புதன், 15 செப்டம்பர், 2010

நாய்களுக்கான ஐஸ்கிறீம்

வீட்டில் செல்லப் பிராணியாக வளர்க்கப்படும் நாய்களுக்கு என ஐஸ்கிறீம் ஒன்றை லண்டனைச் சேர்ந்த ஒரு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வான் மூலம் விற்பனை செய்யப்படும் இந்த ஐஸ்கிறீம்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலை நாடுகளில் நாய், பூனை உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகளை செல்லப் பிராணிகளாக வளர்ப்பவர்கள் அதிகம் உள்ளனர்.

தங்களின் செல்லப் பிராணிகளைக் குழந்தைகளைப் போல் பாவித்து அவற்றிற்குப் பணிவிடை செய்கின்றனர். சிலர் தங்கள் சொத்து முழுதையுமே செல்லப் பிராணிகள் மீது எழுதும் சம்பவங்களும் அடிக்கடி அங்கு நடக்கின்றன. இவர்களின் மோகத்தைத் தெரிந்துகொண்ட லண்டனைச் சேர்ந்த கே 99 என்ற நிறுவனம் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களுக்கான ஐஸ்கிரீம் ஒன்றைத் தயார் செய்து விற்பனை செய்து வருகிறது.

வழக்கமாக தயாரிக்கப்படும் வனிலா சுவைக்கு பதிலாக பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி, கோழிக் குஞ்சு இறைச்சி, எலும்பு ஆகியவை கலந்து நாய்கள் சாப்பிடுவதற்கான ஐஸ்கிறீம் தயாரிக்கப்படுகிறது. விஞ்ஞானிகள் அடங்கிய ஒரு குழுவின் ஆலோசனையின் பேரில் நாய்கள் விரும்பி சாப்பிடும் வகையிலும், உடல் நலத்தை பாதிக்காத வகையிலும் வெப்ப நிலை, சுவை, கலைநயம் மிக்க ஐஸ்கிறீமை அந்நிறுவனம் தயாரிக்கிறது.

நாய்களுக்கான ஐஸ்கிறீம் இரண்டு சுவை கொண்டது. கே99 நிறுவனம் வான் மூலம் நாய்களுக்கான ஐஸ்கிறீமை விற்பனை செய்கிறது. ஒவ்வொரு தெரு வழியாக இந்த வான் செல்லும் போது ‘ஸ்கூபி டூ’ என்ற பாட்டு இசைக்கப்படுகிறது. லண்டனைச் சேர்ந்த சாலி பிசான்ட் என்பவர் கூறுகையில் ‘இங்கிலாந்து முழுவதும் கணக்கிட்டால் கிட்டத்தட்ட ஒரு கோடியே 5 இலட்சம் நாய்கள் உள்ளன. இவற்றில் பெரும்பான்மையான நாய்கள் தண்ணீரைக் குடித்து தங்களை குளிர்ச்சி செய்துகொள்கின்றன. இதை கருத்தில் கொண்டே இங்கிலாந்தில் உள்ள நாய்களுக்கு ஐஸ்கிறீம் கொடுக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது’ என்றார்.

நாய்களுக்கான உணவுப் பொருட்களைத் தயார் செய்யும் கே99ன் தலைவர் செரிக் நாலே கூறுகையில் ‘புதிய ஐஸ்கிறீமின் சுவையும், வடிவமைப்பும் நாய்கள் விரும்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. நீண்ட ஆய்வுக்கு பின்னரே பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி மற்றும் கோழிக்குஞ்சு இறைச்சியை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து ஐஸ்கியம், ஐஸ்கிறீம் பிஸ்கட் தயாரித்துள்ளோம். இதை நாய்கள் நிராகரிக்காது என்று நம்புகிறோம். முன்னதாக சோதனைக்காக அளிக்கப்பட்ட ஐஸ்கிறீம்களை நாய்கள் மிகுந்த ஆவலுடன் விரும்பிச் சாப்பிட்டன’ என்றார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல