கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்களால் மூட்டு வலி ஏற்படலாம்.
1. உங்களுடைய உடலுக்கு சேராத உணவுகளை சாப்பிடும்போது.
2. அதிக குளிர்ச்சி மற்றும் வெப்பமான கால சூழலில் இருத்தல்.
3. அதிக உடல் உழைப்பு, உடற்பயிற்சி மற்றும் எவ்வித உடற்பயிற்சியும் இல்லாமை ஆகியவை மூலமாக தேவையில்லாத சிரமம்.
4. குறிப்பிட்ட காலத்தில் மூட்டு இணைப்பு சவ்வு வளராமை மற்றும் சாதாரணமாக முழங்கால் மூட்டுகள் மீது போர்த்தப்படாமை.
5. வழக்கத்திற்கு மாறாக அதிக உடல் எடை அதிகரிப்பு.
6 சமீபத்திய மோசமான உடல் பாதிப்பு மற்றும் நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டிருத்தல்.
7. ஏதாவதொரு எலும்பு மூட்டு தசையில் இரத்தம் உறைந்து விடுதல்.
ஆயுர்வேத அறிவியல் மையத்தின் அறிவியலறிஞரும் மருத்துவருமாகிய விஸி பன்சால் ஆயுர் வேத சிகிச்சை வழி முறை மூலம் இந்நோயை நீக்க முடியும் என்கிறார்.
““ஒருவர் தன்னுடைய வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகிய தோச காரணிகளை நடு நிலையுடன் வைப்பதன் மூலம் உடல் ஆரோக் கியத்தைப் பேணலாம். உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்பிலும் திசு மற்றும் செல்லிலும் கூட இம் மூன்று தோசக் காரணிகள் இருக்கின்றன. இல்லையேல் இக்காரணிகளே பல்வேறு நோய்கள் ஏற்பட வழிவகுத்துவிடும்'' என்றார்.
அதிக நடை, நீண்ட தூரம் பயணம் செய்தல், அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி, போதுமான உறக்கமின்மை, குளிர், அதிகமான காற்று, வெப்பமான பகுதிகளில் இருத்தல் ஆகியவற்றின் மூலம் உணவு நன்கு செரிக்கப் படாமல் “ஆமா' என்கிற தேவையற்ற (செரிக்கப்படாத பொருள்) பொருள் உடலில் சேருவதன் வாயிலாக வாதம் அதிகமாகி தலைக்குச் செல்கிறது. உடலில் வாதம் செல்லும் போது கூடவே ஆமா பொருளை மூட்டுகளில் விட்டுச் செல்கிறது. எலும்பு மூட்டு இணைப்புகளில் இவை தங்கி விடுவதால் கால் அசைவின்போது வலி ஏற்படு கிறது.
இந்நோய்க்கு ஆமவாதா அல்லது கியூ மேட்டாய்ட் ஆர்த்தரைட்டிஸ் என்று பெயர்.
மற்றொரு வழிறையாக மூட்டு இணைப்புகளில் வாதம் அதிகரிக்கும் போது ஆஸ்டியோ ஆர்திடிஸ் நோய் வருகிறது. ஆயுர்வேத அறிவியலின்படி இதற்கு சாந்திவாதா என்று பெயர். அதிகமான குளிர், காற்று, வெப்பமான இடங்களில் இருத்தல், அதிக நடை, நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வது, போதுமான உறக்கமின்மை, இவைபோலவே உலர்ந்த, மிருது தன்மையற்ற, நுண்ணூட்டமில்லாத உணவுப் பொருள்களை சாப்பிடுதல் ஆகிய காரணங்களால் வாதம் அதிகரிக்கிறது. அதிக நாடி துடிப்பு வாதத்தை நடுநிலையில் வைப்பதில்லை.
இராசயன வலி நிவாரணப் பொருள்கள், களிம்பு, தைலம், பாம்ஸ் ஆகியவை தற்காலிகமாக வலியிலிருந்து நிவாரணமளிக்கிறது.
அல்லது வலியை அதிகரிக்கிறது. ஆனால் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை “ஆர்த்தரைட் டிஸ்' தோன்றுவதற்கான மூல காரணிகளை அழிக்கிறது.
யூ மேட்டாய்ட் மற்றும் ஆஸ்டியோ ஆர்த்த ரைட்டிஸ் ஆகிய இரண்டு நோய்களும் சாதாரணமாக ஒருவருக்கு வரும்போது மற்ற வைத்தியத்தில் ஒரே மாதிரியான சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் ஆயுர்வேத வழி முறையில் வெவ்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
செரிமான திறனை அதிகரிப்பதன் மூலம் “ஆமா' பொருள் உருவாவது தடுக்கப்பட்டு, யூ மேட்டாய்ட் ஆர்த்தரைட்டிஸ் நோய் நீக்கப்படுகிறது. இதைப்போலவே வாதத்தைக் குறைப்பதன் மூலம் ஆஸ்டியோ ஆர்த்தரைட் டிஸ் நோயைக் குணப்படுத்தலாம். எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யும்போது ஆஸ்டியோ ஆர்திடிஸ் நோயிலிருந்து அதிக நிவாரணம் பெறலாம். ஆனால் யூ மேட்டாய்ட் ஆர்த்த ரைட்டிஸ் நோய்க்கு மசாஜ் மேற்கொண்டால் பாதிப்பு இன்னும் அதிகரிக்கும். ஆகையால் எவருக்கேனும் மூட்டு வலி ஏற்பட்டால் ஆயுர் வேத சிகிச்சை மேற்கொள்வதற்கு மூன்பு தகுந்த ஆயுர்வேத மருத்துவடம் ஆலோ சனை பெறுவது அவசியமாகும்.
அறிகுறிகள் : இவ்விரு மூட்டு நோய்களையும் சாதாரணமாக வரும் வலியை வைத்து கண்டறியலாம். காலையில் விழிக்கும்போது அதிக வலியுடன் வெதுவெதுப்பு தன்மை உடலிலிருந்தால் அதை யூ மேட்டாய்ட் நோய் அறிகுறி என அறியலாம். முக்கியமாக குளிர் காலங்களில் உடற்பயிற்சி மற்றும் நடக்கும் போது அதிக வலி ஏற்பட்டால் அது ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ் நோய் அறிகுறியாகும்.
யூமேட்டாய்ட் ஆர்த்தரைட்டிஸ் நோயை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் வழிகள்:
1. வேகமாக நடத்தல், ஒத்தடம் கொடுத்தல், பசியை தூண்டுதல் மற்றும் கசப்பு தன்மை கொண்ட உணவுகளைச் சாப்பிடுதல், லேசாக பேதி உண்டாக்குதல் மற்றும் உட்புறமாக எண்ணெய் எடுத்துக் கொள்தல் ஆகியவற்றின் மூலமாக வாதத்தை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
2. இலகுவான உணவினை உட்கொண்ட பின் வேகமாக நடப்பதன் மூலம் எளிதில் ஜீரணமடைந்து “ஆமா' உருவாவதைத் தவிர்க் கலாம்.
3. சூடான சோறு அல்லது சூடான நீரை ஒரு பையில் நிரப்பி வெதுவெதுப்பான சூடு மூலமாக ஒத்தடம் கொடுக்க வேண்டும். ஒத்தடம் கொடுப்பது வாதத்தைக் குறைக்கிறது. மேலும் வெதுவெதுப்பான சூடு ஆமாவை கரைக்க உதவுகிறது.
4. பசி உணர்வை தூண்டுதல் மற்றும் கசப்புடன் கூடிய கார உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம் செமான சக்தியை அதிகரிக்கலாம்.
5. உட்புறமாக எண்ணெய் எடுத்து கொள்வதன் மூலம் அதிக வாதம் குறைக்கப்படுகிறது.
உயவுத்தன்மை மூலம் உணவு வழிப்பாதையில் வாயு தொல்லையை நீக்குகிறது. மேலும் வாதத்தை கீழ்நிலைக்குக் கொண்டு வருகிறது.
வலியைக் குறைக்க உதவும் வழிகள்:
1. தினம் காலையில் ஆமணக்கு எண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்ட ரோஸ்ட் 50 கராடி மீது கல் உப்பை தூவி ஒன்று மட்டும் சாப்பிட வேண்டும். கராடி பசி உணர்வைத் தூண்டுவதோடு ஆமாவை செரிக்க உதவுகிறது. ஆமணக்கு எண்ணெய் உயவு தன்மை கொண்டிருப்பதால் உணவு மண்டலத்திலுள்ள அசுத்தப் பொருள்களை நீக்குகிறது.
2. அஜ்வெய்ன் மற்றும் உலர்ந்த இஞ்சி பவுடர் (ஒரு மேசை கரண்டி) சமமாக சேர்த்து தயாக்கப்பட்ட கராடியுடன் மோர் சேர்த்துக் சாப்பிடுதல் அல்லது அதிகமாக சுடு தண்ணீரை குடித்தல் ஆகியவை செரிமான சக்தியை அதிகரிப்பதோடு, மூட்டு இணைப் புகளிலுள்ள வீக்கத்தைக் குறைக்கிறது.
சுடு தண்ணீரில் 2 கிராம் உலர்ந்த இஞ்சியை கலந்து குடித்தல் மற்றும் மோர் உட்கொள்ளுதல் கபம் மற்றும் வாதத்தைக் குறைக்கும்.
இது செரிமான சக்தியை அதிகக்க உதவுவதோடு, மூட்டு இணைப் புகளின் வீக்கத்தைக் குறைக்கிறது.
3. தண்ணீர் பாதியளவு குறையும்வரை சூடு படுத்தி வெதுவெதுப்பாக குடிப்பதால் “ஆமாவை' செரிக்க வைக்க உதவுகிறது.
4. சுரைக்காய் போன்று கொடியில் காய்க்கும் கசப்பு காய்கள், வாடாமல்லிகை இலைகள், வேப்பிலைகள், பாகற்காய், கோதுமையில் தயாரிக்கப்பட்ட சப்பாத்தியுடன் பார்லி சேர்த்த உணவு பொருள், ஸ்டார்ச் நீக்கப்பட்ட அசி சோறு, கொள்ளு, பியஸ் ஆகியவை உணவு பொருள்களில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
5. பால், தயிர், பன்னீர், பாலாடையுடன் கூடிய கரும்புச் சாறு குறிப்பாக வெல்லம், பருப்பு, மீன் மற்றும் நறுமணப் பொருள் கொண்ட பொருள்களை உட்கொள்ள வேண்டும்.
6. தினம் உடற்பயிற்சி (வாரத்தில் 4 நாள்களுக்கு 30இலிருந்து 40 நிமிடம் வரை நடக்க வேண்டும்) செய்தல் அவசியம்.
7. தினசரி வாழ்க்கையில் யோகா மேற்கொள்ள வேண்டும்.
ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ் கட்டுப்பாட்டில் வைத்தல்
1. உய்வு தன்மை கொண்ட எண்ணெய்ப் பொருள்களை உட்கொள்ளுதல், ஒத்தடம் கொடுத்தல் மற்றும் வாதத்தைக் குறைக்கும் உணவுப் பொருள்களை உட்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலமாக ஆஸ்டியோ ஆர்த்த ரைட்டிஸ் நோயைக் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
2. எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம் உடலில் உயவுத் தன்மையை ஏற்படுத்தலாம். எள் எண்ணெய், விளக்கெண்ணெய், கடுகு எண்ணெய் அல்லது தைலம் போன்ற மருத்துவ எண்ணெய் ஆகியவைகளைக் கொண்டு மசாஜ் செய்யலாம். எலும்பு மூட்டு இணைப்பு பகுதியில் வீக்க மடைந்த பகுதியை குளிர்காற்று நேரிடையாக படாதவாறு துணி அல்லது பான்டேஜ் மூலமாக மறைக்க வேண்டும்.
3. எண்ணெய் உபயோகித்த பிறகு நீராவியுடன் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
4. தீவிர உணவு கட்டுப்பாட்டின் மூலம் வாதத்தை கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.
5. ஒரு மேசைக் கரண்டி டில் ஒயில், ஒரு மேசை கரண்டி மாட்டு நெய், அரை மேசை கரண்டி இஞ்சிச் சாறு, அரை மேசை கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு கரும்புச் சாறு ஆகியவை சேர்ந்த கலவை வாதத்தைக் குறைக்க உதவுவதோடு, எலும்பு மூட்டு இணைப்பில் வீக்கத்தையும் குறைக்கிறது.
6. இதற்கு மாற்றாக வெதுவெதுப்பான பாலுடன் ஒரு மேசை கரண்டி விளக்கெண்ணெய் கலந்து இரவில் குடிப்பதால் அதிக செரிமானத்தையும், வாதத்தையும் குறைக்கலாம்.
7. 5 கிராம் இஞ்சி கூழுடன் கூடிய சீரகம், கல் உப்பு, உலர்ந்த இஞ்சி பவுடர் மற்றும் கறுப்பு மிளகு ஆகியவற்றை வெண்ணெயுடன் சேர்த்து உட்கொள்வதால் மூட்டு வலி மற்றும் முதுகு வலி ஆகியவற்றை வெகுவாகக் குறைக்கிறது.
8. போதுமான நெய் அல்லது எண்ணெய் சேர்த்து உணவு சமைக்கப்படவேண்டும். பால், சோறு, மட்டன் சூப் மற்றும் இனிப்பு, புளிப்பு அல்லது உப்பு நிறைந்த சத்தான உணவுப் பொருள்களை உட்கொள்ள வேண்டும்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக