சனி, 4 டிசம்பர், 2010

இவர் அவர்தானா?

மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் மிகவும் சுவாரஷ்யமான ஒரு வழக்கு நேற்று முன் தினம் விசாரணைக்கு எடுத்தக்கொள்ளப்பட்டது.

தன்னை ஆண் எனக்கூறும் பெண் ஒருவரின் உண்மையான நிலை பற்றி அறியும் விவாதமாகவே அது அமைந்திருந்தது.

சம்பவம் இதுதான், இரண்டு குழந்தைகளின் தாய் ஒருவர் தன்னை ஆண் எனக்கூறி யுவதி ஒருவரை திருமுணம் செய்துகொண்டுள்ளார்.

அவர் இராணுவத்தில் பணியாற்றுவதாகவும் கூறியுள்ளார்.

திக்வெல்ல, அழுத்கொடை நிரோசா பிரியங்கா என்ற பெண் (வயது 32) வனிகசிங்க சாரங்க குமார என்ற போலியான ஆணினது பெயரில் மாத்தறை தெவிநுவரை என்ற இடத்தைச் சேர்ந்த 23 வயது யுவதி ஒருவரை திருமணம் செய்தாக பொலீஸார் வழக்குத்தாக்கல் செய்துள்ளனர்.

ஆணாக நடிப்பவர் ஒரு பெண் என பொலிஸார் உறுதியாகக் கூறுகின்றனர்.

முறைப்பாட்டை விசாரித்த நீதவான் உதேஷ் ரணதுங்க மாத்தறை மாவட்ட சட்ட வைத்திய அதிகாரியின் தகவலுக்கு அமையவே தீர்ப்பு வழங்கமுடியும் எனத் தெரிவித்துள்ளார்.

அதனால் சம்பந்தப்பட்டவரைப் பரிசோதித்து அவர் ஆணா? பெண்ணா? என்பதை மன்றுக்கு அறியத்தரும்படி சட்ட வைத்திய நிபுணருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

அதுவரை சந்தேக நபர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல