சில ஊர்களில் கடலுணவுக்குப் பெரும் பஞ்சம். சில காலங்களில் கடலுணவு கிடைப்பதும் இல்லை. இந்நிலைமையில் மாமிசம் இல்லாமல் சாப் பிட முடியாதென்ற மனநிலை உள்ளவர்களை சமாளிப்பதற்கும் ஒரு நடைமுறை உண்டு.
அதுதான் பூசணிக்காய்க் கறிக்குள் கருவாட்டுத் துண்டுகளைப் போடுவது.அடேங்கப்பா! கருவாட்டு மணம், இடையிடை யே கருவாட்டுத் துண்டுகள். பூசணிக்காய் கறி யும் மணம் குணம். மாமிச வேட்கைக்கு அது போதும். ஒரு பிடி பிடித்துவிடும் சம்பிரதாயமும் எமக்குப் பழக்கப்பட்டவையே.அட! இதெல்லாம் எதற்கு! என்று நீங்கள் கேட்கலாம்.இங்குதான் நல்லூரில் சைவ ஹோட் டல் அமைக்கும் திட்டம் பொருந்துகிறது.
அதாவது முதலில் ஹோட்டல் கட்டுதென்று முடிபு. பின்னர் அதற்குப் பலரும் எதிர்ப்பு. ஐயா! நல்லூர்க் கந்தக்கோட்டம் அமைந்துள்ள திவ்ய ஷேத்திரத்தில் விடுதியா? என்று பலரும் ஏங்கிக் கொள்ள, நேற்று முன்தினம் ஒரு கூட்டம். கூட்டத்தில் பல் வேறு கருத்துக்கள். முடிபு சைவ ஹோட்டல் என்ற சொற்பதத்தோடு யாத்திரிகர் விடுதி என்ற நாமம் சூட்டி கட்டுவதென்பதாயிற்று.
நல்லூர் முருகன் ஆலயத்திற்கு அருகாமை யில் யாத்திரிகர் விடுதி கட்டுவது நல்லது என்ற கருத்தியலை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் நல்லூரில் யாத்திரிகர் விடுதி கட்டி னால் அங்கு வருடம் முழுவதும் ஆட்கள் வருவார் களா? அவ்வாறு வருவார்கள் எனில் அவர்கள் யார்? இந்தக் கேள்விகள் எழுந்தால் எல்லாவற் றுக்கும் தீர்வு கிடைக்கும்.
அதாவது நல்லூர் மஹோற்சவ காலத்தில் மட்டுமே எம்மவர்கள் வெளிநாடுகளில் இருந்தும் , வெளி மாவட்டங்களிலிருந்தும் இங்கு வருவார் கள். அங்ஙனம் வருபவர்கள் தங்கள் உறவினர் கள் வீடுகளில் தங்குவர்.எனவே நல்லூர் மஹோற்சவ காலத்தில் மட் டும் தங்கக்கூடிய ஒரு சில யாத்திரிகர்களுக்காக ஐந்து நட்சத்திர யாத்திரிகர் மடத்தைக் கட்டுவது பொருத்தமானதா?
யாத்திரிகர் மடம் நட்டத்தில் இயங்குகிறது. எனவே அரை, கால் சட்டை அணிந்தவர்கள் தங் குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். பின்பு அவர் களுக்கு மரக்கறி பிடிக்கவில்லையாம்.அட! பூசணிக்காய்க் கறிக்குள் இரண்டு கரு வாட்டுத்துண்டைப் போடு. இதுவே யாத்திரிகர் மடத்தில் நடக்கும்.
பொறுப்பான நிறுவனங்கள் பொறுப்பற்ற வேலையில் இறங்கக்கூடாது. நல்லூரில் யாத்திரிகர் விடுதிக்கு இப்போது அவசரம் எதுவும் இல்லை. எனவே இந்த சிந்தனையுள்ள நிறுவனங்கள் குறைந்தது இன் னும் 3 வருடங்கள் கழித்து இங்கு வரட்டும். அப்போது இருக்கின்ற களநிலையை வைத்து கூட்டம் போட்டு முடிபெடுக்கலாம். இதைவிடுத்து பூசணிக்காய்க் கறிக்கு கரு வாடு போடும் வேலைகள் எதுவும் வேண்டாம்.
வலம்புரி


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக