ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

உள்வலி

பிந்தான் நோனா பானு

அதிகாலைப் பொழுது மிகவும் அவசரமாக ஓடிக் கொண்டிருந்தது. இந்தப் பொழுது என் வாழ்க்கையைப் போல் அமைதியாக ஓடினால் என்னவாம்?

விடிந்தால் போதும்... வீட்டு வேலைகள் செய்து செய்தே ‘போதும் போதும்’ என்றாகி விடுகிறது. கணவர், பிள்ளைகனின் வேலைகளைக் கவனிக்கவே இந்தக் காலை நேரம் போதாமலிருக்கிறது.

“உம்மா.. டீ... வேணும்...”

“உம்மா... டை... வேணும்...”

“மழை வரும் போல... குடை தாங்க...”

மேற் சொன்னார்கள்.

Xழ்க் கண்டவர்கள.

மகன்.

மகள்.

இவர்.

மூவருக்குமான ஒரே பதில்: ‘மேசைக்கு மேலே பாருங்க” மூன்றையும் பெற்றுக் கொண்டார்கள் மூவரும்.

இவ்வளவு வேலைகளையும் எனது இந்த இரண்டு கைகளால் தானே செய்தாக வேண்டும்.

எனது மூன்றாவது மகன் கனவில் அழுகிறான், சிரிக்கிறான். அவனுக்கு இப்போது இரண்டரை வயது ஆகிறது.

டை கட்டிப் பவுடர் பூசி மகனையும், மகளையும் பாடசாலைக்கு அனுப்பி வைத்தேன்.

பத்து கிலோ புத்தகப் பையை சுமக்கும் மகன் ஆறாம் வகுப்பு.

ஐந்து கிலோ புத்தகப் பையை சுமக்கும் மகள் நான்காம் வகுப்பு.

இயந்திரத்தனமாக வீட்டு வேலைகளை முடிக்கும் போது உடம்புக்கு ஒரு சோர்வு! “பிளேன் டீ” குடித்தேன். மீண்டும் உடம்புக்கு வந்து சேர்ந்தது எறும்புத்தனம்!

சுறுசுறுப்பாக வேலைகனில் மூழ்கிவிட்டால் வேதனைகள் ஞாபகத்திற்கு வராது.

ஆனால், இன்று சிறுவயது ஞாபகங்கள் படையெடுத்து வந்தன.

இரண்டு “நானா”க்களுக்குப் பிறகு மூன்றாவது “தானா” தங்கச்சி... நோனா நான். நான்காவதாக ஒரு தம்பி. அவன் பிறந்த நாற்பதாவது நானில் என் தந்தை எங்களையெல்லாம் எக்கேடாவது கெட்டுப் போங்கடா’ன்னு திக்குத்திசை தெரியாமல் எங்கோ போய்விட்டார்.

தந்தையொரு பக்கம்... நாமொரு பக்கமாக வாழ வேண்டிய சூழ்நிலை.

“ஒரேயொரு பெண்பிள்ளை” என்ற

செல்ல மெல்லாம் எனக்கில்லை.

அப்போது எனக்கு ஐந்து வயது. ஐந்து வயது பூர்த்தியானதும் பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்ப்பார்கள்.

ஆனால்... எனது தாய் என்னை ‘வேலைக்காரி’யாக ஒரு வீட்டில் சேர்த்துவிட்டாள். முட்டாள்!

ஆசை, ஆசையாக எனக்கு உணவூட்டி தன் மடியில் என்னை உறங்க வைத்துத் தாலாட்டி மகிழ வேண்டிய என் தாய், தப்பித்தால் போதும் என்று என்னை அந்த வீட்டில் சேர்த்துவிட்டு ஓடி விட்டாள்.

அந்தப் பெரிய வீட்டில்” குசினியறையின் ஓர் மூலைக்குள் கும்மிருட்டில் நான் தனியாக விடப்பட்டேன். இந்தப் பாவம்... அநியாயம்.. என் தாயையும், தந்தையையும் சும்மா விடாது. அவர்கள் இதற்கெல்லாம் பதில் சொல்லியே ஆக வேண்டும். இறைவன் ஒருவன் இருக்கின்றான். அனுபவிப்பார்கள். காலம் ‘தண்டனை’ தரத் தவறுவதேயில்லை.

பாய், தலையணை யேது மில்லாமல்

வெறுந்தரையில்... கடுங்குனிரில் நடுநடுங்கிப் பயந்து போய்.... உறங்கினேன்.

தூக்கம் வரவில்லை.

மறுநாள் காலை.

என் முகத்தில் தண்cர் வீசி அடிக்கப்பட்டது. பயந்தடித்து எழுந்தேன். அழுதேன்.

என் காதை முறுக்கியபடி இழுத்துக் கொண்டு போய் “இந்தா... பீங்கான் கோப்பைகளைக் கழுவு” என்றது என் எஜமானி அம்மாவின் குரல். குனிரில் நடுங்கிக் கொண்டு கருவினேன்.

என் பிஞ்சுக் கைகள் விறைத்துப் போயின. “இந்தா... இந்த சாயத்தைக் குடி... குடிச்சிட்டு வாசலைக் கூட்டு” என்றது எஜமானியின் அதட்டல்.

புத்தகப் பையை சுமந்து கொண்ட பாடசாலைக்குத் துள்னிச் செல்லும் வயதில்... மல்லிகைச் சாமான் பையைச் சுமந்து திரிகிறேன்.

பள்னிக்கூடப் பாடங்களை எழுத வேண்டிய என் பிஞ்சுக் கைகள்....

பீங்கான் கோப்பைகளையும் அழுக்குத்துணிகளையும் கழுவுகிறது.

இந்தப் பாவக்கறையை என் தாயும், தந்தையும் எங்கே போய்க் கழுவப் போகிறார்கள்?

பாடசாலையில் ‘வீட்டு வேலை’ ஒழுங்காகச் செய்யவில்லை என்று அடித்திருந்தால் நான் சந்தோஷப்பட்டிருப்பேன்.

ஆனால் இங்கே- பீங்கான் கோப்பைகளை ஒழுங்காகக் கழுவவில்லை. வீட்டு வேலை’ ஒழுங்காகச் செய்யவில்லை என்றல்லவா அடிக்கிறார்கள். இந்த அடிகளுக்கெல்லாம் என் தாயும் தந்தையும் கட்டாயம் பதில் சொல்லியேயாக வேண்டும்.

ஒவ்வொரு மாத முடிவிலும் என்னருமைத் தாய் வருவார் என் சம்பளத்தை வாங்கிப் போக நானிங்கு சாக...! அவ.. மகாராணியாக! ஆக, ‘இதுகள்’ மனுஷ ஜென்மங்களே இல்லை.

நான் வாய்விட்டுக் கதறுவேன்; “உம்மா....! நானும் வாறன்...”

என் தாய் மனசு ஈரமாகாது நோகாது. சிரிப்பாங்க!

“புள்ள எப்படி... நல்லா வேல.... செய்றாவா... இல்லாட்டி, நல்லா அடிங்க... நான் கேட்க மாட்டன்...!”

அப்பொழுதும் நான் என் தாயைக் கட்டிப் பிடித்துக் கொள்வேன்.

என் தாயின் கைகள் என்னை உதநிவிடும். நான் உம்மா... உம்மா... என்று கதநி அழுவேன்! அவரின் காலில் விழுவேன்.

ஒரு கோப்பைத் தே`ரோடும், என் ஒரு மாதச் சம்பளத்தோடு என் தாய் என்னை விட்டு விட்டுத் திரும்பிப் பார்க்காமலேயே போய் விடுவார்.

சட்டி பானைகளோடும், அழுக்குத் துணிகளோடும் அழுக்காகிக் கொண்டிருந்தேன். தலை நிறையப்பேன்! தலை பார்த்துக் குனிப்பாட்டி விட யாருமில்லை. “தந்தை இருந்தும், தாயும் இருந்தும் சொந்தம் எதுவுமில்லை! அதைச் சொல்லத் தெரியவில்லை. அநாதைச் சிறுமியானேன்.

எனக்கு ஆறுதல் தர யாருமே இன்நி, ஆறு வயது பிறந்தது. எனக்கு, இப்போது புதிய வீடொன்று கிடைத்தது. புதிய நியமனம் பெற்றுக் கொண்டேன்.

பிள்ளை பார்ப்பது, தண்cர் நிறைப்பது, எச்சில் கழுவுவது, இவைகள்தான் எனது டியூட்டி! இந்த வீட்டில் சரியாக வேலை செய்யக் கற்றுக்கொண்டேன்!

உண்மையில் நான் எவ்வளவு கஷ்டப்படுகின்றேன். பார்க்கவோ, கேட்கவோ நாதியற்றுத் தவித்தழும் அநாதையாகிப் போனேன். நான்!

“உம்மோவ்... ‘உக்குமா’ தாமோவ் சின்ன மகனின் சிணுங்கல்... எனக்கிப்போது ‘முப்பத்தொன்பது வயது’ என்பதை உணர்த்தியது.

“உம்மா ஏன் அழுவுaங்க...?” என்றான் சுட்டிப் பயல்.

“சும்மா” என்றேன். உம்மா, சும்மா. “வாப்பா... வந்தொடனே சொல்றேன்... உம்மா... சும்மா அழுதாங்கண்ணு” மகனை உச்சி முகர்த்தழுதேன். நான் உண்மையிலேயே பாவம்தான்.

நிம்மதியாய்ப் படுத்துறங்க எனக்கொரு தாய்மடி கிடைக்கவில்லை. என் தலைவாரி அழகாக உடுப்பாட்டிப் பார்த்து ரசிக்க எனக்கொரு தாய் கிடைக்கவில்லை. என்னைப் பாடசாலைக்கு அனுப்ப எனக்கொரு தாய் கிடைக்கவில்லை.

என் மழலை மொழி கேட்டு மகிழ எனக்கொரு தாய் கிடைக்கவில்லை. கடைக்குக் கூட்டிப்போய்... எனக்கு ‘அதுவேண்டும் இது வேண்டும்” என்று கேட்டு அடம்பிடித்து நானழ... எனக்கொரு தாய் கிடைக்கவில்லை.

நான் ஆசைப்பட்ட எதுவுமே எனக்குக் கிடைக்கவில்லை.

ஒழுங்கான உறவென்று ஒரு ஆளுமில்லை.

சாய்ந்தெந்தன் சோகத்தைச் சொல்லியழ...

ஒரு தோளுமில்லை.

தங்க நகைகளைக் கண்ணால் பார்த்து ஏங்கியழ மாத்திரம்தான் இறைவன் எனக்கு அனுமதித்திருக்கிறான். இன்னும் நிறைவேறாத ஆசைகள் நிறையவே உண்டு. என் சின்ன மகன் சொல்வான்: “உம்மா... இன்னிக்குச் செத்துட்டு... நாளைக்கு வந்திருங்க...”

நான் ஒவ்வொரு நாளும் ‘செத்துச் செத்துப் பிழைப்பது’ அந்தப் பாலகனுக்கு எங்கே தெரியப் போகிறது?

எனக்கென்று கண்cர் விட இந்த உலகத்தில் யாருமே இல்லை. நான் பெண்ணாகப் பிறந்தது பாவமா?

நான் மனசு செத்துப் போன ஒரு ஜீவன்

இந்த இதயத்தின் ‘உள் வலி’ அவ்வளவு

சீக்கிரத்தில் ஆறாது

இப்பொழுது என் தாயும் தந்தையும் படாடோபமான பகட்டு வாழ்க்கை வாழலாம்... ஆனாலும்-

நான் விடுகின்ற ஒவ்வொரு துனிக் கண்c ருக்கும் அவர்கள் கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

ஏழைக்குச் செய்த அநியாயங்களை இவர்கள் மறந்து விட்டார்கள். ஆனால், இறைவன் மறக்க மாட்டான். நானும்தான்!

அடிபட்டவர்களுக்குத்தான் ‘வலி’ புரியும்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல