (work book) / வேர்க் ஷீட்(work sheet) என்ன வேறுபாடு?

முதலில் இரண்டு சொற்கள் குறிப்பிடுவதில் வேறுபாடு நிச்சயம் இருக்கிறது. ர்க் வேர்புக் என்பது எம்.எஸ். எக்ஸெல் தொகுப்பில் நீங்கள் உங்களுடைய தகவல்களைப் பதிந்து வைக்கும் பைலுக்கு பெயர். வேர்க் ஷீட் அல்லது ஸ்ப்ரெட் ஷீட் (spread sheet) என்பது செல்கள் அடங்கிய ஒரு ஷீட் ஆகும்.

இதில் நீங்கள் தகவல்களைப் பதிந்து வைக்கிறீர்கள். பதியப்படும் டேட்டாக்களை உங்கள் தேவைக்கேற்பப் பிரித்து கணக்குப் போட்டு பார்க்கிறீர்கள். ஒரு வேர்க் புக்கில் பல வேர்க் ஷீட்கள் இருக்கலாம். எனவே வேர்க்புக் என்பது பல வேர்க் ஷீட்கள் அடங்கிய தொகுதி. பொதுவாக ஒரு வேர்க்புக் ஒரு பொருளைப் பற்றியதாக இருக்கும். எடுத்துக் காட்டாக வீட்டு பட்ஜெட் என்று வைத்துக் கொள்ளுங்களேன். இதில் ஒரு வேர்க்ஷீட்டில் உங்கள் செலவுகளை எழுதலாம்; இன்னொன்றில் உங்கள் மக்கள் கல்விச் செலவு குறித்து எழுதலாம்; இப்படி சார்ந்த தனி தகவல்கள் வேர்க் ஷீட்டில் இருக்கும்.

டூப்ளிகேட் பைல் ஒன்று தயாரிக்க

டூப்ளிகேட் பைல் ஒன்று தயாரிக்க

பைல் ஒன்றின் நகலை இன்னொரு டிரைவில் பதிந்து வைப்பது நமக்கு நல்லது. ஓர் இடத்தில் உள்ளது அழிந்து போனால் இன்னொரு இடத்தில் உள்ளதைப் பயன்படுத்தலாம். விண்டோஸ் இது போல டூப்ளிகேட் பைல்களைத் தயாரிக்க பல வழிகளைத் தந்துள்ளது. அவற்றை இங்கு காணலாம்.
டெஸ்க் டாப் அல்லது போல்டரில் உங்களுடைய கண்ட்ரோல் கீயை அழுத்தியவாறு டெஸ்க்டாப்பின் இன்னொரு இடத்திற்கு அல்லது இன்னொரு விண்டோவிற்கு இழுத்துச் செல்லுங்கள். இப்போது அந்த பைலின் ஐகானின் நகல் இழுத்துச் செல்லப்படுவதனைப் பார்க்கலாம். அதில் ஒரு கூட்டல் அடையாளம் இருப்பதனைக் காணலாம். இது பைலுக்கான நகல் ஒன்று அமைக்கப்பட இருக்கிறது என்பதனைக் குறிக்கிறது.

இப்போது மவுஸ் பட்டனை விட்டுவிட்டால் அந்த இடத்தில் பைல் அல்லது போல்டரின் இன்னொரு நகல் இருப்பதனைக் காணலாம். அதன் பெயர் இருக்கும் இடத்தில் Copy of என்ற முன் ஒட்டுடன் பைலின் பெயர் இருப்பதனைக் காணலாம். இதனை நீங்கள் வேறு பெயரில் இருக்க வேண்டும் என எண்ணினால் அதன் பெயரை மாற்றிக் கொள்ளலாம். இந்த செயல்பாட்டிற்கு இன்னொரு வழியும் உள்ளது. பைலின் பெயரில் கர்சரை வைத்து மவுஸின் வலது பக்கத்தினைக் கிளிக் செய்து அழுத்திப் பிடிக்கவும். பிடித்தவாறே அதனை அப்படியே இழுத்துச் சென்று எந்த இன்னொரு இடத்தில் அதாவது டிரைவில் அல்லது போல்டரில் இந்த பைலின் இன்னொரு நகல் வேண்டும் என எண்ணுகிறீர்களோ அந்த இடத்திற்குக் கொண்டு சென்று மவுஸை அழுத்துவதனை விட்டுவிடவும். இப்போது ஒரு சிறிய கட்டமாக மெனு ஒன்று தோன்றும். அதில் Copy Here, Move here, Create Shortcut here, Cancel என்ற நான்கு பிரிவுகள் இருக்கும். முதல் கட்டத்தினைக் (Copy Here) கிளிக் செய்தால் பைலின் நகல் ஒன்று நீங்கள் இருக்கும் போல்டரில் அல்லது டைரக்டரியில் கிடைக்கும். இரண்டாவது (Move here) கட்டத்தினைத் தேர்ந்தெடுத்தால் இங்கிருக்கும் பைல் அங்கு சென்று பதியப்படும். மூன்றாவது கட்டத்தினைத் (Create Shortcut here) தேர்ந்தெடுத்தால் பைலுக்கான ஷார்ட் கட் எனப்படும் சுருக்கு வழி ஏற்படுத்தப்படும். இதெல்லாம் வேண்டாம் ஆளை விடுங்க என்று எண்ணுகிறீர்களா. கடைசியில் உள்ள Cancel என்பதனைத் தேர்ந்தெடுங்கள்.

கம்ப்யூட்டர் பயன்படுத்தும் பேட்டரிகளின் வகைகள்

கம்ப்யூட்டர் மின்சாரத்தில் யு.பி.எஸ். போன்ற சாதனங்களின் துணை கொண்டு இயங்கினாலும் அதனுள் சில பேட்டரிகள் இருக்கின்றன. அவை எவை? என்ன வகை என்று பார்க்கலாம். #

கம்ப்யூட்டர் பேட்டரிகளை மூன்று வகைப் படுத்தலாம். பேக்கப் பேட்டரி (backup battery), பிரிட்ஜ் பேட்டரி (bridge battery), மற்றும் மெயின் பேட்டரி (main battery). பேக்கப் பேட்டரியை சீமாஸ் பேட்டரி (CMOS battery) என்றும் சொல்கிறோம். கம்ப்யூட்டரில் நாம் மேற்கொள்கிற செட்டிங்குகளை எல்லாம் இந்த பேட்டரிதான் உயிரோடு வைத்திருக்க உதவுகிறது. கம்ப்யூட்டரை இயங்காமல் மின்சாரத்தை நிறுத்தி வைத்த போதும் ஏற்கனவே உள்ளீடு செய்த தகவல்களை மெமரியில் வைத்திருக்க உதவுகிறது. நேரம், தேதி போன்றவற்றையும் இதுதான் நினைவில் வைத்திருக்க உதவுகிறது. அதனால் தான் இந்த தகவல்களை எல்லாம் ஒவ்வொரு முறை ரீபூட் செய்திடும்போதும் நாம் கம்ப்யூட்டருக்குள் இட வேண்டியதில்லை. பிரிட்ஜ் பேட்டரி என்பது லேப்டாப் கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படுவது.

மெயின் பேட்டரிக்குப் பதிலாக இதனைக் கம்ப்யூட்டரில் வைத்துப் பயனபடுத்துகிறோம். இதனைப் பயன்படுத்தி மெயின் பேட்டரி முழுவதுமாகச் செயல் இழக்கவிடாமல் வைத்திருக்கலாம். மெயின் பேட்டரியும் லேப் டாப் கம்ப்யூட்டரில்தான் பயன்படுத்தப்படுகிறது. லேப் டாப் கம்ப்யூட்டரை மெயின் பிளக்கில் இணைத்துப் பயன்படுத்தாத போது அதற்குத் தேவையான மின்சக்தியை இந்த வகை பேட்டரிகள் தான் தருகின்றன.

இனி இந்த பேட்டரிகளில் திறன் அடிப்படையில், அதன் உட்பொருள் அடிப்படையில் உள்ள சில வகைகளை அறியலாம். இவை LIION, NICAD, LIPOLYMER, NIMH and SLA என வகைப்படும். முதல் வகையான LIION என்பது Lithium Ion என்பதன் சுருக்கமாகும். பேட்டரிகளைப் பயன்படுத்தி மின்சாரம் பயன்படுத்தப்படுகையில் உயர் அழுத்த மின்சக்தி தேவைப்படும்போது இந்த வகை பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. இதற்கு ஒரு பாதுகாப்பு சர்க்யூட் (protector circuit) தேவைப்படும். இவை சற்று விலை கூடுதலானவை.

அடுத்ததாக NICAD என்பது Nickel Cadmium ஐக் குறிக்கும். இவ்வகை பேட்டரிகள் தான் கம்ப்யூட்டர் உலகில் அதிகம் பேசப்படுவதும் பயன்படுத்தப்படுவதும் ஆகும். நீண்ட நாள் உழைக்கும் வகை வேண்டும்போதும் அதிக மின்சக்தி ஓட்டம் தேவைப்படுகையிலும் இவ்வகை பேட்டரிகளே நாடப்படுகின்றன. இவற்றின் விலையும் வாங்கக் கூடிய வகையில் இருக்கும்.

NIMH என்பது Nickel Metal Hydride ஐக் குறிக்கும். இது நிக்கல் கேட்மியம் பேட்டரிகளைக் காட்டிலும் மேம்படுத்தப்பட்ட ஒன்றாகும். இதனுடைய சைக்கிள் லைப் நிக்கல் கேட்மியம் பேட்டரியைக் காட்டிலும் குறைவானதாகும். குறைவான கரண்ட் லோட் கொடுக்கும்.

அடுத்த வகை SLA எனப்படும் Sealed Lead Acid Battery பேட்டரிகளாகும். அதிகமான மின்சக்தி தேவைப்படுகையில் இவ்வகை பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. இது அதிக எடையுடையதாக இருக்கும். அடுத்தது லித்தியம் பாலிமர் பேட்டரி. இதனை LIPOLYMER என அழைக்கிறார்கள். இவை LIION வகை பேட்டரி வகையின் குறைந்த விலை பேட்டரியாகும்.

தடை செய்யப்படும் தளத்தைப் பார்க்க

இன்டர்நெட் தளங்களைப் பார்வையிடுகையில் அல்லது மின் அஞ்சல்களைப் பார்வையிடுகையில் திடீரென முளைத்து எழும் பாப் அப் சமாச்சாரங்கள் நமக்கு எரிச்சல் தருபவை ஆகும். எனவே தான் இப்போது பல கம்ப்யூட்டர்களில் பாப் அப் பிளாக்கர்கள் என்னும் தடைகள் நிறுவப்படுகின்றன. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் இது இணைந்தே உள்ளது.

ஆனால் சில வேளைகளில் இவற்றை நாம் பார்க்க வேண்டிய சூழ்நிலைகளும் வரும். எடுத்துக் காட்டாக நாம் ஒரு வெப்சைட்டைப் பார்த்துக் கொண்டிருப்போம். அப்போது தொடர்பான வெப்சைட் முகவரிக்கு நமக்கு லிங்க் கிடைக்க இருக்கும். இதனை பாப் அப் பிளாக்கர் தடுத்துவிடும். இவ்வாறு தடுக்கப்படும் லிங்க்குகளைக் கிளிக் செய்து பார்க்க விரும்பினால் என்ன செய்வது? இவ்வாறு தடுக்கப்படுகையில் கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு மீண்டும் அந்த லிங்க்கில் கிளிக் செய்திடவும்.

இப்போது கம்ப்யூட்டரில் நீங்கள் அந்த தளத்தைப் பார்க்கலாம் என்று செய்தி வரும். தளமும் கிடைக்கும். ஆனால் பாப் அப் பிளாக்கர் தொடர்ந்து தன் பணியைச் செய்துகொண்டு இருக்கும்.

அட்டவணை செல்களை இணைக்கவும் பிரிக்கவும் வழிகள்

வேர்டில் டேபிள் ஒன்றை உருவாக்குகிறீர்கள். திடீரென்று ஏதேனும் ஓர் இடத்தில் இந்த இரண்டு செல்களையும் பிரித்துக் காட்டுவதற்குப் பதிலாக இணைந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணுகிறீர்களா? ஆங்கிலத்தில் இதைத்தானே மெர்ஜ் செல் என்று கூறுகிறார்கள். எப்படி இந்த செல்களை மட்டும் இணைப்பது? என்று யோசிக்கிறீர்களா? அதே போல ஏதேனும் ஒரு செல்லை சிறு பிரிவுகளாக அமைத்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணுகிறீர்களா? இதை ஸ்பிளிட் செல் என்றல்லவா சொல்கிறோம். ஆம் இவற்றை எப்படி மேற்கொள்வது என்று இங்கு பார்க்கலாம். படத்தில் பாருங்கள். மூன்று செல்களாக இருவாக்கிலும் முதலில் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்ததாகக் கீழே ஒரு வரிசையில் உள்ள மூன்று செல்களும் இணைக்கப்பட்டுள்ளன. இன்னும் வளதுபுறம் பாருங்கள். மூன்றாவது வரிசையில் உள்ள ஒரு செல் இரு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த மெர்ஜ் மற்றும் ஸ்பிளிட் செயல்பாடுகளை மேற்கொள்ள என்ன கட்டளைகள் கொடுக்க வேண்டும் என்று பார்ப்போம்.

முதலில் செல்களை இணைப்பது, (மெர்ஜ் செய்வது) எப்படி என்று பார்ப்போம். இங்கு இணைப்பது என்பது இரண்டு அல்லது அதற்கும் மேலே உள்ள செல்களின் இடையே உள்ள கோடுகளை எடுத்து ஒரே பெரிய செல்லாக அமைப்பது. இதற்கு பெரிய கட்டளைகள் எல்லாம் வேண்டாம். நம்புங்கள். இரண்டு மவுஸ் கிளிக்குகளில் மேற்கொள்ளலாம். முதலில் எந்த இரு செல்களை மெர்ஜ் செய்திட வேண்டுமோ அவற்றை செலக்ட் செய்திடவும். மவுஸ் பட்டனை அழுத்திப் பிடித்து தேவையான செல்கள் செலக்ட் ஆகும் வரை வைத்திருந்து பின் விடுவிக்கவும். இப்போது அந்த செல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். பின் செய்ய வேண்டிய வேலைக்கு இரு வழிகள் உள்ளன. Tables and Borders toolbar என்ற டூல் பாருக்குச் செல்லுங்கள். இதில் உள்ள Merge button என்பதனைக் கிளிக் செய்திடுங்கள். அல்லது டேபிள் (Table) மெனு சென்று (Merge Cells) என்ற ஆப்ஷனை மவுஸால் தட்டவும். அல்லது டேபிள் மீதாக ரைட் கிளிக் செய்து அதில் Merge Cells என்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். இப்போது பல செல்கள் ஒன்றாக இணைந்து ஒரே கட்டமாக ஆவதனைப் பார்க்கலாம்.

இனி அடுத்து ஸ்பிளிட் செய்வது குறித்துப் பார்ப்போம். மெர்ஜ் செல் என்ற செயல்முறைக்கு நேர் எதிரானதுதான் ஸ்பிளிட் செய்வது. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பிரித்து அமைப்பதுதான் ஸ்பிளிட் செல் ஆகும். இதில் ஒன்றை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஸ்பிளிட் ஆகும் போது சில வேளைகளில் டேபிள் பெரிதாகும். ஏனென்றால் ஒரு செல் குறைந்த பட்சம் ஓர் அளவில் இருக்க வேண்டும். பிரிக்க வேண்டிய செல்களை முன்பு கூறியபடி செலக்ட் செய்திடவும். அதன்பின் Split Cells என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இங்கும் டேபிள் மெனு சென்று Split Cells ஆப்ஷன்ஸ் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். அல்லது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Split Cells மீதாகக் கிளிக் செய்திடவும். இப்போது ஸ்பிளிட் செல் விண்டோ ஒன்று திறக்கப்படும். இதில் நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள செல்லின் உள்ளாக எத்தனை படுக்கை வரிசை (number of rows) மற்றும் நெட்டு வரிசை (number of columns) இருக்க வேண்டும் என்பதனை இடுக. பிறகு அந்தக் கட்டத்தில் ஓகே கிளிக் செய்திடவும்.


நேரடியாக பெரிய எழுத்துக்கள் கிடைக்க

வேர்ட் தொகுப்பில் ஆங்கிலச் சொல்லின் அனைத்து எழுத்துக்களையும் பெரிய எழுத்துக்களிலோ, அல்லது முதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்துடனோ வேண்டும் என்றால் அதனைத் தேர்ந்தெடுத்து ஷிப்ட் மற்றும் எப்3 கீகளை அழுத்துகிறோம். இது நமக்கு மூன்று ஆப்ஷன்களைத் தருகிறது. முற்றிலும் சிறிய எழுத்துக்கள், முதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்து மற்றும் அனைத்தும் பெரிய எழுத்து. எனக்கு இந்த சுழற்சி எல்லாம் வேண்டாம்.

முதல் முயற்சியிலேயே அனைத்து எழுத்துக்களும் பெரிய எழுத்துக்களில் வேண்டும் என்றால் என எண்ணுபவர்களுக்கு ஒரு சுருக்க வழி உள்ளது. மாற்ற வேண்டிய சொல்லில் கொண்டு போய் உங்கள் கர்சரை நிறுத்துங்கள். அந்த சொல்லைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை. அதன் பின் கண்ட்ரோல் + ஷிப்ட் +ஏ (Ctrl + Shift + A) அழுத்தவும். நீங்கள் விரும்பியபடி அனைத்து எழுத்துக்களும் பெரிய எழுத்துக்களாக அமையும். மீண்டும் அதே போல கீகளை அழுத்த பழைய நிலைக்குத் திரும்பும்.

ஒரு சொல் என்றால் இதே போல் செயல்படலாம். ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் எனில் என்ன செய்திட வேண்டும்? அப்போது சொற்களை செலக்ட் செய்தே ஆக வேண்டும். தேர்ந்தெடுத்துவிட்டு எங்கு வேண்டுமானாலும் கர்சரைக் கொண்டு சென்று வைத்துப் பின் Ctrl + Shift + A கீகளை அழுத்த வேண்டும். கேப்பிடல் லெட்டர்களில் தலைப்பு மற்றும் பெயர்களை அமைக்க விரும்புவர்களுக்கு இது ஒரு நல்ல வழி !!

கம்ப்யூட்டர் கேம்ஸ் நல்லதும் கெட்டதும்

விடியோ கேம்ஸ் விளையாட தனியாக விடியோ கேம் விளையாடும் சாதனம் தேவையில்லை. கம்ப்யூட்டரிலேயே அருமையாக விளையாடலாம். அதற்கான புரோகிராம்களை அமைத்து இயக்கினாலே போதும். ஆனால் பலரும் இதற்கு அடிமை ஆகிறார்கள். பிறரின் வெறுப்புக்கு ஆளாகிறார்கள். பெற்றோர்கள், பெண் நண்பர்கள், மனைவிகள் நிச்சயமாய் நாம் இந்த விளையாட்டுக்களை விளையாடுவதை விரும்புவதில்லை. ஏனென்றால் நாம் அவர்களையும் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் மறக்கிறோம் அல்லவா? ஆனால் எதிலும் நன்மைகளும் தீமைகளும் இருப்பது போல இவ்வகை விளையாட்டுக் களிலும் நன்மைகளும் தீமைகளும் உள்ளன. அவற்றை இங்கு காணலாம். முதலில் நன்மைகளைக் காணலாம்.

1. மன அழுத்தக் குறைவு : நம்மில் மன அழுத்தம் ஏற்படாவதர்களே இல்லை எனலாம். ஏதேனும் ஒரு செயல் நம்மை அதிகம் சிந்திக்க வைத்து நம்மை அழுத்திக் கொண்டே தான் இருக்கும். இந்தச் சூழ்நிலையில் கம்ப்யூட்டருடனே வரும் டெட்ரிஸ் மற்றும் மைன்ஸ்வீப்பர் போன்ற விளையாட்டுக்களை விளையாடுவது நம் மன அழுத்தத்தினைக் குறைக்கும். விளையாட்டுக்கள் எவ்வளவுக்கு எவ்வளவு நம் திறமையைச் சோதிப்பதாக இருக்கிறதோ அந்த அளவிற்கு நம் மன அழுத்தம் சிறிது சிறிதாக விலகத் தொடங்கும்.

2. லாஜிக் திறன் வளர்ச்சி: அநேகமாக அனைத்து விளையாட்டுக்களும் நம் சிந்தனையை முறைப் படுத்துகின்றன. இந்நாளைய கல்வி முறை கற்றுக் கொடுக்க மறந்த திறன்களில் இதுவும் ஒன்று. தர்க்க ரீதியான சிந்தனை யை வளர்த்துக் கொள்வது நம் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான ஒன்று. இந்த கம்ப்யூட்டர் மற்றும் விடியோ விளையாட்டுக்கள் இதனை வளர்க்கின்றன.

3. விரைந்து முடிவெடுக்கும் திறன் : தர்க்க ரீதியான சிந்தனை என்பது தேவையான ஒன்று தான். ஆனால் இது நேரத்தை வளர்த்து சில நேரங்களில் நம்மை மிக மெதுவாகச் செயல்பட வைத்திடும். நமக்கு வேகமான சிந்தனைத் திறன் அவசியம் தேவைப்படுகிறது. இதனால் நாம் விரைவாக சில முடிவுகளை எடுக்க முடியும். பெரும்பாலான விளையாட்டுக்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டிய செயல்களைப் பட்டியல் படுத்தி நம்மை விரைவாக முடிவெடுத்து செயல்பட வைக்கின்றன. எனவே கம்ப்யூட்டர் விளையாட்டுக்களை விளையாடுவதன் மூலம் இந்த விரைவாக முடிவெடுக்கும் திறனை நாம் வளர்த்துக் கொள்ளலாம்.

பாதகமான விளைவுகள் என்று எடுத்துக் கொண்டால் ஒரு சிலவற்றைப் பட்டியலிடலாம். கம்ப்யூட்டரை வேறு சில கணிக்கும் பணிகளுக்குப் பயன்படுத்தும் எண்ணம் மறைந்துவிடும். எப்போதும் விளையாட்டுக்களையே இயக்கி விளையாடச் சொல்லும். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் அலுவலகத்தினை விட்டுச் செல்கையில் தன் மேஜையில் உள்ள கம்ப்யூட்டரில் ஏதேனும் ஒரு விளையாட்டினை அரை மணி விளையாடிவிட்டுத்தான் செல்கிறார். ஏறத்தாழ அடிமை ஆகிவிட்டார் என்றே சொல்ல வேண்டும். இதனால் வழக்கமான பணிகள் பாதிக்கப்படும். எதற்கு கம்ப்யூட்டரை வாங்கினோமோ அந்த நோக்கம் போய் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வழக்கம் வந்துவிடும். இதனால் கல்வி கற்றல், ஆய்வு மேற்கொள்ளல் மற்றும் அலுவலகப் பணிகளை இயக்குதல் ஆகியவற்றிற்கென கம்ப்யூட்டர் வாங்கியவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் பின் தங்கும் நிலை ஏற்படும். குறிப்பாக மாணவர்களுக்குக் கம்ப்யூட்டர் வாங்கிக் கொடுக்கும் அவர்களுடைய பெற்றோர்கள் இதனைக் கண்காணிக்க வேண்டும். தங்கள் குழந்தைகள் கம்ப்யூட்டரில் விளையாட் டுக்களை விளையாடினால் முதலில் அவர்களைத் தட்டிக் கொடுத்துவிட்டுப் பின்னர் அவர்களின் விளையாடும் நேரம் அதிகரித்தால் கொஞ்சம் கொஞ்சமாக எச்சரித்து அவர்களை அப்பழக்கத் திலிருந்து விலக்க வேண்டும். அலுவலகத்தில் ஊழியர்களைக் கண்காணிக்கும் பொறுப்பில் இருப்பவர்கள் இந்த எச்சரிக்கை நடவடிக்கையைச் சிறிது தீவிரமாகவே மேற்கொண்டு பணி நேரத்தில் யாரும் கம்ப்யூட்டர் விளையாட்டுக்களில் ஈடுபடாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் கம்ப்யூட்டர் விளையாட்டுக்களும் கத்தியைக் கையாள்வது போன்ற ஒரு செயலாகத்தான் தெரியும். கவனமாக நமக்குத் தேவையான அளவில் கையாண்டுவிட்டு பின்னர் கத்தியைப் பாதுகாப்பாக வைத்துவிடுவது போல விளையாட்டுக்களை ஓய்விற்காகவும் புத்துணர்ச்சி பெறுவதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

புதன், 27 ஜனவரி, 2010

புலிகளின் உறுப்பினராகும் உமா மகேஸ்வரன் – ஐயர்

கடத்தல் படகில் இலங்கை வந்து இறங்கியதும், உடனடியாகவே இயக்கவேலைகளைப் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது.

யாழ்ப்பாணத்திலிருந்து ஓரிரு நாட்கள் நிலைமைகளை அவதானித்த பின்னர், எமது பண்ணைக்குச் செல்கிறேன். நான் இந்தியாவில் இருந்த வேளையில் பன்றிக்கெய்த குளம் என்ற இடத்தில் ஒரு பண்ணை 50 ஆயிரம் ரூபாய்கள் பணம் கொடுத்து வாங்கப்படுகிறது. இது இந்தப் பண்ணை புளியங்குளத்திலிருந்து அதிக தூரத்தில் அமைந்திருக்கவில்லை
 . அந்தப் பண்ணையிக்கு முதலில் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட, அதனைத் தேடிச் செல்கிறேன். அங்கே சென்று எமது உறுப்பினர்களுடன் கள நிலைமைகள் குறித்தும், புதிய தொடர்புகள்
 குறித்தும் உரையாடுகிறேன்.

ஆற்றல் மிக்க விழிகள்!



""சிவாஜியின் மிகப்பெரிய சொத்து அவருடைய ஒளிமிக்க, உயிர்ப்புள்ள கண்கள்தான். அந்த கண்களை வைத்துத்தான் பரிவை, பாசத்தை, பயத்தை, கோபத்தை, அழுகையை, ஆச்சர்யத்தை, அப்பாவித்தனத்தை, ஏக்கத்தை, ஏமாற்றத்தை, வீரத்தை, விவேகத்தை அவர் அதிகமாக வெளிப்படுத்தினார். "பாசமலர்' படத்தில் "மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்...' பாடல் வரிகள் துவங்குவதற்கு முன் பால் தம்ளர் கையில் ஏந்தி வந்தவர், கண்ணுறங்கும் தங்கையைப் பார்த்து, வட்டக் கருவிழியின் அடியில் இலேசாக நீர் தேக்கி, பாசத்தை வெளிப்படுத்துவார்.

சிவாஜியின் வாழ்க்கைக் குறிப்பு (2)

அரசியல் வாழ்க்கை



1955 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், 1961 முதல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆனார். 1987ல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அதை விட்டு விலகி, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்சியொன்றை தொடங்கினார். எனினும் நடிகனாக அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அரசியலுக்குத் துணைவரவில்லை. இறுதிக்காலத்தில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.




விருதுகளும் கௌரவங்களும்

ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ,1960), சிறந்த நடிகருக்கான விருது.
பத்ம ஸ்ரீ விருது (1966)
பத்ம பூஷன் விருது (1984)
செவாலியே விருது (1994)
தாதா சாகேப் பால்கே விருது (1997)
1962ல் அமெரிக்க நாட்டின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் 'ஒரு நாள் நகரத்தந்தையாகக்' கௌரவிக்கப்பட்டார்.

நடித்த திரைப்படங்கள்

படையப்பா (1999) .... படையப்பாவின் தந்தை வேடம்
மன்னவரு சின்னவரு (1999)
பூப்பறிக்க வருகிறோம் (1999)
என் ஆசை ராசாவே (1998)
ஒரு யாத்ர மொழி (மலையாளம்) (1997)
கோபுர தீபம் (1997)
ஒன்ஸ் மோர் (1997)
பசும்பொன் (1995)
எங்கிருந்தோ வந்தான் (1995)
பாரம்பரியம் (1993)
சின்ன மருமகள் (1992)
நாங்கள் (1992)
முதல் குரல் (1992)
க்னோக் அவுட் (1992)
தேவர் மகன் (1992) .... பெரிய தேவராக
ஞானப் பறவை (1991)
காவலுக்குக் கெட்டிக்காரன் (1990)
புதிய வானம் (1988)
என் தமிழ் என் மக்கள் (1988)
அன்புள்ள அப்பா (1987)
வீரபாண்டியன் (1987)
தாம்பத்தியம் (1987)
கிருஷ்ணன் வந்தான் (1987)
குடும்பம் ஒரு கோயில் (1987)
முத்துக்கள் மூன்று (1987)
ராஜ மரியாதை (1987)
ஜல்லிக்கட்டு (1987)
விஷ்வனாத நாயக்குடு (தெலுங்கு) (1987)
தாய்க்கு ஒரு தாலாட்டு (1986)
சாதனை (1986)
மண்ணுக்குள் வைரம் (1986)
லக்ஸ்மி வந்தாச்சு (1986)
ஆனந்தக் கண்ணீர் (1986)
விடுதலை (திரைப்படம்) (1986)
மருமகள் (1986)
முதல் மரியாதை(1985) .... மலைச்சாமி வேடம்
படிக்காதவன் (1985)
ராஜ ரிஷி (1985)
பந்தம் (1985)
நீதியின் நிழல் (1985)
படிக்காத பண்ணையார் (1985)
நாம் இருவர் (1985)
நேர்மை (1985)
இரு மேதைகள் (1984)
வாழ்க்கை (1984)
வம்ச விளக்கு (1984)
சரித்திர நாயகன் (1984)
சிரஞ்சீவி (1984)
எழுதாத சட்டங்கள் (1984)
தராசு (1984)
திருப்பம் (1984)
சிம்ம சொப்பனம் (1984)
தாவனிக் கனவுகள் (1983)
உருவங்கள் மாறலாம் (1983)
சுமங்கலி (1983)
சந்திப்பு (1983)
உண்மைகள் (1983)
மிருதங்கச் சக்கரவர்த்தி (1983)
நீதிபதி (1983)
வெள்ளை ரோஜா (1983)
காஷ்மிர் காதலி (1983)
வசந்தத்தில் ஒரு நாள் (1982)
வா கண்ணா வா (1982)
தியாகி (1982)
துணை (1982)
தீர்ப்பு (1982)
சங்கிலி (1982)
பரீட்சைக்கு நேரமாச்சு (1982)
ஊரும் உறவும் (1982)
ஊருக்கு ஒரு பிள்ளை (1982)
நெஞ்சங்கள் (1982)
ஹிட்லர் உமாநாத் (1982)
கருடா சௌக்கியமா (1982)
லாரி டிரைவர் ராஜாக்கண்ணு (1981)
கீழ்வானம் சிவக்கும் (1981)
கல்தூன் (1981)
அமரகாவியம் (1981)
சத்ய சுந்தரம் (1981)
ரிஷி மூலம் (1980)
இரத்த பாசம் (1980)
விஷ்வரூபம் (1980)
எமனுக்கு எமன் (1980)
தர்ம ராஜா (1980)
மோகனப் புன்னகை (1980)
மாடி வீட்டு ஏழை (1980)
நான் வாழ வைப்பேன் (1979) .... ரவி வேடம்
வெற்றிக்கு ஒருவன் (1979)
திரிசூலம் (1979)
பட்டாகத்தி பைரவன் (1979)
நல்லதொரு குடும்பம் (1979)
நான் வாழவைப்பேன் (1979)
கவரி மான் (1979)
இமயம் (1979)
வாழ்க்கை அலைகள் (1978)
என்னைப் போல் ஒருவன் (1978)
ஜெனெரல் சக்கரவர்த்தி (1978)
ஜஸ்டிஸ் கோபினாத் (1978)
பைலட் பிரேம்நாத் (1978)
தியாகம் (1978)
புண்ணிய பூமி (1978)
அந்தமான் காதலி (1977)
சானக்ய சந்திரகுப்தா (தெலுங்கு) (1977)
அண்ணன் ஒரு கோயில் (1977)
தீபம் (1977)
இளைய தலைமுறை (1977)
நாம் பிறந்த மண் (1977)
அவன் ஒரு சரித்திரம் (1976)
உத்தமன் (1976)
உனக்காக நான் (1976)
சத்தியம் (1976)
ரோஜாவின் ராஜா (1976)
கிரகப் பிரவேசம் (1976)
டாக்டர் சிவா (1975) .... டாக்டர் சிவா வேடம்
அன்பே ஆருயிரே (1975)
அவன் தான் மனிதன் (1975)
தங்கப்பதக்கம் (1974)
அன்பைத்தேடி (1974)
என் மகன் (1974)
தீர்க்க சுமங்கலி (1974)
பக்த துகாரம் (தெலுங்கு) (1973) .... சிவாஜி
கௌரவம் (1973)
ராஜபாட் ரங்கதுரை
இராஜராஜசோழன் 1973)
பாரத விலாஸ் 1973)
பங்காரு பாபு (தெலுங்கு)(1972)
ஞான ஒளி (1972) .... அந்தொனி வேடம்
வசந்த மாளிகை (1972)
நீதி (1972)
சவாலே சமாளி (1971)
மூன்று தெய்வங்கள் (1971)
சுமதி என் சுந்தரி (1971)
பாபு (1971)
குலமா குணமா (1971)
தங்கைக்காக (1971)
இரு துருவம் (1971)
வியட்னாம் வீடு (1970) .... பத்மநாப ஐயர் வேடம்
விளையாட்டுப் பிள்ளை (1970)
எங்கள் தங்கம் (1970)
எங்க மாமா (1970)
பாதுகாப்பு (1970)
காவல் தெய்வம் (1969)
தெய்வ மகன் (1969)
சிவந்த மண் (1969)
தங்கச் சுரங்கம் (1969)
குருதட்சனை (1969)
தில்லானா மோகனாம்பாள் (1968) .... சிக்கில் சண்முகசுந்தரம் வேடம்
உயர்ந்த மனிதன் (1968)
கௌரி (1968)
எங்க ஊரு ராஜா (1968)
திருமால் பெருமை (1968)
கலாட்டா கல்யாணம் (1968)
என் தம்பி (1968)
இரு மலர்கள் (1967)
கந்தன் கருணை (1967) .... வீரபாகு வேடம்
தங்கை (1967) .... மதன் வேடம்
திருவருட்செல்வர்(1967)
மோட்டார் சுந்தரம் பிள்ளை (1966) .... சுந்தரம் பிள்ளை
மகாகவி காளிதாஸ் (1966)
செல்வம் (1966)
திருவிளையாடல் (1965) .... சிவனின் அவதாரங்களாக
சாந்தி (1965)
பழனி (1965)
அன்புக்கரங்கள் (1965)
புதிய பறவை (1964)
கை கொடுத்த தெய்வம் (1964)
நவராத்திரி (1964)
ராமதாசு (தெலுங்கு) (1964)
பச்சை விளக்கு (1964)
இருவர் உள்ளம் (1963) .... செல்வம் வேடம்
கர்ணன் (1963) .... கர்ணன் வேடம்
பார் மகளே பார் (1963)
ரத்த திலகம் (1963) .... குமார் வேடம்
அறிவாளி (1963)
குலமகள் ராதை (1963)
குங்குமம் (1963)
அன்னை இல்லம் (1963)
பலே பாண்டியா (1962)
பார்த்தால் பசி தீரும் (1962)
பவித்ர பிரேமா (தெலுங்கு) (1962)
ஆலயமணி (1962)
நிச்சய தாம்பூலம் (1962)
படித்தால் மட்டும் போதுமா (1962)
வடிவுக்கு வளைகாப்பு (1962)
கப்பலோட்டிய தமிழன் (1961) .... வ.உ சிதம்பரம்பிள்ளை வேடம்
பாலும் பழமும் (1961)
பாப்பா பரிகாரம் (1961)
பாசமலர் (1961) .... ராஜசேகரன் வேடம்
பாவமன்னிப்பு (1961) .... ரஹிம் வேடம்]
புனர் ஜென்மம் - (1961)
படிக்காத மேதை (1960)
பாவை விளக்கு (1960)
இரும்புத்திரை (1960)
தெய்வப் பிறவி (1960)
பில்லலு தெச்சின சாலனி ராஜ்ஜியம் (தெலுங்கு) (1960)
மரகதம் (1959) .... வரேந்திரன்
வீரபாண்டியக் கட்டப்பொம்மன் (1959) .... கட்டப்பொம்மன் வேடம்
பாகப்பிரிவினை (1959)
தாயைப்போல் பிள்ளை நூலைப்போல் சேலை (1959)
சபாஷ் மீனா (1958)
ஸ்கூல் மாஸ்டர் (1958)
சாரங்கதார (1958)
உத்தமபுத்திரன் (1958)
காத்தவராயன் (1958)
அம்பிகாபதி (1957) .... அம்பிகாபதி வேடம்
மக்களை பெற்ற மகராசி (1957) .... செங்கோடையன்
தங்கமலை இரகசியம் (1957)
வணங்காமுடி (1957)
தால வன்சானி வீருடு (தெலுங்கு) (1957)
புதையல் (1957)
பாக்யவதி (1957)
அமரதீபம் (1956) .... அசோல்
பெண்ணின் பெருமை(1956)
ரங்கூன் ராதா (1956) .... தர்மலிங்க முதலியார் வேடம்
தெனாலி இராமன் (1956) .... தெனாலி இராமக்கிருஷ்ணா
கள்வனின் காதலி (1955) .... முத்தையன்
மங்கையர் திலகம் (1955) .... வாசு வேடம்
முதல் தேதி (1955) .... சிவஞானம்
கூண்டுக்கிளி (1954)
அந்த நாள் (1954) (சிவாஜி கணேசன் வேடம்)
எதிர்பாராதது (1954) .... சுந்தர் வேடம்
மனோகரா (1954) .... மனோகரா வேடம்
அன்பு (1954)
பூங்கோதை (1954)
பர்தேசி (1953) .... ஆனந்த் வேடம்
பெம்புடு கொடுக்கு (தெலுங்கு) (1953) .... மோகன் வேடம்
பராசக்தி (1952) .... குணசேகரன் வேடம்

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல