ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

ஒரேவழி

‘சோ’வென மழை கொட்டியது கந்தசாமி - அந்த மரத்தினடியில் ஒதுங்கினான். சேற்றுடன் கூடிய மழை `ர் மண் பாதையில் கரைபுரண்டு ஓடியது. தூரத்தில் மலையில் வேலை செய்துகொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் மழையை மேற்கொண்டு தாக்குப் பிடிக்க முடியாமல் கீழே இறங்கிக் கொண்டிருந்தார்கள்.

கந்தசாமி பெருமூச்சுடன் பாதையில் ஓடும் தண்cரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

‘அப்பா நான் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் ப[ட்சையில் பாஸாயிட்டேன். எனக்கு டவுண்ல பெரிய ஸ்கூலுக்கு படிக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கிறதா பிரின்ஸ்பெல் சொல்லுறாரு. உடுப்பு தைக்கணும். கொப்பி வாங்கணும், இங்கயிருந்து பஸ்லதான் போகணுமாம். நல்லா படிக்கணும்... நானும் டீச்சராகணும்...’

‘அப்பா... வெனிநாடு போக எல்லாம் சரி வந்திடுச்சி. விசா அடுத்த வாரம் வந்திடும். டிக்கெட்டுக்கு மட்டும்தான் பணம் கட்டணுமாம். இது எனக்கு கிடைச்சிருக்கிற ஒரு பெரிய சந்தர்ப்பம். சரியா புடிக்கணும்..’

‘இந்தாப்பா கந்தசாமி உன் மனுஷியை நல்லா பரிசோதனை பண்ணியாச்ச. உடனடியா வயித்துலயிருக்கிற கட்டியை ஒபரேஷன் செஞ்சி எடுத்திடணும். இல்லன்னா உயிருக்கு ஆபத்தாயிடும்.

கவண்மெண்ட் ஆஸ்பத்திரிக்குப் போனா நாலைஞ்சி மாசம் காத்திருக்கணும். இங்க பிரைவேற்றா செய்யிறதாயிருந்தா ஒரு இலட்சத்துக்குள்ள செலவாயிடும்.. சீக்கிரமா யோசிச்சி ஒரு முடிவுக்கு வந்திடு...’

‘என்ன கந்தசாமி விளையாடுநியா... ஏற்னவே ` வச்ச நகைக்கு வட்டியே அசலை மிஞ்சிடுறமாதிரி இருக்கு. ` என்னடான்னா அதுல மேல் கொண்டு பணம் கேட்குநியே....இதெல்லாம் சரிப்படாது. ` சீக்கிரமா மொத்தப் பணத்தை குடுத்து நகையை மீட்கப் பாரு....அவ்வளவுதான்...’ ‘இங்கப் பாரு கந்தசாமி.

நான் சொல்லுறமாதிரி உன் மகளை கொழும்புலவுள்ள பங்களாவுக்கு வேலைக்கு அனுப்பப் பாரு. நான் எல்லா ஏற்பாடும் செஞ்சிட்டேன். அட்வான்ஸா பெரிய தொகை கிடைக்கும். அப்புறம் மாதா மாதம் சுளையா சம்பளப் பணம் கிடைக்கும்.

கொமரிப்புள்ளைன்னு கொஞ்சம் தயங்கினா கடைசியில கஷ்டப்பட போறது `தான்.. ‘ஐயோ என்னய்யா சொல்லுறே... அவன் புரோக்கர் கமிஷன் கிடைக்கும்னு ஆயிரம் பொய் சொல்லுவான்.

வயசுக்கு வந்த பிள்ளையை கொழும்புக்கு அனுப்பிட்டு என்னை வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டிருக்க சொல்லுநியா.. கோடியா கொட்டி குடுத்தாலும் பரவாயில்லை. நான் இதுக்கு ஒத்துழைக்கவே மாட்டேன்...’

கந்தசாமி – சிந்தனை கலைந்தான். மழை விட்டிருந்தது. ஆறு மணிக்கே நன்றாக இருட்டிவிட்டது. அவன் மெதுவாக தன் லயத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

அப்போது அந்த மூங்கில் தோப்பில் யாரோ இருவர் நின்றுகொண்டிருப்பதைப் போல அவன் கண்களுக்கு புலப்பட்டது. அவன் மெதுவாக அந்த இடத்தை நெருங்கினான்.

‘இங்கப் பாரு செவ்வந்தி....உன் அப்பன் உன்னை கொழும்புக்கு வேலைக்கு அனுப்பப் போறது உறுதியாயிடுச்சி. ஏற்கனவே உன்னோட பக்கத்து லயத்துலயிருந்து கொழும்புக்கு வேலைக்குப் போன வசந்தி பிணமாத்தான் வந்திருக்கா. பேசாம நான் சொல்லுறதை கேளு..

உன் கழுத்துல நான் தாலி கட்டி என் தோட்டத்துக்கு கூட்டிட்டு போயிடுறேன். உன் அப்பன் அவனுக்கிருக்கிற கஷ்டத்துல உனக்கு கல்யாணமும் பண்ணி வைக்காம கொழும்புல கொண்டு போயி தள்ளப் போறான். `... இப்பவே சரின்னு சொல்லு... மற்றதையெல்லாம் நான் பார்த்துக் கொள்ளுறேன்...’

‘இல்ல பன்dர் என்னால முடியாது. எங்கப்பா என்னை கொலைக்களத்துக்கே அனுப்பினாலும் நான் அதை சந்தோஷமாக ஏத்துக்கப் போறேன். குடும்ப கஷ்டத்தினாலத்தானே அனுப்புறாரு. அவருக்கு நான் எப்புடி துரோகம் பண்ண முடியும். எங்கப்பா என்ன சொல்லுறாரோ அதைத்தான் நான் செய்வேன். என்னை மேற்கொண்டு வற்புறுத்தாதே. இனி இப்படியான இடத்துக்கு என்னை வரச் சொல்லாதே இதுதான் கடைசி...’

கந்தசாமி வந்த சுவடு தெரியாமல் சத்தம் போடாமல் அந்த இடத்தைவிட்டு நடந்தான். சே... செவ்வந்தி எவ்வளவு நல்லவள். தன்னுடைய எதிர்காலத்தைப் பற்நிக் கூட யோசிக்காமல் எப்படிப்பட்ட நல்ல உள்ளத்துடன் குடும்பத்துக்காக எதையும் ஏற்றுக்கொள்ள நினைக்கிறாள்.

இப்படிப்பட்டவளை கொழும்புக்கு அனுப்பி அவளுடைய எதிர்காலத்தையே சிதறடிக்க நினைப்பது எவ்வளவு பாவம்... அவன் முடிவு செய்துவிட்டான். எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் பரவாயில்லை. அவளை கொழும்புக்கு அனுப்பக் கூடாது. நிச்சயமாக அனுப்பவே கூடாது....’

மூங்கில் தோப்பிலிருந்து பன்dர் செல்வமும் செவ்வந்தியும் வெனியே வந்தார்கள்.

‘என்ன பன்dர் நாம பேசினது எங்கப்பா காதுல விழுந்து இருக்கும்தானே...’

‘நிச்சயமா செவ்வந்தி, மனுஷன் எதுவும் பேசாம யோசனையோட போறதைப் பார்த்தா நல்லாவே பட்டிருக்குமுன்னுதான் நினைக்கிறேன். இப்படிப்பட்டவங்களுக்கு இதுதான் சரியான வழி. ஒழுங்கா சொன்னாலும் கேட்க மாட்டாங்க. அழுது சொன்னாலும் கேட்கமாட்டாங்க. இப்படியான அதிர்ச்சி வைத்தியம்தான் சரியான மருந்து...

‘ரொம்ப நன்நி பன்dர். எனக்காக ` ரொம்ப சிரமம் எடுத்துக்கிட்டே. என்னோட நண்பி வசந்தியை மனசார காதலிக்கிறே. ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிறது என்னோட பொறுப்பு. இது நான் உனக்கு செய்யிற கைமாறு சரிதானே...’

அவர்கள் இருவரும் பிரிந்து வெவ்வேறு பாதையில் நடந்தார்கள். மழை முற்றாக நின்றுவிட்டிருக்க குனிர் காற்று மட்டும் அந்த இடத்தை விட்டு அகலவேயில்லை.

பாலா. சங்குப்பிள்ளை
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல