சனி, 4 டிசம்பர், 2010

மாதவிலக்கின் போது சிவப்பு வளையல்களை அணிய அறிவுறுத்தல்

நோர்வேயில் அலுவலகங்களில் பணி யாற்றும் பெண்கள் தமது மாதவிலக்கு காலத்தில் சிவப்பு வளையல்களை அணிவதற்கு கோரப்பட்டுள்ளது.

மாதவிலக்கு காலத்தில் பெண்கள் அடிக்கடி மலசலகூடத்தை உபயோகிக்க நேரிடும் போது அது தொடர்பில் அவர்களை மற்றவர்கள் கேள்வி கேட்காமல் இருப்பதற்கு இந்த சிவப்பு வளையல்களை அணியும் நடைமுறை உதவும் என கூறப்படுகிறது.

ஈரான் கால்பந்து வீரரின் மனைவியை கொலை செய்த கள்ளக்காதலி தூக்கில் போடப்பட்டார்

ஈரான் நாட்டு கால்பந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் நாசர் முகமது கனி. இவரது மனைவி லாலே சகார்கிசான். இவரை கால்பந்து வீரரின் தற்காலிக மனைவி என்று கூறப்படும் ஷக்லா ஜாஹெத், மனைவியான லாலேயை கத்தியால் குத்தி கொலை செய்தார். இது தொடர்பாக கடந்த 2002-ம் ஆண்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. 2004-ம் ஆண்டு அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் அப்பீல் கோர்ட்டில் அப்பீல் செய்தார். இந்த அப்பீல் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

ஈரான் நாட்டில் திருமணத்துக்கு வெளியே ஆண்கள் பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ளும் போது அவர்கள் அதை சட்டப் பூர்வமாக மாற்றுவதற்காக காண்டிராக்ட் செய்து கொள்வது வழக்கம். காண்டிராக்ட் காலம் 4 மணி நேரமாகவும் இருக்கலாம், 4 ஆண்டுகளாகவும் இருக்கலாம்.

அப்பீல் கோர்ட்டு அவரது அப்பீல் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டதால் 40 வயதான ஷக்லா கடந்த புதன்கிழமை தூக்கில் போடப்பட்டார். ஷக்லா தூக்கில் போடப்பட்ட நிகழ்ச்சியின் போது கால்பந்து வீரர் முகமதுகனி கலந்து கொண்டார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல