சுக்கிர மேட்டிலிருந்து புறப்படும் ஒரு ரேகையானது (A) ஆயுள் புத்தி இருதய ரேகைகளை வெட்டிச் சென்று புதன் மேட்டின் பக்கவாட்டிலுள்ள ஐக்கிய ரேகையையும் (B) வெட்டுகிறது என்றால் அவ்விதம் ரேகை அமைந்தவன் இல்லறவாழ்க்கை நரகமாயிருக்கும். வீட்டில் அமைதி இராது மன நிறைவோ நிம்மதியோ ஏற்படாது. இவ்விதம் ரேகை அமைந்த பெண்மணியொருவர் ஒரு சமயம் என்னிடம் கையைக் காட்டிப் பலன் சொல்மாறு கேட்டார். உடம்பு கொள்ளாத தங்க நகைகளுடன் பட்டும் படாடோபமாக காரில் வந்திறங்கிய அந்த அம்மணிக்கு வாழ்வின் செழிப்பு வெளியேதான் இருந்தது. மனதில் நிம்மதியில்லை, நிறைவில்லை. ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் ஒரே கட்டிலில் படுத்தாலும் அவளுக்கும் கணவனுக்குமிடையே மனதளவில் நீண்ட இடைவெளி காணப்பட்டது.
அந்த நிலைமைக்கு அவள்தான் காரண மென்று கையைப் பார்த்து விளக்கினேன்.
ஐக்கிய ரேகையை சுக்கிர மேட்டிலிருந்து தோன்றி வெட்டிய ரேகையுடன் ஆயுள், புத்தி, இருதய ரேகைகளுக்கிடையே பரந்த இடை வெளியும் அவளது கையில் காணப்பட்டது.
ஆயுள் ரேகையுடன் இணைந்து உற்பத்தியா காமல் அல்லது ஆயுள் ரேகையுடன் ரேகை இணைப்பு எதுவுமில்லாமல் தனித்து ஆயுள், இருதய ரேகைகளுக்கு மத்தியில் உற்பத்தியாகும் புத்திரேகை (C), அவ்விதம் ரேகை அமைந்தவன் புத்தியின் பலத்தையும் சுதந்திரப் போக்கையும் தன்னிச்சையான பிடிவாத குணத்தையும் காட்டும். அப்படியின்றி ஆயுள் ரேகையோடு புத்திரேகையானது இணைந்து உற்பத்தியான நிலையில் காணப்பட்டால் அத்தகையவருக்கு தன் தாய், தந்தை, மனைவி, பிள்ளை, குடும்பமென்று பிரிக்க முடியாத பாசப்பிணைப்பு இருக்கும். எனவே ஆயுள் ரேகையுடன் இணைந்த உற்பத்தியாகாத புத்தி ரேகையைக் கொண்ட ஆணோ, பெண்ணோ எப்போதும் தனித்து நிற்பதில் தனித்து வாழ்வதில் பிரியம் காட்டுவார். அதனைத் தன்மானம் என்று பெரிதாகப் பீற்றியும் கொள்வார்கள்.
இத்தகையாளர்கள் குடும்ப வாழ்வில் ஈடுபட்டாலும் விட்டுக் கொடுத்து வாழாமல் “தான் தனது என்று தன்னைப்புக் காட்டுவதில் ஆச்சரியமேதுமில்லை. கணவனோ அன்றி மனைவியோ தனக்குப் பணிந்து போகிறார் என்றால் அது அன்பு அல்லது காதலின் நிமித்தம் என்று கருதாமல் அது பயத்தின் நிமித்தம் என்று கருதி மகிழ்வார்கள். மேலும் மேலும் இணைந்து பழகுவதே சிறந்த பகாரமாக அமையும்.
சில சமயங்களில் சுத்தமானதும் புஷ்டியானதுமான சுக்கிரமேடு கையில் அமைந்திருந்தும் சுகமான வாழ்க்கை அமையாமல் சஞ்சலப்படுபவர்களையும் நான் பார்த்திருக்கிறேன். இதற்குக் காரணம் அவர்கள் கைகளில் அமைந்துள்ள இருதய புத்தி ரேகைகளின் இடை வெளி ஒன்றுக்கொன்று மிகவும் குறுகிக் காணப்படுவதேயாகும். இதில் இரு விடயங்களை நாம் அவதானிக்கலாம். அதாவது இருதய புத்தி ரேகையும் இடைவெளி குறுகி ஒன்றுக்கொன்று நெருங்கியிருக்கக் காணப்பட்டாலும் மண வாழ்வில் பிரச்சினைகள் தலை தூக்குகின்றன. அதேவேளை ஆயுள், புத்தி, இருதய ரேகைகளுக்கிடையே இடைவெளி மிக அகலித்துக் காணப்பட்டாலும் தாம்பத்தியம் பிரச்சினைக்குரியதாகிறது. ஏன் இவைகளுக்கிடையே அதிகமான இடைவெளி காணப்பட்டாலே விவாகம் நடப்பது இயலாத காரியமாக இருக்கிறது. இத்தகைய குறைகள் கையில் காணப்படுவோருக்கு சாதகப் பொருத்தம் ஏற்பட்டும் மனங்கள் பொருந்தியும் விவாகம் நடந்த சில மாதங்களில் பிரிவினை ஏற்பட்டு விடுகிறது.
மண வாழ்வில் இடர்ப்பாடுகளைக் குறிக்கும் இத்தகைய ரேகைக் குறிகளைக் கொண்டவர்கள், அவ்விதமே இடர்ப்பாடுகளை அனுபவிப்பவர்கள், தக்க பரிகாரங்களைச் செய்தால் குறைநீங்கி நலம்பெற முடியுமென்று தமிழகத்தின் கைரேகை வல்லுனர்கள் எழுதுகிறார்கள்.
ஆயுள், புத்தி, இருதய ரேகைகள் என்பன கீழ், மத்திய மேல் செவ்வாய் மேடுகளின் சமவெளியில் உற்பத்தியாகிச் செல்வதாலும் மண வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளைத் தீர்மானிப்பதில் செவ்வாய்க் கிரகத்திற்கு முக்கிய பங்கு இருப்பதாலும் திருமண வாழ்வில் குற்றங் குறைகளை வெளிக்காட்டும் ரேகை அமைப்புகளைக் கொண்டவர்கள். செவ்வாயின் நாயகரண்டு பிடித்து விவகாரத்தைப் பெரிதாக்குவார்கள்.
நான் கை பார்த்த பெண்மணி தன் சுய கௌரவத்தைப் பெரிதாக மதிக்கிறவர். அதேபோல தன் பிறந்த வீட்டையும் பெரிதாக மதிக்கிறார் என்பதையும் வசதியும் அந்தஸ்தும் மிக்க குடும்பத்திலிருந்து வந்த அவர் பெரும் சீதனம் கொடுத்து கல்யாணம் செய்து கொண்டதால் அதன் மூலம் தன் கணவன், அவர் எத்தகைய கல்வி மானாக உயர் பதவியில் இருந்த போதிலும் தான் விலை கொடுத்து வாங்கிய பொருளாக மதித்து இளக்காரமாய் நடத்துகிறார் என்பதையும் அது காரணமாகவே கணவனும் மனைவியும் ஒரே அறைக்குள் இணை சேர முடியாத இருது ருவங்களாக வாழ்கின்றனர் என்பதையும் அவரது பேச்சிலிருந்து தெரிந்து கொண்டேன்.
இவ்விதம் ரேகைக் குறிகள் அமைந்தவர்கள் தாம்பத்திய வாழ்வில் விரிசல் ஏற்படின் அதற்குரிய காரணிகளை அறிந்து புரிந்துணர்வுடன் விட்டுக் கொடுத்து இணைந்து பழகுவதே சிறந்த பரிகாரமாக அமையும்.
சில சமயங்களில் சுத்தமானதும் புஷ்டியானதுமான சுக்கிரமேடு கையில் அமைந்திருந்தும் சுகமான வாழ்க்கை அமையாமல் சஞ்சலப்படுபவர்களையும் நான் பார்த்திருக்கிறேன். இதற்குக் காரணம் அவர்கள் கைகளில் அமைந்துள்ள இருதய புத்தி ரேகைகளின் இடைவெளி ஒன்றுக்கொன்று மிகவும் குறுகிக் காணப்படுவதேயாகும். இதில் இரு விடயங்களை நாம் அவதானிக்கலாம். அதாவது இருதய புத்தி ரேகையும் இடைவெளி குறுகி ஒன்றுக்கொன்று நெருங்கியிருக்கக் காணப்பட்டாலும் மண வாழ்வில் பிரச்சினைகள் தலை தூக்குகின்றன. அதே வேளை ஆயுள், புத்தி, இருதய ரேகைகளுக்கிடையே இடைவெளி அகலித்துக்காணப்பட்டாலும் தாமபத்தியம் பிரச்சினக்குரியதாகிறது. ஏன் இவைகளுக்கிடையே அதிகமான இடைவெளி காணப்பட்டாலே விவாகம் நடப்பது இயலாத காரியமாக இருக்கிறது. இத்தகைய குறைகள் கையில் காணப்படுவோருக்கு சாதகப்பொருத்தம் ஏற்பட்டு மனங்கள் பொருந்தியும் விவாகம் நடந்த சில மாதங்களில் பிரிவினை ஏற்பட்டு விடுகிறது.
மண வாழ்வில் இடர்பாடுகளைக் குறிக்கும் இத்தகைய ரேகைக்குறிகளை கொண்டவர்கள், அவ்விதமே இடர்பாடுகளை அனுபவிப்பவர்கள், தக்க பரிகாரங்களைச் செய்தால் குறைநீங்கி நலம் பெற முடியுமென்று தமிழகத்தின் கைரேகை வல்லுனர்கள் எழுதுகிறார்கள். ஆயுள், புத்தி, இருதய ரேகை என்பன கீழ், மத்திய மேல் செவ்வாய் மேடுகளின் சமவெளியில் உற்பத்தியாகிச் செல்வதாலும் மண் வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளைத் தீர்மானிப்பதில் செவ்வாய்க் கிரகத்திற்கு முக்கிய பங்கு இருப்பதாலும் திருமண வாழ்வில் குற்றங் குறைகளை வெளிக்காட்டும் ரேகை அமைப்புகளை கொண்டவர்கள், செவ்வாயின் நாயகனான முருகக் கடவுளை நோக்கி செவ்வாய்க் கிழமை தோறும் விரதமிருந்து பூசை , அர்ச்சனை தான தருமங்களைச் செய்து வந்தால் ஒன்பது வாரங்களில் வியத்தகு நன் மாற்றங்கள், ஒன்று கூடுதல்கள் ஏற்படுமென திட்டமாய்க் கூறுகின்றனர். குறையுள்ள அன்பர்கள் இந்த வழியில் முயன்று பார்க்கலாமே?
சுக்கிர மேட்டில் ஒரு நட்சத்திரக் குறி தோன்றியிருந்து அதிலிருந்து ஒரு ரேகை ஆரம்பித்து ஆயுள், புத்தி, விதி மற்றும் இருதய ரேகைகளைக் கடந்து புதன் மேட்டை அடைந்தால் அத்தகையவருக்கு சித்தப் பிரமை அல்லது மூளைக் கோளாறு ஏற்பட வாய்ப்பிருப்பதை அது குறிக்கும். சுக்கிர மேட்டில் நட்சத்திரக் குறி இருப்பதே மக்கள் மத்தியில் மரியாதையை இழக்க வைத்து விடுகிற சங்கதி, இழக்கக் கூடாத ஒன்றை இழக்க வைத்துவிடுகிற ஒரு விடயம். இச்சுக்கிர மேட்டிலிருந்து நட்சத்திரக் குறியுடன் இந்த ரேகை ஆரம்பிப்பதால் காதல் தோல்வியினாலோ அல்லது சர்வம் அவரேயென்று நம்பியிருந்த ஒருவன் அல்லது மிக்க பாசத்திற்குய ஒருவன் திடீர் இழப்பினாலோ இத்தகைய புத்தி பேதலிப்பு நிலை உருவாகிறது என்பதை அது குறிக்கும்.
சுக்கிரமேட்டில் நட்சத்திரக் குறியிலிருந்து உற்பத்தியாகும் ஒரு ரேகை. புத்திரேகையிலுள்ள தீர்வுக் குறியொன்றை சென்று தொடுமானால் (E) அத்தகைய ரேகைக் குறியைக் கொண்டவர் வாழ்வில் இழக்கக் கூடாத ஒன்றை இழந்து அது காரணமாக நிரந்தர சோகத்திலும் விரக்தியிலும் வாடுவதை அது குறிக்கும்.
இப்படிப்படிப் பட்ட ரேகைக் குறியைக் கையில் கொண்டிருந்த பாடசாலை அதிபர் ஒருவரை எனக்குத் தெரியும். கடந்த 1990 இல் கிழக்கில் இராணுவ புலிகள் மோதல் உக்கிரமாக நடந்த நேரம், கிழக்குப்பல்கலைக்கழக வளாகத்தில் இடம் பெயர்ந்த அகதிகளோடு அகதிகளாக இவரும் தன் குடும்பத்துடன் தங்கியி ருந்தார். இவருடைய ஆண் மக்கள் இருவர் 17, 15 வயதுகளில் அப்போது அவருடன் தங்கியிருந்தனர். இராணுவத்தினர் வந்து விசாரணைக்கென அவ் வளாகத்திலிருந்து அழைத்துச் சென்ற 151 ஆண்களில் இவரது இரு மகன்க ளும் அடங்கியிருந்தனர். போனவர்கள் போனவர்கள்தான்.
அதன் பின் ஆனவரை முயன்றும் அவரால் தன் பிள்ளைகளைக் கண்டு பிடிக்க முடியவில்லை. அந்த இழப்பு அவரைப் பலமாகத்தாக்கியது. சில வருடங்களின் பின் அப்பிள்ளைகளின் இழப்பிற்கென அரசாங்கம் வழங்கிய நஷ்டஈட்டையும் பெற மறுத்துவிட்டார். சம்பவம் நடந்து 20 வருடங்கள் கழிந்தும் அச்சோகத்திலிருந்து அவரால் மீள முடியவில்லை. அதைப் பற்றி இப்போது கதைத்தாலும் கண்ணீர் சிந்துகிறார். அவருக்குள்ள நிரந்தர சோகத்தைப் போலவே அவர் கையிலும் இன்றுவரை மாறாமல் மேற்படி ரேகைக் குறி இருந்து வருகிறது.
இருதய ரேகையும் புத்திரேகையும் மிக நெருங்கியிருந்தாலும் இருதய , புத்தி, ஆயுள் ரேகைகள் ஒன்றுக்கொன்று மிக இடைவெளி விட்டுக் காணப்பட்டாலும் அன்பு பரிமாற்றத்தில் சிக்கலும் குடும்ப உறவில் சிக்கல்களும் பிரச்சினைகளும் ஏற்படுமென்று குறிப்பிட்டேனல்லவா? அதிலும் நிவாரணமளிக்கக்கூடிய ஒரு ரேகை அமைப்பு இருக்கிறது. இருதய ரேகையும் (J) புத்தி ரேகையும் கணிசமான அளவு இடை வெளியில் அமைந்து இதர விதி ரேகை (G) சூரிய ரேகை (F), அல்லது ஆரோக்கிய ரேகை (H) போன்றவற்றால் ஒரு சற்சதுரக் குறியோ அல்லது நீள் சதுரக்குறியோ அமைந்து விடுமானால் எவ்வளவு பிரச்சினைகள் அன்பு செலுத்துமிடத்திலோ கணவன், மனைவி உறவுக்குள்ளோ ஏற்பட்டாலும் அவை பொறுமை, மன்னிப்பு, விட்டுக் கொடுப்பு, அர்ப்பணிப்பு, புந்துணர்வு போன்ற அருங் குணங்களால் துரிதகதியில் சுமுகமாகவே தீர்ந்து போய் விடுமென்பதுதான் அந்த சதுரரேகை அமைப்பு காட்டும் நிவாரணமாகும்.
திருவோணம்




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக