புதன், 15 டிசம்பர், 2010

பஸ் நிலையத்தில் மோதல் மூவர் மீது வாள் வெட்டு!

யாழ்.மத்திய பஸ் தரிப்பு நிலையத்துக்கு அருகில் நேற்று இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் மூவர் வாள் வெட்டுக்கு உள் ளாகிச் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வாகன முகவர் ஒருவருக்கும் செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவருக்கும் இடையில் நேற்று மாலை 3.00 மணியளவில் வாய்த் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.பின்னர் வேறு மூன்று நபர்கள் சென்று அத்தொழிலாளியைத் தாக்கியுள்ளனர். தரகர்தான் இதனைச் செய்தாரென முடிபு செய்த தொழிலாளி வாள் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து தரகரை வெட்டியுள்ளார்.

தரகரும் இன்னொரு வாளை எடுத்து தொழிலாளியை வெட்டியுள்ளார்.இருவரும் வாள்களால் வெட்டுப்பட்டுக் கொண்டிருந்த போது குறுக்கே வந்த பெண்ணொருவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் தொழிலாளி அச்சுவேலி செல்கின்ற சிற்றூர்தியில் ஏறிச் சென்றார்.பயணிகள் இரத்தக் காயங்களோடு கூடிய இவரின் தோற்றத்தைக் கண்டு பீதியடைந்து குளறினர்.

பொலிஸார் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்தனர். மூவரையும் கைது செய்து வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். இச்சம்பவத்தில் வாகனப் போக்குவரத்துத் தரகரான மட்டுவிலைச் சேர்ந்த பாண்டியன் செல்வராசா (வயது 57) மற்றும் சுழிபுரத்தைச் சேர்ந்த தொழிலாளியான இராஜேந்திரன் (வயது 40) ஆகிய இருவர் உட்பட மூவரே காயமடைந்தவர்களாவர்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல