புதன், 15 டிசம்பர், 2010

பிரான்ஸில் எட்டு இலங்கையர்கள் கைது.!

பிரான்ஸ் நாட்டுக்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிக்க முயன்ற குற்றச்சாட்டின் பேரில் எட்டு இலங்கையர்கள் கடந்த 10 ஆம் திகதி துறைமுகத்துக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ஈரானிய பிரஜை ஒருவர் தலைமையில் மூன்று பேர் கொண்ட ஆட்கடத்தல்காரர்கள் குழு ஒன்று இவர்களை அழைத்து வந்திருந்தது.

இக்குழுவினரின் வாகனத்துக்குள் ஒளிந்து இருந்தபோது இவர்களை கண்டு பிடிக்கப்பட்டனர். ஆட்கடத்தல்காரர்களும் கைது செய்யப்பட்டு உள்ளார்கள்.

ஆட்கடத்தல்காரர்கள் நேற்று Caen நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டனர். ஆட்கடத்தல் குழு தலைவருக்கு நீதிமன்றம் இரு வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல