அமெரிக்கத் தகவல் நிலையம் இன்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த நிலையத்தை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புட்டினிஸ் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கவுள்ளார்.
யாழ்ப்பாணம் நான்காம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள இந்த நிலையத்தில் அமெரிக்காவின் புவியியல் வரலாறு அதன் முன்னேற்றம் உட்பட பல விடயங்கள் குறித்த விபரங்களைப் பெறமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர பல்வேறு அரிய நூல்கள் மற்றும் சஞ்சிகைகள் போன்றவற்றை பொதுமக்கள் இலகுவாகப் பெறமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அமெரிக்கத் தகவல் நிலையத்தின் சேவையைப் பெறுபவர்களுக்கு நவீன இணையத்தள வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக