சனி, 4 டிசம்பர், 2010

தாய்லாந்தில் ஒரு பெண்ணுடன் 2 பாகிஸ்தானியர்கள் கைது

தாய்லாந்து நாட்டில் அல் கொய்தாவுடன் தொடர்பு கொண்டிருந்த தீவிரவாதிகளுக்காக போலி பாஸ்போர்ட்டு தயாரித்து கொடுத்த 2 பாகிஸ்தானியர்களையும் ஒரு தாய்லாந்து பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.

முகமது அத்தார் பட், ஜீஷன் ஏசான் பட் என்பது கைதான பாகிஸ்தானியர்களின் பெயர்கள் ஆகும்.

2008-ம் ஆண்டு மும்பை தாக்குதல், 2004-ம் ஆண்டு மேட்ரிட் ரெயில் தாக்குதல் ஆகியவற்றில் தொடர்புடைய தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக சர்வதேச அளவில் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாகத்தான் தாய்லாந்து நாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கைதான இந்த 3 பேரும் லஸ்கர் இ தொய்பாவுடன் தொடர்பு உடையவர்கள் ஆவார்கள். இவர்கள் மேலும் பல தீவிரவாதிகளுடன் சேர்ந்து ஸ்பெயினிலும் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலும் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறார்கள்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல