புதன், 26 ஜனவரி, 2011

கனவை தடுக்கும் குறட்டை

கனவு காணாத மனிதர்கள் இருக்க முடியாது. பார்வை குறைபாடு உள்ளவர்க ளுக்கும் கனவுகள் வருகின்றன.

சில மனநல குறைபாடு உள்ளவர்களை தவிர எல்லோருமே கனவு காண்ப தாக விஞ்ஞான ஆராய் ச்சிகள் தெரிவிக்கின்றன. மிருகங்களும் கனவுகள் காண்பதாக கூறப்படுகிறது.

அநேகமானவர்கள் நாளொன்றுக்கு சுமார் நான்கு தொடக்கம் ஏழு கனவுகள் காண்கின்றனர்.

ஒருவர் தூங்கி எழுந்து ஐந்து நிமிடத்திலேயே ஐம்பது சதவிகி தமான கனவுகள் மறந்து போய் விடுமாம். பத்து நிமிடத்தில் சுமார் தொண்ணூறு சதவிகிதமான கனவுகள் மறந்து விடுமாம்.

குறட்டை விடும்போது கனவுகள் வருவதில்லை என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. தூங்குவதற்கு முன் சீஸ் சாப்பிட்டால் கெட்ட கனவுகள் வருவதில்லை எனவும் கூறப்படுகிறது.

எது எவ்வாறாயினும் ‘சீஸ்’ சாப்பிட்டால் நல்ல நித்திரை வரும் எனவும் அந்த தகவல் மேலும் தெரி விக்கிறது. கனவில் வரும் உருவங்கள், சிந்தனைகள் எமக்கு எப்போ தாவது பழக்கமானதாகவே அமைந்திருக்கும். கனவில் புது விடயங்கள் பற்றி வரு வதில்லை என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கனவின் போது நிகழ்காலத்தில் நிகழும் சிலவற்றை உணர முடிகிறது.

உதாரணத்திற்கு நீங்கள் தூங்கும் போது உங்கள் அருகிலிருக்கும் ஒருவர் எதாவது ஒரு இசை க்கருவியை வாசித்து கொண்டிருக்கிறார் என்று வையுங்கள், உங்களது கனவில் நீங்கள் ஒரு இசை நிகழ்ச்சியில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம்.

ஆண்கள் காணும் கனவுகளுக்கு பெண்களது கனவுகளுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருப்பதாக ஆராய்ச்சி முடிவு ஒன்று கூறுகின்றது. அதாவது ஆண்கள் காணும் கனவில் சுமார் எழுபது சதவிகிதம் மற்றைய ஆண்களை பற்றியதாகவே இருக் குமாம், ஆனால் பெண்களது கனவுகள் அரைவாசிக்கு அரைவாசி இரு பாலி னரையும் சார்ந்ததாகவே இருக் குமாம். மற்று மொரு முக்கிய அம்சம், கனவுகள் பெரும்பாலும் குரோதம், பொறாமை, சிக்கல் என்பனவற்றை சார்ந்ததாகவே இருக்குமாம். நல்ல கனவுகள் வருவது குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது. உங்கள் அனுபவம் எப்படி?
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல