சனி, 4 டிசம்பர், 2010

முகத்தை ஆணி ஊடுருவிய நிலையில் அபூர்வமான முறையில் உயிர் பிழைத்த நபர் (படங்கள் இணைப்பு)

ஆணிகளை அடிப்பதற்கு பயன்படும் விசை உபகரணமொன்றிலிருந்து பாய்ந்த ஆணி முகத்தை ஊடுருவிச் சென்ற நிலையில் நபரொருவர் அதிசயிக்கத்தக்க வகையில் உயிர் தப்பிய சம்பவம் அமெரிக்க கலிபோர்னியா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

கட்டிட நிர்மாண பணியாளரான விக்டர் பெனாவிடெஸ் (28 வயது) என்ற மேற்படி நபரின் உபகரணத்திலிருந்து விசையுடன் வெளியேறிய ஆணி, மூளையை துளைப்பதற்கு ஒரு மில்லிமீற்றர் இடைவெளியில் ஸ்தம்பிதமடைந்து நின்றதாலேயே அவர் உயிர் தப்பியுள்ளார்.
ஆணி விசையுடன் பாய்ந்ததால் அது தனது வாயினூடாக முகத்தை ஊடுருவிச் சென்றதையே விக்டர் பெனாவிடெஸ் ஆரம்பத்தில் உணரவில்லை. வாயிலிருந்து இரத்தம் பெருக்கெடுத்தோடவுமே அவர் சந்தேகம் கொண்டு மருத்துவர்களை அணுகியுள்ளார்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது மூளைக்கு மிக அண்மையில் ஆணி நிலை கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
3 பிள்ளைகளின் தந்தையான விக்டர் பெனாவிடெஸ், வீட்டுக் கூரையொன்றில் திருத்த வேலைகளை மேற்கொண்டிருந்த போது எதிர்பாராத வகையில் கருவியிலிருந்து ஆணி வெளியேறியுள்ளது.
இந்நிலையில் அறுவைச் சிகிச்சை மூலம் விக்டர் பெனாவிடெஸின் முகத்தை ஊடுருவிய ஆணி அகற்றப்பட்டது.
அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட லொஸ் ஏஞ்சல்ஸிலுள்ள செடர்ஸ் சினாய் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் கிம்பர்லி லீ விபரிக்கையில், ஆரம்பத்தில் விக்டர் பெனாவிடெஸ் தற்கொலை செய்யும் முகமாகவே தனக்குத்தானே ஆணியைப் பாய்ச்சிக் கொண்டதாக தாம் நினைத்ததாகவும் ஆணி முகத்தை துளைத்துச் சென்ற வழியிலேயே அதனை வெளியேற்றியதாகவும் கூறினார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல