புதன், 15 டிசம்பர், 2010

ஆர்தர் சி. கிளார்க் பிறந்த நாள்

பிரித்தானிய அறிவியல் புதின எழுத்தாளரும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். ஏறத்தாழ 100 புத்தகங்களுக்கு ஆசிரியரான ஆர்தர் சி. கிளார்க், அறிவியல் பூர்வமான ஆதாரத்தையும் கோட்பாட்டையுமே தமது எழுத்துத்துறைக்கு அதிகளவுக்கு பயன்படுத்தினார்.

நம் உலகத்தின் எல்லைகளுக்கு அப்பாலும் மனிதரின் தலைவிதி பரந்துள்ளது என்ற கருத்தை வலுவாக முன்னிறுத்தினார். இவரது இந்த தொலைநோக்குக்கு, 2001: ஸ்பேஸ் ஒடிசி என்ற புதினமும் 1968 இல் அதே பெயரில் ஸ்டான்லி கூப்ரிக் இயக்கி இவரால் தயாரிக்கப்பட்ட திரைப்படமும் அவர் செய்த மிக தெள்ளத் தெளிவான சேவைகளாகும்.

கிளார்க் இங்கிலாந்தில் சொமர்செட் என்ற இடத்தில் டிசம்பர் 16, 1917 இல் பிறந்தார். அவரது தந்தை ஒரு உழவர். தாய் அஞ்சல் நிலையத்தில் தந்தி அனுப்புனர். நான்கு குழந்தைகளில் மூத்தவரான இவர் அருகில் உள்ள டாண்டன் (Taunton) நகர உயர்நிலைப்பள்ளியில் புலமைப்பரிசில் (scholarship - கல்விதிறமை பரிசில்) மாணவனாக கல்வி பயின்றார். தான் பிள்ளைப் பருவத்தில் சோமர்செட் கடற்கரையோரம் நடக்கையில் தனது அறிவியல் கற்பனைகளை விழித்தெழச் செய்த பல நிகழ்ச்சிகளை நினைவு கூர்வார். அவற்றில் ஒரு சில, தன் தந்தை ஒரு முறை ஒரு டைனாசர் படம் உள்ள ஒரு சீட்டுக்கட்டு கொடுத்தது, கட்டுமானம் செய்யும் விளையாட்டுப் பொருட்களை அன்பளிப்பாகப் பெற்றது போன்றன. சிறு வயதிலேயே வானியலில் ஈடுபாடு கொண்ட ஆர்தர் பழைய அமெரிக்க அறிவியல் புதின நூல்களை படிப்பது வழக்கம். ஆரம்பக் கல்வியை முடித்துக் கொண்டவர் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் படிக்க அவரது குடும்ப வருவாய் போதாமையினால், கல்வித்திணக்களத்தில் பணியாற்றினார்.

இரண்டாம் உலகப் போரின் போது ரோயல் வான்படையில் இணைந்து ராடார் பாதுகாப்புத் திட்டத்தில் பணியாற்றினார். போர் முடிவின் பின்னர் அவர் லண்டன் அரச கல்லூரியில் கணிதம் மற்றும் இயற்பியலில் பட்டம் பெற்றார்.

1937 தொடக்கம் 1945 வரையான காலப்பக்குதியில் சில புதினங்களை கிளார்க் எழுதியிருந்தாலும் 1946 ஆம் ஆண்டில் அவர் எழுதிய Astounding Science Fiction முதன் முதலில் விற்பனைக்கு வந்தது. கிளார்க் Science Abstracts (1949) என்ற இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். 1951 இலிருந்து முழுநேர எழுத்தாளரானார்.

1953 இல் கிளார்க் மரிலின் மேஃபீல்ட் என்ற பெண்ணை மணம் புரிந்தார். மணம் புரிந்து ஆறு மாதங்களில் அவர்கள் பிரிந்தனர். ஆனாலும் 1964 ஆம் ஆண்டிலேயே அவர்கள் அதிகாரபூர்வமாகப் பிரிந்தனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல