புதன், 26 ஜனவரி, 2011

எடிசனின் ராஜதந்திரம்

தோமஸ் அல்வா எடிசன் புகழ் பெற்ற விஞ்ஞானி. ஆனால் அவர் சிறந்த வணிகர் என்பது பலருக்கும் தெரியாது, வணிகரான எடிசன் செய்த சில ராஜதந்திரம் சிரிப்பை வரவழைப்பவை. எடிசன் மின்சாரத்தை மேம்படுத்தி டிசி (Direct Current) என்ற வகை மின்சாரத்தை உருவாக்கி அதை சந்தைப்படுத்த முயன்று கொண்டிருந்தார்.

எடிசனுக்கு போட்டியாக வெஸ்டிங்ஹவுஸ் என்ற விஞ்ஞானி மின்சாரத்தை உருவாக்கினர். தனது சோதனை கூடத்தில் இருவகை மின்சாத்தையும் சோதித்த எடிசனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வெஸ்டிங்ஹவுசின் மின்சாரம் எடிசனின் மின்சாரத்தைவிட சக்தி வாய்ந்தது என்பதே முடிவு. அந்த மின்சாரத்துக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த அதையே பயன்படுத்த முடிவு செய்தார் எடிசன்.

பத்திரிகையாளரை கூப்பிட்டு அவர்கள் முன் ஒரு இரும்பு நாற்காலியை போட்டார் எடிசன். அதில் ஒரு பூனையை உட்கார வைத்து கட்டினார். அப்புறம் அந்த நாற்காயில் தனது டிசி மின்சாரத்தை பாய்ச்சினார்.

பூனை 10 – 20 நிமிடம் துடிதுடித்து செத்தது.அப்புறம் மீண்டும் ஒரு பூனையை உட்கார வைத்து வெஸ்டிங்ஹவுஸின் ஏசி மின்சாரத்தை பாய்ச்சினார். பூனை இரண்டு வினாடிகளில் செத்துவிட்டது. பார்த்தீர்களா? எனது மின்சாரம் பட்டால் உடனடியாக சாக மாட்டார்கள் பிழைத்துவிடுவார்கள்.

ஆனால் வெஸ்டிங் ஹவுஸின் மின்சாரம் உடலில் பட்டால் உடனடி மரணம்தான். எனவே எனது மின்சாரமே பாதுகாப்பானது என பிரசாரம் செய்தார் எடிசன். செய்தி காட்டுத்தீ போல் பரவியது.

எடிசனின் மூளையில் இன்னொரு யோசனை வந்தது. அப்போதெல்லாம் மோசமான குற்றவாளிகள் தலை வெட்டி கொலைசெய்யப்பட்டனர். அதற்கு பதில், தான் தயாரித்த மின்சார நாற்காலியில் வெஸ்டிங்ஹவுசின் மின்சாரத்தை ஏற்றி அவர்களை கொல்லலாம் என யோசனை கொடுத்தார் எடிசன்.

அதற்கேற்றாற்போல் மின்சார நாற்காலிகளை தயாரித்து அரசிடம் விற்றும் விட்டார். இதனால் வெஸ்டிங்ஹவுசின் ஏசி மின்சாரத்துக்கு அப்போதெல்லாம் பயங்கர கெட்ட பெயர் உண்டாகிவிட்டது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல