சனி, 25 டிசம்பர், 2010

இளவரசர் வில்லியம்கேட் மிடில்டன் உருவப்படத்துடன் நாணயங்கள் வெளியீடு

பிரித்தானிய இளவரசர் வில்லியம் தனது நீண்ட நாள் காதலி கேட் மிடில்டனை எதிர்வரும் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் திகதி திருமணம் செய்யவுள்ளதையொட்டி, அவர்களது உருவப்படங்களைக் கொண்ட நாணயங்கள் பிரித்தானியாவில் வெளியிடப்பட்டுள்ளன.

இளவரசர் வில்லியம் அண்மையில் தனக்கும் கேட் மிட்டில்டனுக்கும் இடையே இடம்பெற்ற திருமண நிச்சயதார்த்தம் தொடர்பில் அறிவிப்புச் செய்திருந்தார்.

பிரித்தானிய அரச குடும்ப ஜோடி ஒன்றின் திருமண நிச்சயதார்த்தத்தை வெளிப்படுத்தும் வகையில் நாணய மொன்று வெளி யிடப்படுவது இதுவே முதல் தடவையாகும். அத்துடன் இந்த நாணயத்தில் மேற்படி இருவரின் உருவப்படங்களும் ஒருவரை யொருவர் நோக்கும் வகையில் உத்தியோகப்பூர்வமற்ற தோற்றப்பாட்டில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இளவரசர் வில்லியத்தின் தாயான இளவரசி டயானா போன்றே புகைப்படப்பிடிப்பாளர்களால் அதிகளவில் முற்றுகையிடப்பட்டுவரும் ஒருவராக கேட்மிடில்டன் விளங்குகிறார்.
தங்கம் மற்றும் வெள்ளியில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும் இந்த நாணயங்கள் 9.99 ஸ்ரேலிங் பவுணிலிருந்து 1,550 ஸ்ரேலிங் பவுண் வரையான விலைப் பெறுமதியுடையவையாகும்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல