சனி, 25 டிசம்பர், 2010

காணாமல் போன பிரான்ஸ் மன்னரின் தலை கண்டுபிடிப்பு

200 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன இறந்த அரசர் ஒருவரது தலையை அதி நவீன தொழில்நுட்ப பரிசோதனைகளை மேற்கொண்டு மருத்துவர்கள் அடையாளங் கண்டுள்ளனர்.
இந்த தலை 1610 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பிரான்ஸின் 4 ஆம் ஹென்றி மன்னருக்கு உடமையானதாகும்.

1793 ஆம் ஆண்டு பாரிஸ் நகருக்கு அண்மையில் செயின்ட் டெனிஸ் எனும் இடத்தில் அமைந்துள்ள அவரது கல்லறை புரட்சியாளர்களால் தாக்கப்பட்டதையடுத்து அவரது தலை காணாமல் போனது.

அவரது சடலத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட தலையை ஏனைய சடலங்களின் எச்சங்களிலிருந்து வேறுபடுத்தி கண்டறிவது இதுவரை காலமும் சாத்தியமற்ற ஒன்றாகவே இருந்து வந்தது.
இந்நிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்வதில் நிபுணத்துவம் பெற்றவரான பிலிப்பே சார்லியா தனக்கு கிடைத்த குறிப்பிட்ட மனிதத் தலையை ஆய்வுக்குட்படுத்தி அது நான்காம் ஹென்றி மன்னருடையது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

தலையில் மூக்கின் கீழ் பகுதியிலான தழும்பு, மீசை மற்றும் துளையிடப்பட்ட வலது காது என்பனவற்றை வைத்தே அந்த தலை 4ஆம் ஹென்றி மன்னருடையது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மண்டையோடானது செயின்ட் டெனிஸ்ஸிலுள்ள மன்னரது கல்லறையில் எதிர்வரும் வருடம் புதைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேற்படி மண்டையோட்டை வானொலி காபன் கதிர்ப்பு பரிசோதனைக்கு உட்படுத்திய போது அது 1450 ஆண்டுகளுக்கும் 1650ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல