இதனையடுத்து இவர்களுக் கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை கொலை செய்வதற்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டமிடுவதாக இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று மாலை எச்சரிக்கை விடுத்த தாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள் ளன.
ஏறத்தாழ அழித்தொழிக்கப்பட்டுவிட்ட விடுதலைப் புலிகள் மீண்டும் ஒன்றிணைவதற்கு முயற்சிப்பதுடன் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி ஆகியோரை இலக்கு வைத்து பாரிய தாக்குதல்களைத் தொடுப்பதற்கும் திட்டமிடுவதாக அச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணாநிதியைச் சந்திக்கின்றமைக்காக அடுத்த மாதம் தமிழ்நாட்டுக்குச் செல்ல மன் மோகன் சிங் உத்தேசித்து உள்ளார். இவருடன் சிதம்பரமும் கூடச் செல்லவிருக்கின்றார்.
இச் சந்திப்பின் போதே மூவரையும் கொல்கின்றமைக்கு புலிகள் திட்டம் தீட்டியுள்ளனர் என்று இத்தகவல்கள் கசிந்துள்ளன. மன்மோகன் சிங், கருணாநிதி, சிதம்பரம் ஆகியோரைக் கொல்லப்படவேண்டியவர்கள் பட்டியலில் புலிகள் வைத்திருக்கின்றனர் என்றும் மூவரையும் கொல்கின்றமைக்காக சில புலிப் பிரமுகர்கள் தென்கடல் ஊடாக வந்து தமிழ்நாட்டில் மறைந்து வாழ்கின்றனர் என்றும் அதில் தெரிவிக்கப்படுகின்றது.
யுத்தத்தின்போது தப்பிச் சென்ற விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்கள் சிலர் இந்தியாவில் மீளிணைவதற்கும் முக்கிய அரசியல் தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு விஜயம் செய்யும்போது அவர்களைக் கொலை செய்வதற்கும் முயற்சிப்பதாகவும் புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளனவாம்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, 1991 ஆம் ஆண்டில் தமிழகத்தில் விடு தலைப் புலிகளின் தற்கொலைப் படையின ரால் கொலை செய்யப்பட்ட நிலையில் இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் இத்தகவல்களைத் தீவிரமாகக் கருத்திற் கொண்டுள்ளனர். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த மாதம் தமிழ்நாட்டிற்கு விஜயம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழ்நாடு பொலிஸ்மா அதிபர் லத்திகா சரணுக்கு புலனாய்வுப் பிரிவினர் தக வல் அனுப்பியுள்ளனர்.இத்தகவலையடுத்து இந்திய அரசியல் வட்டாரங்களில் பெரும்பர பரப்பு ஏற்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக