இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இலங்கை கடற்படை இல்லையா? என இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில், மீனவர்களுக்கு அநீதி இழைக்கப்படும் இதுபோன்ற நேரத்தில் மத்திய அரசுக்கு முதலமைச்சர் கருணாநிதி கண்டனம் தெரிவிப்பதும் மத்திய அரசு, இலங்கை தூதரை அழைத்துப் பேசுவதும், அதற்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் விளக்கம் அளிப்பதும் என எத்தனையோ நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இத்தனை நடவடிக்கைகளுக்குப் பிறகும் நேற்றிமுன்தினம் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கொடூரமான முறையில் கொல்கிறார்கள் என்று சொன்னால், இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இலங்கை கடற்படை இல்லையா? என்ற கேள்விதான் எழுகிறது.
இந்திய தென் பிராந்தியத்தின் கடற்படை தளபதி இநதிய முதலமைச்சரை சந்தித்த போது தமிழக மீனவர்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கை பற்றி விவாதித்துள்ளார்.
அப்படியிருந்தும் ஒரு சில நாட்களிலேயே இந்த சம்பவம் நடந்திருக்கிறது என்று சொன்னால் மத்திய, மாநில அரசுகள் எத்தனை நாட்களுக்குத்தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க போகிறார்கள்?
இந்த சம்பவங்களுக்குப் பிறகாவது மத்திய அரசு, இலங்கை அரசை எச்சரித்து இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக