புதன், 15 டிசம்பர், 2010

ஜெகத் கஸ்பரின் தமிழ் மையம்" அலுவலகத்தில் சிபிஐ சோதனை

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ் மையம் அலுவலகத்தில் இன்று சிபிஐ போலீஸார் சோதனை நடத்தினர்.

பாதிரியார் ஜெகத் கஸ்பர் தலைமையில் செயல்படும் தமிழ் மையம் அமைப்பில் திமுக எம்.பி. கனிமொழியும் அதன் நிர்வாகக் குழுவில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சிபிஐ சோதனை குறித்து கருத்து கூற கனிமொழி மறுத்துவிட்டார்.

தமிழ் மையம் ஓர் தொண்டு நிறுவனமாக பதிவு செய்யப்பட்ட அமைப்பு.

ஆண்டுதோறும் தை மாதத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இந்த அமைப்பு "சென்னை சங்கமம்" என்ற பெயரில் கலாசார நிகழ்ச்சிகளை நடத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தில்லியில் இருந்து வந்துள்ள சிபிஐ அதிகாரிகள் இந்த சோதனை மேற்கொண்டதாக பிடிஐ தகவல்கள் கூறுகின்றன.

ஸ்பெக்ட்ரம்' முறைகேடு தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள், தமிழகத்தில் நேற்று 27 இடங்களில் சோதனை நடத்தினர். இதில், முதல்வர் குடும்பத்துக்கு நெருக்கமானவர்களும் தப்பவில்லை. சென்னை, நெல்லை, பெரம்பலூர் உட்பட பல்வேறு இடங்களில் நடந்த சோதனையில், ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளன.

சென்னையில், முதல்வர் குடும்பத்திற்கு நெருக்கமான ஜெகத் கஸ்பரின், மயிலாப்பூரில் உள்ள, "தமிழ் மையம்' அலுவலகத்தில் சோதனை நடந்தது. ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடந்தது. காலை 7 மணி முதல் இந்த சோதனை நடத்தப்பட்டது. பத்துக்கும் மேற்பட்ட சி.பி.ஐ., அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். "தமிழ் மையத்தில்' முதல்வரின் மகள் கனிமொழி இயக்குனராக உள்ளார். "சென்னை சங்கமம்' "சென்னை மாரத்தான்' போன்ற நிகழ்ச்சிகளை,"தமிழ் மையம்' நடத்தி வருகிறது.

சோதனையின்போது, சி.பி.ஐ., அதிகாரிகள், ஜெகத் கஸ்பரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். "நக்கீரன்' இணை ஆசிரியர் காமராஜின் வீடு, பெசன்ட் நகர் சாஸ்திரி நகரில் உள்ளது. இவரது வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று காலை 7 மணி முதல் முகாமிட்டு, சோதனை நடத்தினர். வீட்டில் ஒவ்வொரு அறையாக சோதனை நடந்தது.மெத்தைகள், சோபாவையும் துருவித்துருவி அதனுள் ஏதேனும் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா எனவும் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி சோதனை நடத்தினர். பல்வேறு கேள்விகளுக்கு காமராஜ், அவரது மனைவி ஜெயசுதாவும் பதில் அளித்தனர். சோதனை முடிந்ததும் காமராஜை, அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

நக்கீரன்' கோபால் மறுப்பு : "நக்கீரன்' இணை ஆசிரியர் காமராஜ் வீட்டில் நடந்த சி.பி.ஐ., சோதனை குறித்து, அதன் ஆசிரியர் கோபால் வெளியிட்ட அறிக்கை:காமராஜ் வீட்டில் காலை முதல் சி.பி.ஐ., நடத்திய சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. இந்த சோதனையின்போது, ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளில், ராஜா குடும்பத்தின் ஒரு நிறுவனத்தில் காமராஜ் இயக்குனராக இருக்கிறார் என்றும், அவரது மனைவி, நிரா ராடியாவின் சென்னை அலுவலகத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார் என்றும் வெளியிடப்பட்ட தகவல்கள் முற்றிலும் தவறு. காமராஜுக்கோ, அவரது குடும்பத்தினருக்கோ, இந்த விவகாரத்திலோ, நிறுவனங்களிலோ எந்தவித தொடர்பும் கிடையாது.இவ்வாறு, "நக்கீரன்' கோபால் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சி.பி.ஐ., சோதனை நடந்த இடங்கள் விவரம்:

1. நிரா ராடியாவின், "வைஷ்ணவி கம்யூனிகேஷன்' சென்னை அலுவலகம்.
2. "டிராய்' முன்னாள் தலைவர் பிரதீப் பைஜாலின் சென்னை வீடு.
3. "தமிழ் மையம்' அமைப்பாளர் ஜெகத் கஸ்பர் அலுவலகம்.
4. வார இதழ் இணை ஆசிரியர் காமராஜின் சென்னை வீடு.
5. பல்கலை பேராசிரியர் அகிலன் ராமநாதனின் வீடு.
6. திருச்சியை சேர்ந்த, "டிவி' நிருபர் நரசிம்மன் வீடு.
7. திருச்சி திருவானைக்காவலில் உள்ள ராஜாவின் அண்ணன் ராமச்சந்திரன் வீடு.
8. திருச்சியில் உள்ள ராஜாவின் சகோதரி சரோஜா வீடு.
9. பெரம்பலூரில் உள்ள ராஜா வீடு.
10. பெரம்பலூரில் உள்ள ராஜாவின் நண்பர் சுப்பிரமணி வீடு.
11. ராஜாவின் ஆடிட்டர் கணபதி சுப்ரமணியன் சென்னை வீடு.
12. முதல்வர் கருணாநிதியின் துணைவி, ராஜாத்தி மற்றும் கனிமொழியின் ஆடிட்டர் ரத்தினம் வீடு. இவை உட்பட தமிழகத்தில் 27 இடங்களில், சி.பி.ஐ., சோதனை நடந்துள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல