ஞாயிறு, 23 ஜனவரி, 2011

முட்டை நீள்வட்டமாக இருப்பதற்கு என்ன காரணம்?

முட்டை முதலில் தோன்றியதா, கோழி முதலில் தோன்றியதா என்றொரு விவாதம் ரொம்ப நாளாக நடந்து கொண்டிருக்கிறது. கோழிதான் முதலில் வந்தது என்று நிரூபித்துவிட்டார்கள். பறவை முட்டைகளின் வடிவம் ஏன் கோளமாக இல்லாம் நீள்வட்டமாக இருக்கிறது? இதுபற்றி எப்பொழுதாவது யோசித்திருப்பீர்களா?

நீள்வட்ட வடிவமாக இருந்தால் தான் ஒரு கூட்டில் இருக்கும் போது குறைந்த இடைவெளியில் முட்டை வசதியாக இருக்க முடிகிறது. கூட்டில் நெருக்கடி ஏற்படுவதில்லை.

மேலும் இந்த வடிவம் காரணமாக வெப்ப இழப்பும் அதிகம் ஏற்படுவதில்லை. ஏனென்றால், முட்டை சரியாகப் பொரிந்து குஞ்சு வெளியே வர வெப்ப அளவு மிக முக்கியம். அப்பொழுதுதானே குறிப்பிட்ட காலத்துக்குப் பின் முட்டை பொரிந்து குஞ்சு வெளியே வரும்.

நீள்வட்ட முட்டைகள் உருள நேரிட்டால் அவை வட்டமான பாதையிலேயே உருளும். இதன் காரணமாக முட்டை கூட்டுக்கு வெளியே உருண்டு விழுவதற்கான வாய்ப்பு குறைந்து போகிறது. இருப்பதிலேயே உறுதியான வடிவம் கோளம் தான்.

ஆனால் கோள வடிவ முட்டைகள் அதுவும் மலைமுகடுகளில் முட்டையிடும் பறவைகளின் முட்டைகள் கோள வடிவில் இருந்துவிட்டால் என்ன ஆகும்? அவை கீழே விழுந்து உடைந்துவிடும். பறவை சந்ததி பெருகாது.

இதன் காரணமாகவே மலை முகடுகளில் முட்டையிடும் பறவைகளின் முட்டைகள் கோள வடிவில் இருந்து சற்று மாறுபட்டு இருக்கின்றன. இவை உருளும் போது, அரைவட்ட வடிவில் உருளுகின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள் முட்டையின் வடிவத்துக்குள் இவ்வளவு விடயங்கள் இருக்கின்றது என்ன!
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல