சனி, 26 ஜூன், 2010

முடிந்தால் எனி கற்பழித்துப்பாருங்கள்

பாலியல் வல்லுறவிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் கருத்தடை உறையொன்றை தென்ஆபிரிக்க மருத்துவரான ஸொன்னட் எஹலர்ஸ் கண்டுபிடித்துள்ளார்.

“ரேப் எக்ஸ்'(Rapex) என்ற இந்த கருத்தடை உறையை அணிந்திருக்கும் பெண்ணை எவராவது பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சிக்கும் பட்சத்தில், அக்கருத்தடை உறையிலுள்ள பற்கள் போன்ற அமைப்புகள் தன்னிச்சையாக செயற்பட்டு குறிப்பிட்ட ஆணின் பிறப்பு உறுப்பை கடித்து பதம் பார்த்து விடும் என தெரிவிக்கப்படுகிறது.

உலகிலேயே அதிகளவு பாலியல் பலாத்காரங்கள் இடம்பெறும் நாடாக தென்ஆபிக்கா உள்ளது.

தென்னாபிரிக்காவில் நடைபெறும் உலகக் கிண்ண போட்டிகளையொட்டி, மேற்படி கருத்தடை உறைகள் அங்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்த விசேட கருத்தடை உறை தொடர்பில் ஸொன்னட் எஹ்லர்ஸ் விபரிக்கையில், “ இந்த கருத்தடை உறை ஊசி அமைப்பிலிருந்து பிறப்பு உறுப்பை மருத்துவர் ஒருவரின் உதவியுடன் மட்டுமே விடுவிக்க முடியும். மேற்படி ஊசிகள் பிறப்பு உறுப்பை காயப்படுத்துவதால், குறிப்பிட்ட ஆண் நடக்க முடியாது சிரமத்தை எதிர்கொள்ள நேடும். அத்துடன் பாலியல் உறவு குறித்து சில நாட்களுக்கு சிந்தித்துக் கூட பார்க்க முடியாத நிலை அந்த ஆணுக்கு ஏற்படும்'' என்று கூறினார்.

உலகக் கிண்ண போட்டிகளின் பின் 30000 கருத்தடை உறைகளை இலவசமாக விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் பின் தலா 2 டொலர் விலைக்கு இந்த கருத்தடை உறைகள் விற்பனை செய்யப்படவுள்ளன.

பொறியியலாளர்கள், மகளிர் நோய் சிகிச்சையாளர்கள், உளவியல் நிபுணர்கள் ஆகியோரின் ஆலோசனைகளைப் பெற்றே இந்த கருத்தடை உறையை வடிவமைத்ததாக மருத்துவர் ஸொன்னட் எஹ்லர்ஸ் தெரிவித்தார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல