சனி, 4 டிசம்பர், 2010

ஒரு நிமிடத்தால் விசாரணையிலிருந்து தப்பிக்கொண்ட நபர் பிரான்ஸில் சம்பவம்

உரிய வயது வருவதற்கு சரியாக ஒரு நிமிடம் இருந்த நிலையில் கைது செய்யப்பட்டதால் காரைத் திருடிய குற்றச்சாட்டு விசாரணைகளிலிருந்து நபரொருவர் தப்பித்துக் கொண்ட சம்பவம் பிரான்ஸில் இடம்பெற்றுள்ளது.

மேற்கு நன்டெஸ் நகரிலுள்ள நீதி மன்றத்தில் மேற்படி நபர் விசாரணைக்காக நிறுத்தப்பட்டார்.

இந்நிலையில் தனது பிறந்த நாளில் கைது செய்யப்பட்ட மேற்படி நபர், தனது சிறுவன் என்ற நிலையிலிருந்து வயது வந்தவர் என்ற நிலையை அடைய ஒரு நிமிடம் இருந்த வேளை கைது செய்யப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.

மேற்படி நபர் இரவு 10.50 மணிக்கு பிறந்த நிலையில் அவரது கைது இரவு 10.49 மணிக்கு இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் பராயமடையாத ஒருவரை சாதாரண நீதிமன்றத்தில் குற்ற விசாரணைகளுக்கு உட்படுத்த முடியாது என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

அவர் காரொன்றை திருடி அனுமதிப்பத்திரமின்றி செலுத்தியமைக்காக இளவயதினருக்கான நீதிமன்றமொன்றில் பதிலளித்தால் போதுமானதாகும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல