ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

பின்லேடனின் அண்ணன் மகள்

சர்வதேச தீவிரவாதி பின்லேடனை அமெரிக்காவும் அதன் கூட்டு படையும் வலை போட்டு தேடி வருகிறது. நியூயார்க் உலக வர்த்தக மைய கட்டிடத்தின் மீது விமானத்தை மோதி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய `அல் கொய்தா' இயக்கத்தின் தலைவனான ஒசாமா பின்லேடன் ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் எல்லையில் பதுங்கி வாழ்கிறான்.

பின்லேடனின் அண்ணன் மகள் வாபா டாபர். 26 வயதான வாபா டாபர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பிறந்தவர். மாடல் அழகியாகவும் இசை பாடகியாகவும் நடன கலைஞராகவும் இருக்கும் வாபா டாபர் அமெரிக்க பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

தீவிரவாதி பின்லேடன் எனது சித்தப்பாதான். ஆனால் அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

முகமது பின்லேடன் எனது தாத்தா. சவூதி அரேபியாவை சேர்ந்த அவர் கோடீஸ்வரர். அவருக்கு 54 குழந்தைகள். அவர்களில் ஒருவர்தான் என் தந்தை. எனது அப்பாவும் சித்தப்பா ஒசாமா பின்லேடனும் பார்க்க ஒரே மாதிரியாக இருப்பார்கள்.

பின்லேடன் ஒரு பழமைவாதி. முற்போக்கான எண்ணங்கள் அவருக்கு இல்லை. பின்லேடன் ஆதரவு பழமைவாதிகளால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. பின்லேடன் அண்ணன் மகள் என்பதால் எல்லோரும் என்னை ஒதுக்கி தள்ளுகிறார்கள். அவர்களாலும் எனக்கு ஆபத்து ஏற்படலாம். பின்லேடனால் எனது வாழ்க்கையே பாதித்து விட்டது. நான் வேறு மதத்தை சேர்ந்த ஒரு வரைத்தான் திருமணம் செய்து கொள்வேன்.

இவ்வாறு வாபா டாபர் கூறினார்.

ஜோர்ஜ்புஷ் மகள் ஜென்னா

அமெரிக்காவில் தங்கி இருக்கும் இவர் ஒருமுறை பிரான்சு நாட்டுக்கு சென்ற போது அங்குள்ள ஒரு இரவு விடுதியில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ்புஷ் மகள் ஜென்னாவுடன் நடனம் ஆடியதாகவும் கூறப்படுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல