ஞாயிறு, 23 ஜனவரி, 2011

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தாக்கல்

இனப்படுகொலைக்கு எதிராக தமிழர்களின் அமைப்பு (Tamils Against Genocide) ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குப் பதிவு செய்யப்போவதாக நேற்று அறிவித்துள்ளது. இவ்வழக்கு குற்றவியல் வழக்காக அல்லாமல் சிவில் வழக்காக அமையும் என இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்களின் அமைப்பு தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களான மூன்று மனுதாரர்கள் இவ்வழக்கை பதிவு செய்யவுள்ளனர். அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில்,

பத்து நாட்கள் அமெரிக்காவில் தங்கவுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைக் கைது செய்யக்கோரி உலகெங்குமுள்ள தமிழர்கள் அமெரிக்கத் தூதுவராலயம் முன் வெகுஜன நடவடிக்கைகளை எடுக்குமாறும் இவ்வறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் அமெரிக்கா வாழ்தமிழர்கள் இத்தகைய வெகுஜன நடவடிக்கை ஒன்றை இன்று ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல