ஞாயிறு, 31 அக்டோபர், 2010

பெட்ரூமிற்குள் பாய்ந்த கார்

ஆஸ்திரேலியாவில் நிலைதடுமாறி ஓடிய கார் சாலையோரத்தில் இருந்த வீட்டின் படுக்கை அறைக்குள் புகுந்தது. ஆனால், வீட்டுக்குள் இருந்தவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். காரம் டவுன்ஸ் நகரத்தில் வசிக்கும் டெமிட்ரியாஸ் என்பவருக்கு தனது அலுவலக வேலை சம்மந்தமாக சில ஆவணங்களை முடிக்க வேண்டி இருந்தது. எனவே வீட்டில் இரவு 2 மணிக்கு கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக வீட்டின் முன்பக்க சுவரை இடித்து கொண்டு வந்த கார்,

படுக்கை அறையில் இருந்து கட்டிலை நொறுக்கி நின்றது. படுக்கையில் இருந்து எழுந்து வந்து கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை செய்ததால் அவர் அதிர்ஷ்டவசமாக சிறு காயத்துடன் உயிர் தப்பினார். இது குறித்து டெமிட்ரியாஸ் கூறுகையில், படுக்கை அறைக்குள் கார் புகுந்து கட்டிலை முழுவதுமாக சேதமாக்கி விட்டது. நான் தூங்காமல் வேலை பார்த்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன். இல்லையெனில் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படும் அளவிற்கு எனக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்றார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல