புதன், 15 டிசம்பர், 2010

கனடாவில் கொலைக் குற்றச்சாட்டில் இலங்கைத் தமிழ் இளைஞன் கைது!

கனடாவின் தலைநகர் ரொரன்ரோவை உலுப்பி கொண்டு இருக்கும் பல்கலைக்கழக மாணவன் வின்செண்ட் டாங் (வயது-20) படுகொலையின் பிரதான சூத்திரதாரி என்று நம்பப்படும் இலங்கைத் தமிழரான நவீன் அரசரத்தினம் (வயது-27) நேற்று மாலை Pearson விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு உள்ளார்.

இலங்கையில் இருந்து புறப்பட்டு விமானத்தில் வந்திருந்த இவரை ரொரன்ரோ பொலிஸார் பிடித்து விட்டனர். York பல்கலைக்கழக மாணவன் வின்செண்ட் டாங் ஐ கடந்த மாதம் நவம்பர் 27ஆம் திகதி வாகனம் ஒன்றால் இடித்துக் கொன்றார் என்பது இவருக்கு எதிரான குற்றச்சாட்டு.

வின்செண்ட் டாங் வைத்தியசாலையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து இருந்தார். படுகொலைக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நவீன் அரசரட்ணம் இன்று நீதிமன்றில் ஆஜராக்கப்படுகின்றார். ரொரன்ரோவில் இவ்வருடம் இடம்பெற்ற 57 ஆவது படுகொலை இது ஆகும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல