சனி, 25 டிசம்பர், 2010

4 வயது மகளை கொன்று உடல் பாகங்களை வெட்டி அகற்றிய தாய்

4 வயது மகளை கொன்று சடலத்திலிருந்து உறுப்புகளை கொடூரமான முறையில் வெட்டி அகற்றிய தாயொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

கிழக்கு லண்டனில் கிளப்டன் எனும் இடத்திலுள்ள மாடிக் குடியிருப்பு வீட்டில் வசிக்கும் ஷய்மா பாருசி என்ற 35 வயது பெண்மணியே இவ்வாறு மகளைப் படுகொலை செய்துள்ளார்.

சிறுமியின் உடலிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட இருதயம் மற்றும் ஏனைய உடல் பாகங்கள் வீட்டின் வெவ்வேறு அறைகளில் வைக்கப்பட்டிருந்தன.
பொலிஸார் தகவல் கிடைத்து குறிப்பிட்ட வீட்டை சென்றடைந்த போது சமையலறையில் சின்னாபின்னப்படுத்தப்பட்டிருந்த தனது மகளின் சடலத்தின் அருகே ஷய்மா பாருசி அமர்ந்து இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஷய்மா பாருசியின் கணவரான ஜேரோம் நெக்னியே (36 வயது) தனது மகள் கொடூர மான முறையில் படுகொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
அவருக்கு 14 வயது மற்றும் 16 வயதுடைய இரு பிள்ளைகள் உள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற போது மேற்படி இரு பிள்ளைகளும் வீட்டில் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஷய்மாவை பசோதித்த மருத்துவர்கள், அவரது மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அவருக்கு மனநல சிகிச்சையை வழங்க சிபாரிசு செய்துள்ளனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல