சனி, 25 டிசம்பர், 2010

2000 ஆண்டுகள் பழமையான மருந்து வில்லைகள்

2000 ஆண்டுகள் பழமையான கப்பலொன்றின் சிதைவுகளிலிருந்து தாவர மூலப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்து வில்லைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கிறிஸ்துவுக்கு முன் 130 ஆம் ஆண்டில் இத்தாலியின் துஸ்கனி நகருக்கப்பால் மூழ்கிய ரெலிட்டோ டெல் பொன்ஸினோ என்ற கப்பலிலேயே மேற்படி வில்லைகள் கண்டுபி டிக்கப்பட்டுள்ளன.

இந்தக் கப்பலானது 1989 ஆம் ஆண்டு முதன்தலாக கண்டு பிடிக்கப்பட்டபோதும் அதில் மருத்துவ வில்லைகள் இருப்பது தற்போதே கண்டறியப்பட்டுள்ளது.

கிழக்கு மத்தியதரைக்கடல் பிராந்தியத்தில் பயணம் செய்தவேளை மூழ்கியதாக கருதப்படும் இந்தக் கப்பலிலிருந்து பெறப்பட்ட பொருட்களை ஆய்வுக்குட்படுத்திய அமெரிக்க வாஷிங்டன் நகரிலுள்ள சுமித் ஸோனியா பேணுகை மற்றும் கூர்ப்பு பரம்பரையியல் நிலையத்தைச் சேர்ந்த ரொபேர்ட் பிளேயிஸ்ஸர் இந்த மருந்து வில்லைகளை இனங்கண்டுள்ளார்.

இந்த பண்டைய மருந்து வில்லைகளிலுள்ள உள்ளடக்கமானது நவீன கால நோய்களை குணப்படுத்துவதற்கு உதவுமா என்பதை கண்டறிய தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல