அதி்ல் பள்ளி குழந்தைகள் இருவரை கடத்தி கொலை செய்த சம்பவம் மிக கொடூரமானது. கடத்திக் கொன்ற அந்த டிரைவருக்கு உடனடியாக மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.
வேலாயுதம் பட சூட்டிங்கிற்காக உடுமலை அருகே திருமூர்த்திமலை பகுதியில் முகாமிட்டுள்ள விஜய் இச்சம்பவம் குறித்து ஆவேமாக பேட்டியளித்துள்ளார்.
அவரது அறிக்கை விவரம் :
கோவையில் பள்ளிக்கு சென்ற அக்கா, தம்பி, முஸ்கின், ரித்திக் என இரு குழந்தைகளை பணத்துக்காக கடத்தி கொலை செய்த சம்பவம் அறிந்ததும் இதயம் உறைந்து போனது. துள்ளி திரிந்த இரு இளம் தளிர்களை ஈவு, இரக்கமில்லாமல் கொலை செய்ய எப்படித்தான் மனம் வந்ததோ தெரியவில்லை. பெற்ற குழந்தைகள் இவ்வளவு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அவர்களது பெற்றோர் மனதை என்ன பாடு படுத்தியிருக்கும் என நினைத்து பார்க்கவே அச்சமாக உள்ளது. பணத்துக்காக குழந்தைகளை கடத்தும் கொடூர கும்பலை இனியும் விட்டு வைக்கக்கூடாது.
இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. குழந்தைகளை கடத்தி கொலை செய்வது தான் உலகிலேயே மிக கொடூரமான குற்றம். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு உடனடியாக மரண தண்டனை விதிக்கும் வகையில் அவசர சட்டங்கள் ஏற்படுத்தவேண்டும். இதை ஒரு நடிகனாக சொல்லவில்லை.
மனிதநேயமுள்ள கோடிக்கணக்கான மக்களின் மனக்குமுறலையும், வேதனையையும் வெளிப்படுத்தியுள்ளேன். குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு ஆறுதல் மட்டுமே மருந்தாகிவிடாது. கடவுளால் மட்டுமே அவர்களுக்கு ஆறுதல் வழங்கமுடியும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார் விஜய்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக