சனி, 26 ஜூன், 2010

மூன்று வயது சிறுவனை கடித்து குதறிய நரி

பாடசாலையொன்றுக்குள் வசித்த நரி யொன்றால் 3 வயது சிறுவன் ஒருவன் கடித்துக் குதறப்பட்ட சம்பவம் பிரித்தானிய சசக்ஸ் (Sussex) நகரில் இடம்பெற்றுள்ளது.

பிறைட்டன் (Brighton) எனும் இடத்திலுள்ள டொரோதி ஸ்றின்ஜர் (Dorothy Stringer)உயர் பாடசாலையில் நடைபெற்ற விருந்துபசாரம் ஒன்றின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேற்படி நரியானது பாடசாலை வகுப்பறையொன்றின் கீழ் பதுங்குமிட மொன்றை அமைத்து தங்கியிருந்துள்ளது.
இந்நிலையில் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நின்ற சிறுவன் மேற்படி மறைவிடத்திலிருந்து வெளியே நீண்டிருந்த நரியின் வாலை பிடித்து இழுக்கவும் நரி சிறுவனைக் கடித்துக் குதற ஆரம்பித்துள்ளது.

கூடியிருந்தவர்கள் நரியை அடித்து விரட்டி சிறுவனை மீட்டெடுத்துள்ளனர்.

காயமடைந்த சிறுவனுக்கு, மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

படுக்கையிலிருந்த 9 மாத இரட்டைக் குழந்தைகளை நரியொன்று கடித்துக் குதறி படுகாயப்படுத்திய சம்பவம் இடம் பெற்று இரு வாரங்களில் மேற்படி சம்பவம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல