சிவராசா (வயது 45) என்பரே மேற்படி சாதனையை படைத்தவராவார்.
இலங்கையைச் சேர்ந்தவர் இவர் தன் மனைவி சாந்தினி மற்றும் குழந்தையுடன் 1996 இல் இலங்கையிலிருந்து மண்டபம் அகதிகள் முகாமிற்கு வந்தார். பின்னர் கடந்த 2002 இல் தூத்துக்குடி மாவட்டம் தாப்பாத்தி அகதிகள் முகாமிற்கு வந்தார்.
தற்போது பெயின்டராக பணிபுரிந்து வரும் சிவராசா, ஏதாவது சாதிக்க வேண்டு மென்ற ஆசை கொண்டார்.
இதனால் தன்னுடைய வீட்டிலிருந்த பொருட்களில் சில மாற்றங்களை செய்து புதிய வகையில் உருவாக்கினார். இரண்டு பிரிவீல், இரண்டு செயின், நான்கு பல் சக்கரங் கள் அமைக்கப்பட்டு, ஒருவர் மட்டுமே மிதிக்கும் வகையில் சாதாரண சைக்கிளில் உள்ளது போல பெடல்கள் உள்ளன. குறிப்பிட்ட அளவுள்ள பல் சக்கரங்களை பயன்படுத்தி, சைக்கிளின் வேகத்தை அதிகப்படுத்த வழிசெய்துள்ளார். சாதாரண சைக்கிள் மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் சென்றால், இவர் வடி வமைத்துள்ள புதிய சைக்கிள், மணி க்கு 60 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டது எனக் கூறுகிறார். இதற்கு 700 ரூபாய் செலவானதாக தெவித்தார்.
இது தவிர, மின்சாரம் இல்லாமல் தையல் மிஷின் மூலம் இயங்கும் மிக்சி, மின்சாரத்தின் உதவியுடன் மணிக்கு 25 கிலோ வெங்காயம் வெட்டும் நவீன இய ந்திரம், உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு குறித்து பிரச்சாரம் செய்யும் முதல்வர் கருணாநிதி உருவம் கொண்ட ரோபோ, சைக்கிள் உதவியுடன் இயங்கும் துவைக்கும் இயந்திரம் போன்ற பல்வேறு வீட்டு உபயோக சாதனங்களையும் உருவாக்கியுள்ளார்.
இது குறித்து சிவராசா கூறியதாவது: எங்களது நாட்டில் இதுபோன்ற ஆக்கப் பூர்வமான பணிகளை மேற்கொள்ள, சூழ் நிலை கிடைக்கவில்லை. நான் அகதியாக வந்த பிறகு, இங்குள்ள அமைதியான சூழ் நிலை, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க உதவியது என்றார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக