சனி, 25 டிசம்பர், 2010

மணமகளையும் திருமண தோழனையும் சுட்டுக்கொன்ற மணமகன் தற்கொலை

மணமகள், திருமண தோழன் ஆகியோரை சுட்டுக் கொன்றுவிட்டு மணமகன் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட பரபரப்பு சம்பவம் பிரேசிலில் இடம்பெற்றுள்ளது.

கமாரகிபே நகரில் விற்பனை முகாமையாளராக பணியாற்றும் ரொஜேரியோ தமஸ்செனா (29 வயது) மேற்படி மணமகன், மணமகளான ரெனேட்டா அலெக்ஸாண்ட்டர் கொஸ்தா கோல்ஹோ (25 வயது) மற்றும் திருமண தோழன் மார்செலோ குயிமராயஸ் ஆகியோரை படுகொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருமண வரவேற்பு நிகழ்வு அமைதியாக நடைபெற்ற வேளை இடம்பெற்ற இந்த விபரீத சம்பவத்தால் திருமணத்துக்கு வந்த விருந்தினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆரம்ப கட்ட விசாரணைகளின் பிரகாரம் திட்டமிட்டே இப்படுகொலைகள் மற்றும் தற்கொலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிய வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையாளர் ஜொவோ பிறிட்டோ தெரிவித்தார்.

மணமகன் தனது தந்தையின் காரில் துப் பாக்கியை மறைத்து வைத்து எடுத்து வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிறிட்டோ, இந்த படுகொலைகள் மற்றும் தற்கொலைக்கான காரணம் என்னவென்பது இதுவரை கண்டறியப்படவில்லை என்று கூறினார்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல