புதன், 15 செப்டம்பர், 2010

ஆணுறுப்பில் 6 அங்குல பென்சில்

ஆணுறுப்பில் 6 அங்குலத்துக்கு பென்சிலை செருகிய ஐ.ஐ.டி. மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பிரபல ஐ.ஐ.டி.யில் 3ம் ஆண்டு படித்து வருபவர் ராகேஸ் குமார் (Rakesh Kumar 24). விடுதியில் தங்கி படித்து வந்தார்.

நேற்று இவருடைய அறையில் இருந்து ‘அய்யோ... அம்மா...‘ என்று அலறல் சத்தம் கேட்டது. உடனே, மற்ற அறைகளில் தங்கியிருந்த மாணவர்கள் ஓடிச் சென்று பார்த்தனர். அங்கு ராகேஸ் இருந்த நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே, அவரை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள தனியார் மருந்துவமனைக்கு ஓடினர்.

அவருடைய நிலையை பார்த்து டாக்டர்களும் அதிர்ந்தனர். அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

அப்படி என்னதான் ராகேஸ் செய்திருந்தார்? அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் ராஜேஷ் அகர்வால் (Rajesh Agarwal) கூறுகையில்,

‘‘ராகேஸ் தனது ஆணுறுப்பில் தினமும் பென்சிலை சிறிது சிறிதாக நுழைத்து இன்பம் கண்டு வந்துள்ளார். கடந்த 6 மாதங்களாக இது நடந்துள்ளது. நேற்றும் அதேபோல் பென்சிலை நுழைத்தபோது, 6 அங்குலத்துக்கு அது உள்ளே சென்று விட்டது. அவருடைய சிறுநீர் பை வரை பென்சில் முனை சென்றுள்ளது. இதுபோன்ற ஒரு சம்பவத்தை எனது அனுபவத்தில் நான் கண்டதில்லை. அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்துதான் பென்சிலை அகற்ற வேண்டும். ராகேஸ் மனநோயாளி அல்ல; அவர் நல்ல மனநிலை உள்ளவர்தான். இதுபோல் எப்படி செய்தார் என்று தெரியவில்லை‘‘ என்றார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல