ஞாயிறு, 12 டிசம்பர், 2010

அவசர போலீசுக்கு போன் செய்த பூனை

இங்கிலாந்தில் வேல்ஸ் நகரில் உள்ள ஓய்வு பெற்ற பேராசிரியர் ஹோவர்டு மோஸ் வீட்டுக்கு நள்ளிரவு நேரத்தில் போலீசார் விரைந்து வந்து கதவை தட்டினார்கள். தூக்க கலக்கத்தில் இருந்த அவர், வீட்டு முன்பு போலீசார் நிற்பது தெரியாமல் குழப்பத்துடன் விசாரித்தார்.

அப்போது, அவருடைய வீட்டில் இருந்து அவசர போலீஸ் உதவி எண்.999-க்கு போன் வந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆனால், `நீண்ட நேரமாக உறங்கிக்கொண்டிருப்பதாக' மோஸ் கூறினார்.

உடனே, வீட்டுக்குள் சென்று போலீசார் சோதனை செய்தபோது மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஏனெனில், தொலைபேசி இருந்த மேஜை மீது ஹோவர்டு மோசின் செல்லப்பூனை நன்றாக தூங்கிக் கொண்டிருந்தது. அதன் கால் பகுதியை தொலைபேசியின் எண்கள் உள்ள பகுதியில் வைத்திருந்தது. தொலைபேசி ரிசீவர் பகுதி விலகி கிடந்தது.

அதன் பிறகு தான், தூக்கத்திலேயே அவசர போலீசுக்கு அந்த பூனை போன் செய்தது தெரியவந்தது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல