புதன், 26 ஜனவரி, 2011

லெனின் உடலை அடக்கம் செய்ய ஆதரவு

ரஷியாவின் மாபெரும் புரட்சி தலைவரான லெனின், கடந்த 1924-ம் ஆண்டு மரணம் அடைந்தார். அவருடைய விருப்பத்துக்கு ஏற்ப மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் அவருடைய உடல் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. தற்போது, சோவியத் யூனியன் உடைந்து ரஷிய நாடாக மாறி விட்டதால் லெனின் உடலை அடக்கம் செய்ய கோரிக்கை வலுவடைந்துள்ளது.

எனவே, லெனின் உடலை அடக்கம் செய்ய வேண்டுமா? என ரஷியாவின் ஆளும் கட்சி சார்பில் இணையதள கருத்து கணிப்பு நடத்தப்பட்டு வருகிறது. `ஆம்' அல்லது `இல்லை' என மட்டுமே பதில் அளிப்பது போன்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இது வரை, 2 லட்சம் மக்கள் லெனின் உடலை அடக்கம் செய்ய ஆதரவு அளித்துள்ளனர். எனினும், இந்த விஷயத்தில் ரஷிய தலைவர்களிடையே இன்னும் விவாதம் நீடிக்கிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல