சனி, 4 டிசம்பர், 2010

கின்னஸ் சாதனை புத்தகத்தில் சீனாவின் அதிவேக ரெயில்!

மணிக்கு 486 கிலோ மீட்டர் வேகத்தில் இயங் கும் அதிவேக ரெயிலை வடிவமைத்துள்ளது. இந்த ரெயில் வெள்ளோட்டம் நேற்று சீன தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் நகரங்களுக்கு இடையே நேற்று விடப்பட்டது.

1,318 கி.மீட்டர் தூரமுள்ள இந்த தூரத்தை இந்த ரெயில் சுமார் 5 மணி நேரத்தில் சென்றடைந்தது. இந்த ரெயில் வருகிற 2012-ம் ஆண்டு முதல் பயணிகள் பயன்பாட்டிற்கு விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரெயில் ஓடத் தொடங்கும் பட்சத்தில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் வாய்ப்பு உள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் டி.ஜி.வி. அதிவேக ரெயில் மணிக்கு 574 கி.மீட்டர் வேகத்தில் ஓட்டி வெள் ளோட்டம் நிகழ்த்தப்பட்டது.

2005-ம் ஆண்டு ஜப்பானில் மணிக்கு 581 கி.மீட்டர் வேகத்தில் சோதனை ஓட் டம் நிகழ்த்தப்பட்டது. தற்போது சீனாவின் அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் (வெள்ளோட்டம்) நடத்தப்பட்டுள்ளது.

வருகிற 2012-ம் ஆண்டு மக்கள் பயணம் செய்யும் வகையில் ஓட்டப்படும். அதற்காக ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது என சீன அரசு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ரெயிலை 2012-ம் ஆண்டில் 13 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் இயக்கவும், 2020-ம் ஆண்டில் 16 ஆயிரம் கி.மீட்டர் தூரம் இயக்கவும் திட்ட மிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மிகப்பெரிய நகரங்களுக்கு இடையே ஏற்படும் போக்கு நெரில் குறையும் என்றும் கருதப்படுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல