ஞாயிறு, 31 அக்டோபர், 2010

இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட இடத்தில் மசூதி வேண்டாம்

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட இடத்திற்கு அருகே மசூதியொன்றைக் கட்டுவதற்கு அங்குள்ள முஸ்லிம் அமைப்பு முடிவு செய்திருந்தனர். அதனை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் ஆதரித்து இருந்தார்.

 மசூதி கட்டும் திட்டத்தை கைவிடும்படி உலகப்பெரும் செல்வந்தர்களில் ஒருவரும் சவூதி இளவரசருமான அல்வலீட் பின் தலால் தெரிவித்துள்ளார்.

"நியூயோர்க் மசூதி கட்டும் திட்டத்தில் என்னைத் தொடர்புப்படுத்தி ஏராளமான செய்திகள் வெளியானதைப் படித்தேன். ஆனால், அவை அனைத்தும் பொய்யானவை. அந்த மசூதி திட்டத்துக்கு நான் எந்தவித நிதி பங்களிப்பும் செய்யவில்லை. இரட்டை கோபுர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் காயங்கள் இன்னும் ஆறவில்லை. அவர்களுக்கு மதிப்பளித்து அங்கு மசூதி கட்டுவதை தவிர்க்க வேண்டும்." என்று இளவரசர் அல்வலீட் பின் தலால் தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல