சனி, 25 டிசம்பர், 2010

14 வயதில் குழந்தையொன்றுக்கு பெற்றோராகிய சிறுவனும் சிறுமியும் (படங்கள் இணைப்பு)

பிரித்தானியாவில் மிகவும் இளமையான பெற்றோர் என்ற பெயரை ஒரே வகுப்பில் கல்வி கற்கும் 14 வயது சிறுவனும் சிறுமியும் பெறுகின்றனர்.
தென் வேல்ஸில் கயர் பில்லி நகரிலுள்ள சென்.செனிட் பாடசாலையில் நாதன் பிஷ்போர்ன் என்ற மேற்படி சிறுவனும் ஏப்ரல் வெப்ஸ்டர் என்ற மேற்படி சிறுமியும் முதன் முதலாக சந்தித்து காதல் கொண்டனர்.

காதல் எல்லை கடந்ததன் விளைவாக ஏப்ரல் வெப்ஸ்டர் தனது 13 ஆவது வயதில் கர்ப்பமடைந்தார்.

இந்நிலையில் ஏப்ரல் வெப்ஸ்டர் மருத்துவமனை சத்திரசிகிச்சைப் பிரிவில் 8 இறாத்தல் 14 அவுன்ஸ் நிறையுடைய ஆரோக்கியமான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தற்போது தென் வேல்ஸில் கேடிலி எனும் இடத்தில் வசிக்கும் ஏப்ரல் வெப்ஸ்டர் மற்றும் அவருடைய பெற்றோரின் பராமரிப்பில் ஜேமி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் வெப்ஸ்டரின் வீட்டிலிருந்து இரு மைல் தொலைவிலுள்ள வீட்டில் தனது பெற்றோருடன் வசிக்கும் நாதன், வார இறுதியில் குழந்தையை தன்னுடன் வைத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளான்.

“நான் தந்தையானதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். நான் ஏனைய தந்தைமார் போன்று அவனை பராமரிக்க விரும்புகிறேன்'' என்று நாதன் கூறினான்.

இது தொடர்பில் ஏப்ரல் வெப்ஸ்டரின் தாயாரினது சின்னஞ்சிறு மகள் கர்ப்பமாக இருக்கிறாள் என்பதை அறிந்தபோது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் எனக்கு ஓர் அழகிய பேரன் பிறந்திருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்று தெரிவித்தார்.

ஓய்வுபெற்ற டிரக் வண்டி சாரதியான நாதனின் தந்தை ரொன் (53 வயது) விபரிக்கையில், “எமது மகன் தந்தையானது எமக்கு மகிழ்ச்சியளிப்பதாக இல்லை. ஏனெனில் அவன் மிகவும் இள வயதினனாக உள்ளான்.
அவன் முட்டாள்தனமான காயமொன்றை செய்துவிட்டதாகவே நாம் கருதுகிறோம்.

எனினும் நடந்ததை எம்மால் மாற்ற முடியாது. அதனால் ஜேமியை எமது பேரனாக நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம்'' என்று கூறினார்.
இளம் வயதில் தாயாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஏப்ரல் வெப்ஸ்டர், இளம் தாய்மாருக்கான கல்வி நிலையமொன்றில் கல்வியை தொடரப் போவதாக தெரிவித்தார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல