புதன், 15 செப்டம்பர், 2010

மகிழ்சசியான செய்தி

அவர் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருக்கு ஆறு பெண்கள்! எல்லோருமே கல்யாண வயதை அடைந்தவர்கள். ‘ஆறு பெண்களுக்கும் எப்படித் திருமணம் செய்து வைப்பது?’ என்று கவலைப்பட்டுக் கவலைப்பட்டே அவருக்கு ஒருநாள் மாரடைப்பு வந்து விடுகிறது. அவரை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள்.

அந்த நேரம் பார்த்து, அவர் வாங்கி வைத்திருந்த ஒரு பரிசுச் சீட்டுக்குப் பத்து இலட்ச ரூபா விழுகிறது! இந்த மகிழ்ச்சியான செய்தியை அவரிடம் சொன்னால், அவருக்கு மீண்டும் மாரடைப்பு வந்து விடுமோ...? என்று பயந்த மனைவி, டாக்டரை விட்டே இந்தச் செய்தியைத் தன் கணவரிடம் பதமாகச் சொல்லச் சொல்கிறாள்.

டாக்டர் மனோதத்துவ முறையில் மெதுவாக அவளது கணவரிடம் பேச்சை ஆரம்பிக்கிறார்.

உங்களுக்கு லாட்டரியில் ஒரு இலட்சம் பரிசு விழுந்தால் என்ன செய்வீர்கள்...?

‘நான் என் மூத்த பெண்ணுக்குத் திருமணம் செய்து விடுவேன்...’

‘சரி, இரண்டு இலட்சம் விழுந்தால்...?

‘இரண்டாவது பெண்ணுக்கும் கல்யாணம் முடித்து விடுவேன்...’

‘சரி... பத்து இலட்சம் விழுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்’.

எனக்கெல்லாம் எங்கே டாக்டர் பத்து இலட்சம் விழும்...? அப்படி ஒருவேளை விழுந்தால், சத்தியமாக உங்களுக்கு இரண்டு இலட்சம் தந்துவிடுவேன்.

எதிர்பாராத இந்த இன்ப அதிர்ச்சியில் டாக்டருக்கு மாரடைப்பு வந்து இறந்து விட்டார். மகிழ்ச்சி எப்படி ஒரு சுவையோ, அதேமாதிரி துயரமும் ஒரு சுவை!
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல