புதன், 15 செப்டம்பர், 2010

2013ல் சூரியப்புயல் தாக்கும் அபாயம்

2012ல் உலகம் அழியும் என பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில் ஆராய்ச்சியாளர்கள் மற்றொரு அதிர்ச்சித் தகவலை கூறியுள்ளனர்.

சூரியன் தனது ஆழ்ந்த தூக்கத்திலிருந்து விழித்து வருவதாக குறிப்பிடும் ஆராய்ச்சியாளர்கள், 2013 ஆம் ஆண்டுக்குள் உலகின் தொலைத்தொடர்பு மற்றும் மின்சக்தி கட்டமைப்புகளை ஸ்தம்பிக்கச் செய்யும் மிகப் பெரும் வான்வெளி புயல்கள் ஏற்படும் என்று எச்சரித்து உள்ளனர்.

சூரிய செயல்பாடுகளில் அதிக மற்றும் குறைந்த விசை கொண்ட ஒரு பதினொரு வருட சுழற்சி முறையில் இயங்கி வரும் நமது சூரியன் தற்போதுதான் அது ஒரு குறிப்பிடத் தகுந்த அமைதியான நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு நகர்கிறதாம்.

அதில் கத்ரீனா புயலை விட இருபது மடங்கு பொருளாதார நஷ்டத்தை உருவாக்கவல்ல 100 ஹைட்ரஜன் குண்டுகளின் விளைவை ஏற்படுத்தக்கூடிய ஆக்ரோஷமான பெரும் வெடிப்புகள் சூரியனில் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

தீவிரமான ஒரு சூரிய (மின்காந்த) புயலில் பெரும் மின்சேமிப்பு காலங்கள், செயற்கைக்கோள் திசையறிதல், விமானப் பயணங்கள், பணப் பரிமாற்றங்கள் மற்றும் அவசர வானொலி தொடர்புகள் கூட முழுவதுமாக பாதிக்கப்படும் என நம்பப்படுகிறது.

2013 ஆம் ஆண்டளவில் சூரியனிலிருந்து வர இருக்கும் ஆக்ரோஷமான விசிறல்கள் மற்றும் அதன் பாதிப்புகளிலிருந்தும் பூமியை பாதுகாப்பது பற்றிய சாத்தியங்களை ஆராய வாஷிங்டனில் சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் கூடி ஆலோசனை செய்தனர்.

இந்த நெருக்கடியை எதிர்கொள்ள நாசா பல்வேறு செயற்கை கோள்களை பயன்படுத்தி வருகிறது. தேசிய அறிவியல் மையம் இரண்டு வருடங்களுக்கு முன்புதான் இத்தகைய பெரும் விண்வெளி நிகழ்வுகள் சமூக பொருளாதார நிலைகளின் மீது தாக்கம் ஏற்படுவதைப் பற்றிய பிரச்சினையை ஆய்வுக்கு கொணடு வந்தது. ஆனால் இந்த சூரிய புயல் எப்போது நம்மை சமீபிக்கும் என்று முன்பே அறிய முடிந்தால் பாதிப்புகளை பெருமளவு தவிர்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல