புதன், 15 செப்டம்பர், 2010

இலங்கை யுவதிகளைச் சிங்கப்பூரில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவர் கைது!

இலங்கை யுவதிகளைச் சிங்கப்பூரில் பலவந்தமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்திய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அழகுக் கலைத் துறையில் தொழில் வாய்ப்புகளை வழங்குவதாகத் தெரிவித்து இந்த யுவதிகள் சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

கட்டுநாயக்க பகுதியில் இந்தச் சந்தேகநபர் நேற்று இரவு குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஏற்கனவே இந்த நடவடிக்கையுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரிலுள்ள அழகுக் கலை நிலையமொன்றில் ஒன்றரை லட்சம் ரூபா சம்பளத்திற்குத் தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாகச் சீதுவைப் பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரைச் சந்தேக நபர் அழைத்துச் சென்றுள்ளமை விசாரனைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

எனினும் அவர் அங்கு பலவந்தமாக விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

சிங்கப்பூரிலிருந்து தப்பிவந்த குறிப்பிட்ட யுவதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் செய்த முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல