இவ்வறிவிப்பு தொடர்பில் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இப்படத்திலிருந்து விஜய் விலகியதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. முக்கியமாக இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. அதில் ஒன்று ஆடை விடயம். இப்படத்தில் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள ஆடை வடிவமைப்பு சுத்தமாக விஜய்க்கு பிடிக்கவில்லையாம்.
அடுத்ததாக விஜயின் தலைமுடி அழகினை மாற்றும்படி இயக்குநர் ஷங்கர் கூறியிருக்கிறார். 'வேலாயுதம்' படப்பிடிப்புகள் நிறைவடையாத நிலையில் அப்படத்திற்காக மாற்றியிருக்கும் தனது 'ஹெயார் ஸ்டைல'ஐ மாற்றும்படி கோருவரு முறையல்ல என்று விஜய் குறிப்பிட்டுள்ளாராம்.
இதனால் இயக்குநர் ஷங்கரும் நடிகர் விஜயும் நண்பர்களாக பிரிவதென்று முடிவுசெய்துள்ளனராம். மறுபடி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் இருவரும் இணையலாம் என்று கூறியிருக்கிறார்களாம். இதனால் மற்றொரு நடிகரை '3 இடியட்ஸ்' படத்திற்காக ஷங்கர் தேடுகிறாராம்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக