அது மேலும் தெரிவிக்கையில், இளவரசர் இதுவரையில் சவுதி அரச குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்துள்ளார் என்றும், இச்செய்தி குறித்து மறுக்கவோ, அல்லது ஏற்றுக்கொள்ளவோ முடியாமலுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரியொருவர் "Sunday times" நாளிதழுக்கு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கின்றது.
ரிஸானா விவகாரத்தை இளவரசர் சார்ல்ஸ் மிகுந்த அக்கறையுடன் உன்னிப்பாக அவதானித்து வந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள பிரிட்டிஷ் உயர்ஸ்தானிக பேச்சாளர் Dominic Williams கூறுகையில், நாம் இதுபற்றி எதுவித கருத்தும் கூறமுடியாத நிலையில் உள்ளோம். நாம் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பிரதிநிதிகளாகத்தான் இங்கு இருக்கின்றோமே தவிர ரோயல் குடும்பத்தின் பிதிநிதியாக இல்லை என்றார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக