சனி, 25 டிசம்பர், 2010

சிறுமியொருவரை தன்வயப்படுத்தி மயக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர்

சிறுமியொருவரை தன்வயப்படுத்தல் கலை மூலம் மயக்கி சுயநினைவிழக்கச் செய்து அவரை 10 வருட காலமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற் றச்சாட்டில் பிரித்தானிய முன்னாள் தொலைக்காட்சி வித்தைக்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானிய தொலைக்காட்சியில் 'மோஸ்ட் ஹன்ட்' நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் தோன்றியதன் மூலம் பிரபலம் பெற்ற மார்ட்டின் ஸ்மித் என்பவரே இவ்வாறு கைது செய்யப் பட்டுள்ளார். குறிப்பிட்ட சிறுமியை அவரது 7 ஆவது வயது முதற்கொண்டு மார்ட்டின் ஸ்மித் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி வந்துள்ளார்.

அவர் அச்சிறுமியை தன்வயப்படுத்தல் கலையை பயன்படுத்தி சுயநினைவிழக்க செய்தே இந்த குற்றச் செயலை புரிந்துள்ளார்.
இந்நிலையில் சந்தேகம் கொண்ட சிறுமி மார்ட்டின் தன்வயப்படுத்தல் கலைக்கு ஆட்பட்டது போன்று நடித்த போதே ஸ்மித் அவரது பாலியல் துஷ்பிரயோக நாடகம் அம்பலத்துக்கு வந்துள்ளது.
லியானி ஸ்மித்

மார்ட்டின் ஸ்மித்தின் வாழ்க்கைத் துணையான லியானி ஸ்மித் அவர்களது இரு குழந்தைகளையும் படுகொலை செய்த குற்றச்சாட்டில் ஸ்பெயினில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விசாரணைகளை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயினிலுள்ள லலோரெட் டி மார் ஹோட்டலில் பிளாஸ்டிக் பையால் மூச்சுத் திணறத்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் மேற்படி தம்பதியின் மகளான ரெபேக்காவும் (5 வயது ) மகனான டானியலும் (11 மாதம்) சடலமாக மீட்கப்பட்டதையடுத்தே லியானி கைது செய்யப்பட்டார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல