சனி, 25 டிசம்பர், 2010

இரத்தக் கண்ணீர் வடிக்கும் இளைஞன் (படங்கள், காணொளி இணைப்பு)

எப்போதும் கண்களால் இரத்தம் வடிந்து கொண்டிருக்கும் விநோத நோயால் பாதிக்கப்பட்டுள்ள 17 வயது இளைஞனை குணப்படுத்த வழி தெரியாது அமெரிக்க மருத்துவர்கள் திண்டாடி வருகின்றனர்.

அமெரிக்க தென்னஸி மாநிலத்தில் நொக்ஸ்வில்லி எனும் இடத்தில் வசிக்கும் கல்வினோ இன்மான் என்ற இந்த இளைஞனின் கண்களிலிருந்து மட்டுமல்லாமல் மூக்கிலிருந்தும் குருதி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சில சமயங்களில் தொடர்ந்து ஒரு மணித்தியால நேரத்துக்கும் அதிகமாக குருதி வடிவதாக கூறப்படுகிறது.

““எப்போதும் என் கண்களிலிருந்து குருதி வடிந்து கொண்டிருக்கிறது. பாடசாலையில் படித்துக் கொண்டிருக்கும் போதும் வீட்டிலிருக்கும் போதும் உறங்கிக் கொண்டிருக்கும் போதும் என் கண்களிலிருந்து குருதி திடீரென வடிகிறது. எப்போது குருதி வடியப் போகிறது என்பது எனக்குத் தெரியாது. சில சமயங்களில் மட்டுமே குருதி வடியும் போது எரிவு ஏற்படும். பல சமயங்களில் மற்றவர்கள் என்னை விசித்திரமாக பார்க்கும் வரை என் கண்களில் குருதி கசிவதை என்னால் உணர முடிவதில்லை'' என கல்வினோ தெரிவித்தான். குருதி தொடர்ந்து வடிந்த பின் எனது தலையின் இடது பக்கத்தில் எவரோ சுத்தியலால் அடித்தது போன்று கடும் வலி ஏற்படுவதாக கல்வினோ கூறினான்.

இது தொடர்பில் கல்வினோவின் தாயாரான தம்மிமைனத் விபரிக்கையில், “நாங்கள் நியூயோர்க் நகலிருந்து அட்லான்டா வரை 15 மருத்துவ நிபுணர்களிடம் கல்வினோவை காண்பித்தோம். ஆனால் எவராலும் அவனுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து கண்டறிய முடியவில்லை. இந்நிலையில் இந்த மர்ம நோயை குணப்படுத்த வெளிநாட்டு மருத்துவ உதவியை நாடவுள்ளோம்'' என்று கூறினார்.

“எவராவது அவனது நோயை இனங் கண்டு அவனைக் குணப்படுத்த வேண்டும் என கடவுளை பிரார்த்தித்து வருகிறேன்'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் மெம்பிஸ் நகரிலுள்ள ஹமில்டன் கண் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் ஜோன் பிளேமிங் விபரிக்கையில், “சிறுவனுக்கு ஏற்பட்டுள்ள நோயை இனங்காண்பது கடினமாக உள்ள போதும் கண்ணீர் சுரப்பியில் ஏற்பட்டுள்ள கோளாறே இந்த பாதிப்புக்கு காரணமென கருதுகிறேன்'' என்று தெரிவித்தார்.


Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல