நான்கைந்து வீடுகள் கட்டக் கூடிய இடப்பரப்பில் அந்த வீடு தனியாக அமைந்துள்ளது, அந்த வீட்டின் அழகிற்கும், கவர்ச்சிக்கும் காரணமாக இருக்கலாம்.
‘வாஸ்து சாஸ்திரப்படி கட்டினார்களோ, இல்லையோ தெரியாது. ஆனால் கட்டடக் கலைஞர் ஒருவரின் கலை வண்ணம் அவ்வீட்டில் புலனாகிறது.
வீட்டின் முன்பக்கம் ‘இன்’, ‘அவுட்’ எழுதப்பட்ட இரண்டு வாயில்கள். அதில் ஒன்நில் ‘கடிநாய் கவனம்’ அநிவிப்புப் பலகை கூட அழகான எழுத்தில் இரண்டு மொழிகனில் எழுதப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டுள்ளது.
நாய் உண்டோ இல்லையோ ‘கடிநாய் கவனம்’ அநிவிப்பு பலகை மாட்டுவது கொழும்பிலுள்ள பெரிய வீடுகனில் பெசனாகிவிட்டது. வீட்டிற்கும் முன்வாசலுக்குமிடையே அழகானதொரு பூந்தோட்டம்.
பூந்தோட்டத்தின் நடுவே ஒரு தேன்கூடு. அதற்குச் சற்றுத் தூரத்தில் ‘லவ்பேட்ஸ்’ பறவைக் கூடும், அதனருகே அல்சியேசன் நாய்க் கூடும் அமைந்துள்ளன.
வீட்டின் மாடியில் தொங்கு தோட்டம் வேறு, லக்கலைப் பூந்தோட்டத்தை ஞாபகப்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது.
இத்தனையும் சேர்ந்து வீதியில் போவோர் வருவோரையெல்லாம் ஒரு தரம் நின்று பார்த்துவிட்டுச் செல்லத் தூண்டும் வகையில் அமைந்துள்ளதால் புதிதாக மட்டுமல்ல வழக்கமாக வருவோர் போவோர் கூட ஒரு தரம் நின்று பார்த்துவிட்டே செல்வர்.
வீட்டோடு பழக்கப்பட்டவர்களைத் தவிர வேறுயாரும் உள்ளே நுழைந்தால் நாய் குரைக்கும் சப்தம் காலி வீதி தொடக்கம், கடற்கரை வீதி வரை கேட்கும்.
‘ஹெப்பி ஹோம்’ என்ற பெயர் அந்த வீட்டிற்கு பொருத்தமா இல்லையா என்பதை பொறுத்திருந்து வாசகர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
பூந்தோட்டம், தேன்கூடு, குருவிக்கூடு, நாய்க்கூடு என்பவைகளைக் கவனிக்க ஒருவர். அவர் பெயர் ‘ஆதங்காக்கா’.
ஆதங்காக்கா, கார்ச்சாரதி, கடைக்குப் போகும் பையன் இவர்கள் தங்குவதற்கும், குனிப்பதற்கும், மலசலம் கழிப்பதற்குமென கார்க் கராஜ்ஜோடு சேர்ந்தாற் போல் இரண்டு அறைகள்.
இந்த இரண்டு அறைகளும் வீட்டோடு சேர்ந்தே உள்ளதா? அல்லது தனித்தனியானதா? என்று இலகுவில் கண்டுபிடிக்க முடியாத அளவு திட்டமிட்டே கட்டப்பட்டுள்ளதால் வீட்டின் விலாசத்தையும், அழகையும் கூட்டிக்காட்டும் அம்சமாக இந்த அறைகள் உள்ளன.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கும் இந்த வீட்டிற்கும் எதுவித தொடர்பும் கிடையாது. இந்த வழக்கம் இன்று கொழும்பில் உள்ள பெரிய வீடுகனில் சம்பிரதாயமாகிவிட்டது.
“எவண்ட பெண்சாதி எவனோட ஓடினால்தான் நமக்கென்ன? ஊராவம்பு நமக்கெதற்கு” என்ற நினைப்பு.
இது சரியா? பிழையா? என்று நான் இங்கு சொல்லவரவில்லை. எனக்கும் இது இங்கு தேவையில்லாத விடயம்.
வீட்டின் வரவேற்பு அறையின் பக்கத்திலே அமைந்துள்ள சாய்வு நாற்காலியில் செல்லடித்துச் சிதநிய கட்டடத்தைப்போல உருக்குலைந்து கூனிக் குறுகிக் கிடக்கிறார், அந்த வீட்டின் சொந்தக்காரனான ஓடிற் ஜெனரல் அப்பாஸ்.
வரவேற்பு அறையின் முன் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் ஆறு அடி உயரமான அந்தப் பென்னம் பெரிய சுவர்க்கடிகாரம் எட்டுத் தடவைகள் அடித்து முடித்துவிட்டு “டிக் .... டிக்...டிக்..” என்ற சத்தத்தை உமிழ்ந்துகொண்டிருக்கிறது.
இந்த டிக்... டிக்... டிக் சத்தம் இதற்கு முன் யாருடைய காதுகளுக்கும் கேட்பதில்லை. ஆனால் இன்றும் நேற்றும் துல்லியமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறது.
இதனை இப்படியும் கூறலாம். அந்த வீட்டில் இரண்டு நாட்களாக உயிருள்ள எந்த ஜீவனும் உயிரற்ற நிலையில் வெறும் கூடுகளாகவே காட்சி தருகின்றன.
மணிக்கூட்டைப் போன்ற உயிரற்ற பொருட்கள் மட்டும் இயங்கின.
அவரின் எதிரே கிடந்த நாட்டியக் குதிரையில் படுத்திருந்த பூனை திடீரென இறங்கி ஓடியதும், அந்த நாட்டியக் குதிரை மேலும் Xழும் மெல்ல மெல்ல ஆடியது. சாய்வு நாற்காலியில் சுருண்டு கிடந்த ஒடிற் ஜெனரல் அப்பாஸ் ஏதோ உணர்வு வந்தவராக எழுந்து தனது சட்டைப் பைக்குள் கையை விட்டு ஒரு கடிகாரத்தை எடுத்து மெளனமாக வாசித்து விட்டு மீண்டும் சட்டைப்பைக்குள் திணித்துகொண்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்தார். அதனைத் தொடர்ந்து ‘கோலிங்’ மணியோசை, கேட்டதும் ஆதங்காக்கா ஓட்டமும் நடையுமாகச் சென்று கேற்றை திறக்கிறார்.
அப்பாஸ் ஆரவாரப்பட்டவரக எழுந்து நின்று கேற்றைப் பார்க்கிறார்.
பிரயாணப்பையோடு க[ம் போடியாரும் அவரது மனைவியும் வருகிறார்கள்.
‘தம்பி! உம்மாவும் வாப்பாவும் ஊரில் இருந்து வாராங்க’ என்று கூநியவாறு ஆதங்காக்கா சற்று விலகி வழிவிடுகிறார்.
க[ம் போடியார் ஆதங்காக்காவை உற்றுப் பார்த்துவிட்டு இடது கையில் இருந்த பிரயாணப் பையை வலது கைக்கு மாற்நிக்கொண்டு இடது கையால் தனது தோனில் கிடந்த சால்வையை சரி செய்துகொண்டு நடக்கிறார்.
ஆதங்காக்கா க[ம் போடியாருக்கு ‘குடி’ வழி இரத்த உறவுமுறை.
ஆதங்காக்காவும் க[ம் போடியாரும் வடக்கனார் குடியைச் சேர்ந்தவர்கள். தென்கிழக்கு முஸ்லிங்கள் மத்தியில் உள்ள ‘குடி’ மரபு இரத்த உறவினை எடுத்துக்காட்டும் வழிமுறை.
ன்பின் தெரியாத இரண்டு ஊரைச் சேர்ந்த இருவர் சந்தித்து உரையாடும்போது இருவரும் ஒரே குடியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்தால் பிரிக்க முடியாத இனத்தவர்களாகிவிடுவார்கள்.
இந்தக் குடி வழி உறவு முறைப்படி ஆதங்காக்காவும் க[ம் போடியாரும் மாமா, மருமகன் உறவு. இருந்தும் க[ம் போடியார் ஆதங்காக்காவோடு ஒருநாளும் சந்தோசமாக முகங்கொடுத்துப் பேசியது கிடையாது. இனமோ சனமோ கி!வி!v இருந்தாலும் அவரவரை வைக்க வேண்டிய இடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தோனில் இருந்து காதைக் கடிப்பார்கள் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையுள்ளவர் மட்டுமல்ல வயல்காரன், குடிமகன், கூலித் தொழிலானி போன்றவர்களோடு தான் ஒரு போடியார் என்ற ‘பூர்ஜுவா’ தன்மையுள்ளவர். ‘இவர் பரம்பரைப் போடியாரல்ல இடையில் வந்த போடி, அதனால்தான் இவருக்குத் தாழ்வுச் சிக்கல்’ என பொதுமக்களுடைய அதாவது ஊரவர்களுடைய அபிப்பிராயம். அதுமட்டுமல்ல ஊரவர்கள் இவரைப் பெரிதாக கணக்கெடுப்பதுமில்லை.
காசு விடயத்திலும், கொடுக்கல் வாங்கலிலும் பெயரெடுத்த நப்பி.
ஊரில் க[ம் போடியார் என்பதைவிட ‘எச்சிப் போடி’ என்றால்தான் எல்லோருக்கும் தெரியும். திருமூல மந்திரத்துள் ‘மரத்துள் மறைந்த மாமத யானையைப் போல க[ம் போடி எச்சிப் போடிக்குள் மறைந்து விட்டார்.
மகனின் படிப்புப் பற்நியும் அவர் மகன் பார்க்கும் உத்தியோகம் பற்நியும் கொழும்பிலே அவருக்கு கலியாணம் செய்த வகையால் கிடைத்த வீடு பற்நியும் ஊரெல்லாம் கதைத்துத் திரிவதுதான் க[ம் போடியின் பொழுது போக்கு.
க[ம் போடி உள்ளே வந்ததும் ஆதங்காக்காவை பார்த்த பார்வை ‘ஆதத்திற்கு தெரியாமல் எதுவும் நடந்திருக்காது’ போன்நிருந்ததை ஆதங்காக்காவும் புரியாமலில்லை.
க[ம் போடி வெடுக் கென்று நடக்கிறார்.
தலையை மூடியிருந்த முக்காட்டுத் தொங்கலால் தனது கண்களை துடைத்தவாறு உம்மா வருவதை கண்ட அப்பாசுக்கு தானும் அழ வேண்டும்போல் தோன்றுகிறது. இருந்தும் அடக்கிக் கொண்டார். க[ம் போடி மகனைப் பார்த்து ‘இது எப்ப நடந்தது’ என்று கேட்டவாறு வீட்டினுள் நுழைந்ததும்.
முந்தநாள் நான் ஒபீசுக்கு போன பிறகு எனப் பதில் சொன்னார் அப்பாஸ்.
‘காசு, நகை நட்டு ஏதாயினும் எடுத்துக்கொண்டு போயிருக்காளோ? என்று மீண்டும் க[ம் போடி கேட்டதும்,
“இல்லை எதனையும் கொண்டு போகல்ல எல்லாம்’ அப்படி அப்படியே வைச்சபடி இருக்கும். உடுத்த புடவையோடுதான் போயிருக்காள்” எனச் சொல்லி முடித்ததும்,
“தலையோடு வந்தது தலைப்பாகையோடு போயிடுச்சி. நமக்குக் காலம் நல்லாயிருக்கு வீட்டை நம்மிட பேரில எழுதிக்கொண்டது நம்மிட அதிஷ்ர்டம்தான். எந்தக் கோட்டிற்கு போனாலும் நான் ஜெயிச்சிக் காட்டுவேன்.
அவள்ள கள்ளப்புருசன் இந்தியாக் காரன்தானே. அவன் இந்தியாவுக்குக் கூட்டிக்கொண்டு போயிட்டானாம். என்று நான் கேள்வி. அவள் ஏற்கனவே திட்டமிட்டுப் பாஸ்போட்டெல்லாம் எடுத்து வைச்சிருந்திருக்காள்” க[ம் போடி பேசி முடித்ததும், அப்பாUன் தாயார் “சாப்பிட்டியா மகன்” என்று கேட்டவாறு மேசையிலே மூடியிருந்த சாப்பாட்டை திறந்து பார்த்து விட்டு “இராச்சாப்பாடு, காலைச்சாப்பாடு எல்லாம் அப்படி அப்படியே இருக்கு, வா மகன் வந்து கொஞ்சம் சாப்பிடு” எனக் கூநியவாறு ஆயத்தங்களைச் செய்வது கண்டு ‘வேண்டாம் உம்மா பசிக்கல்லை’ என்றார் அப்பாஸ்.
க[ம் போடி மீண்டும் கதையை ஆரம்பிக்கின்றார். ‘கடிதம் ஒண்டு வைச்சிட்டுப் போயிருக்காளாமே ரோசம் கெட்ட தொனிப்பநி. நான் படிச்சிப் படிச்சிச் சொன்னேன். கண்ட கண்டவனயெல்லாம் ஊட்டுக்குள்ள கூட்டிப் போடாதே எண்டு, கேட்டால் தானே. நம்மிட்ட இருக்கிற காசி போதாதெண்டு அவனோடு சேர்ந்து கார் கொம்பனி தொடங்கிட்டார்” என்றதும்,
‘அவள் கடிதம் வைச்சிட்டுப் போனது பற்நி உங்களுக்கு யார் சொன்னது?’ என்று கேட்டார் அப்பாஸ்.
“ஊர் வாய மூட உல மூடியாயிருக்கு? அவள் ஓடி ஒரு மணித்தியாலத்திற்குள் கல்முனைக்கு கதை வந்திட்டுது. அதிலயும் உன்ன முதன் முதல் கலியாணம் கேட்ட மம்மகாசின் தான் ஊர் முழுக்கப் பரப்பித் திரிகிறான். மம்மகாசின் ஆதத்திட அல்லயல்காரன் தானே. அதனால இந்த ஊட்டில ஊசி உழுகிற சத்தமும் மம்மகாசினுக்கு கேட்கும். அவள் கடிதத்தில எழுதியிருக்கிற வசனத்தை அப்படியே சொல்லித் திரியிறானாம் ‘நான் உங்களுடைய எதனையும் கொண்டு போகல்ல பிள்ளை உங்களுடையது என்றால் அதையும் உங்கனிடமே விட்டுச் சென்நிருப்பேன். அது உங்களுடையதல்ல என்பதனாலேயே எடுத்துச் செல்கிறேன். எனது மனச்சாட்சியின் படி நான் நடந்துள்ளேன் ‘என்று எழுதியிருக்காளாமே. உண்மையா?’ அப்பாஸ் மெளனியாகிவிட்டார்.
க[ம் போடி தொடர்கிறார். ‘மம்மகாசின் போன்ற Xழ் சாதிக்கெல்லாம் நாம கதைக்கு ஆளாகிப்போனோம். என்ன செய்ய எல்லாம் நம்மிட தலைவிதி. கொழும்பு மனுசர் நல்லவங்க இதையெல்லாம் கதைச்சித்திரிய அவங்களுக்கு நேரமும் இல்ல, அவங்களுக்குப் பழக்கமும் இல்ல நம்மிட ஊரானுக்கு மத்தவண்ட புறங் கழுவுறதுதானே வேலை. வேறு என்ன வேலை இருக்கு நம்மிட ஊரானுக்கு.
நல்லகாலம் இது கொழும்பில நடந்தது. நம்மிட ஊர்ல எண்டா ஊடு முழுக்கச் சனமாகத்தான் இருக்கும். ஊர்முழுக்கப் பரவி மற்ற ஊர்களுக்கும் பரவி கனியோடைக்கு அங்கால அக்கரைக்பற்நிற்கும் அதுக்கங்கால பொத்துவிலுக்கும் பரவி இருக்கும். சரி சரி இப்ப இதைப்பற்நிப் பேசிப் பிரயோசனமில்லை. உட்டுட்டு நடக்க வேண்டிய காரியத்தை பார்ப்பம். கடல்ல மீனா இல்ல, இவள் இல்லாட்டி இன்னொருத்தி, ` ஆம்பிள மிதப்பாய், தண்ணிய கண்டா கழுவிட்டுப் போவாய். கொழும்பில பொண்ணுக்கா பஞ்சம். இந்தப் பெரிய வீட்டில இருக்கிறதெண்டா போட்டி போட்டுக்கொண்டு வருவாளுகள். தெநிச்சிப்பார்த்து பொண்ணெடுக்கலாம். நாளைக்கே நான் கலியாணத்திற்கு ஏற்பாடு பண்ணுவன்.
நான் யார் என்று காட்றன். என்று கூநியவர் ஆதங்காக்காவைக் கண்டதும் ‘பூக் கண்டெல்லாம் தண்ணி இல்லாம வாடிக் கிடக்கு ` போய் உண்ட வேலையைப் பார்’ என்ற துரத்துகிறார்.
ஆதங்காக்காவிற்கு ஏன் துரத்துகிறார் என்று விளங்காமலில்லை. வாய்க்குள் புறுபுறுத்தவாறு அவ்விடத்தை விட்டு விலகிப் வைப்படிக்குச் சென்ற பூக்கண்டுகளுக்கு தண்cர் ஊற்ற ஆயத்தங்களைச் செய்துகொண்டே ‘தண்ணி ஊத்தாட்டி வாடத்தானே செய்யும். இது விளங்காமலா நானிருக்கன்.
இது உங்களுக்குத்தான் விளங்கல்ல, உங்களுக்கு காசு சேர்க்கத்தான் தெரியுமே தவிர வேற ஒண்டும் தெரியாது. நாளைக்கே கலியாணம் பண்ணி வைக்கப் போகிறாராம்.
காசெண்டால் வயசைக் கூட பார்க்க மாட்டார். அப்பாஸ¤க்கும் அந்தப் பொட்டைக்கும் எவ்வளவு வயசு வித்தியாசம். கொஞ்சம் கூட அதைப்பற்நிச் சிந்திச்சாரா? க[ம் போடி தான் படிக்காதவர். படிச்ச மகனாகுதல் யோசிக்கப்படாதா? வாப்பா எப்படியோ மகனும் அப்படியே.
ஆம்பிள ஆம்பிளயா இருக்கணுமெண்டு கொஞ்சமும் யோசிக்கறதில்லை. ஏலவே மலட்டுக் கூட்டம் எண்ட பேரெடுத்த `ங்க எவ்வளவு கவனமாக இருக்கனும் அதப்பத்தியெல்லாம் அக்கற இல்ல, அப்பாU கலியாணம் முடிச்ச நாள் தொடக்கம் நான் இஞ்சதானே இருக்கன் ‘பல்Xஸ்’பாவம் நல்ல பிள்ளை, குணசாலி, இருந்தும் என்ன செய்ய எத்தனை நாளைக்குத் தான் பொறுமையோடு இருப்பது.
பொம்புளண்டா உணர்ச்சி இல்லையா? அனுபவிக்க வேண்டிய வயசு, பொட்டவாப்பா என்ன கொடுக்கல்ல, உப்போடு கூடிய முப்பத்திரண்டும் குடுத்தார் தானே. ` ஆம்பிள எண்டால்தானே இதையெல்லாம் அனுபவிக்க. பல்Xஸை நான் பிழை சொல்லவே மாட்டேன்.
குடும்ப மானம் போய்விடக்கூடாது என்பதனால் மிகப் பொறுமையோடு இருந்தா, இந்தப் பைத்தியக்காரன் தான் அவன ஊட்டுக்குள்ள கொண்டு வந்து சேர்த்தான்.
பஞ்சும் நெருப்பும் பத்தாம என்ன செய்யும், பத்திடுச்சி அதனால மனச்சாட்சிக்கு விரோதமில்லாம இந்தப் பெரிய ஊட்டையும் விட்டுட்டு கடிதத்தையும் வைச்சிட்டுப் போயிட்டா’ என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு தண்cர் ஊற்றுகிறார்.
சாய்வு நாற்காலியில் சுருண்டு கிடந்த அப்பாஸ் எழுந்து சட்டைப்பைக்குள் கையைவிட்டு கடிதத்தை எடுத்துக் கிழித்தவாறு ‘எனக்கும் எனது பிள்ளை இல்லை என்பதும் தெரியும்.
இருந்தும் வளர்த்த பாசம் இல்லாமல் போகுமா? அதனால்தான் வேதனையாயிருக்கு. பல்XUன் உணர்வுகளைச் சாவடிக்கக்கூடாது என்பதற்காகத்தான் அவனைப் பழக விட்டேன்.
எல்லாம் வீட்டோடு அடங்கி விடட்டும் என்பதற்காக அவசரப்பட்டு கெடுத்து விட்டாள். கொஞ்சம் யோசனையோடு நடந்திருக்கலாம். எனது மனச்சாட்சிக்குச் சரியெனப் பட்டதையே நான் செய்தேன்’ என்று புறுபுறுத்தவாறு சாப்பாட்டு மேசையை நோக்கி நடக்கிறார் ஒடிட் ஜெனரல் அப்பாஸ்.
யார் செய்தது சரி யென்றும் ‘ஹெப்பி ஹோம்’ என்று பெயரிட்டது சரியா என்றும் முடிவெடுக்க வேண்டியது இனி வாசகர்கள் தான்.
மருதூர் ஏ. மஜீத்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக