ஞாயிறு, 31 அக்டோபர், 2010

4 வயது சிறுமி மீது அமெரிக்காவில் வழக்கு

வயதான பெண் இறப்புக்கு காரணமான 4 வயது சிறுமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று மான்காட்டன் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கடந்த 2009 ஏப்ரலில் மான்காட்டன் நகரில் 4 வயதுடைய சிறுமி ஜூலியட் மற்றும் சிறுவன் ஜேகப் அவர்கள் வசிக்கும் தெருவில் சைக்கிள் ஒட்டி பழகினர். அவர்களின் அம்மாக்களின் பார்வையில் துணை சக்கரம் உள்ள சைக்கிளில் போட்டி போட்டு ஓட்டினர். அப்போது அதுவழி எதிரே வந்த மேனக் (87) என்ற பெண் மீது ஜூலியட் மோதினாள்.

அதில் நிலை தடுமாறி கீழே விழுந்த வயதான பெண்ணுக்கு காயம் ஏற்பட்டு ஆபரேஷன் செய்யும் அளவிற்கு போனது. அச்சம்பத்துக்கு பின் 3 வாரங்களில் அந்த மூதாட்டி இறந்துவிட்டார். இது தொடர்பாக சிறுமி மீது வழக்கு தொடரப்பட்டது. சம்பவம் நடந்தபோது ஜூலியட்டுக்கு விவரம் தெரியாத வயது என்பதால் வழக்கில் இருந்து சிறுமியை விடுவிக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் வாதாடினார்.

அம்மாக்களின் பார்வையின் போது சம்பவம் நடந்துள்ளதால் ஜூலியட் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று மான்காட்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல